How to know Symptoms of Scabies psoriasis

Scabies psoriasis
Scabies psoriasis
Spread the love
Listen to this article

What is Scabies psoriasis? சொறி சிரங்கு

Scabies is a highly contagious disease caused by an itchy mite (an eight-legged body mite). These parasites (bugs) are invisible to the naked eye, but they can use the skin as a breeding ground. It makes itself known to humans by severe itching, which is usually worse at night.

Young children and the elderly are also susceptible to this tick infestation. Similarly, hot summer temperatures can trigger the disease. Bacterial infections can worsen the disease, which in turn can cause skin ulcers, heart disease, septicemia (a bacterial infection that enters the blood vessels) and kidney disease.

With proper treatment of the disease, the ticks responsible for the infection are killed and the infection subsides. However, if the disease is not treated, these ticks have the drive to reproduce and worsen the condition.

What are the main effects and symptoms of the disease?

The effects and symptoms of this disease are as follows:

Constant erosion.
Scaly or scaly skin.
Skin lesions.
This infection can develop on the surface of any part of the skin, but the areas most affected by it are:

On the hands, especially around the nails and between the fingers (fingernails).
Armpits, elbows and wrists.
nipple
Where the hips and thighs meet.
The incubation period for these scabies to develop is 8 weeks.

What are the main effects and symptoms of the disease?

The infection caused by these skin ticks is spread from one person to another through direct skin-to-skin contact, sharing bedding, cloths and seats. Similarly, it can also be transmitted from mother to child. Without becoming a parasite, these ticks can survive on their own for 3-4 days.

How is it diagnosed and treated?

The cause of this disease is diagnosed with persistent itching and the growth of scabby nodules around the chest and genital area. The diagnosis is confirmed by examining a sample taken from the skin under a microscope.

Scabies complications can be prevented by using suitable creams, lotions or tablets. The doctor will prescribe lotions and creams to apply on the body below the neck to treat the infection caused by this disease.

Similar treatment is recommended for all the family members of the affected person and the person in sexual contact. If the rash or itching is known to recur after stopping the treatment for this disease, it is necessary to take the treatment for this disease again.

Some of the precautions that can be taken to prevent this disease are as follows:

Use clean mattress pads and clothing.
Washing clothes in water of 50 Celsius and above.

How to know symptoms of Vaginal Cancer?

How to know symptoms of Breast Cancer

How to know symptoms of Lung Cancer?

Scabies psoriasis

சொறி சிரங்கு (ஸ்கேபிஸ்) என்றால் என்ன?

சொறி சிரங்கு என்பது அரிப்பினை உண்டாக்கும் சிற்றுண்ணியின் காரணமாக ஏற்பட்டு (எட்டு கால்கள் உடைய உடல் உண்ணி) அதிகமாக தொற்றினை ஏற்படுத்தக்கூடிய ஒரு தொற்றுநோய் ஆகும்.இந்த ஒட்டுண்ணிகள் (பூச்சிகள்) வெறும்கண்களுக்கு புலப்படாதவை, ஆனால் இது தோலை இனப்பெருக்கம் செய்யும் தளமாக உபயோப்படுத்திக்கொள்ள வல்லது.

இந்த ஒட்டுண்ணிகள் தோலுக்கு அடியில் முட்டைகளை இடுகிறது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் கடுமையான அரிப்பின் மூலம் அதை மனிதருக்கு உணர்த்துகிறது, இந்த அரிப்பு பொதுவாக இரவு நேரங்களில் அதிகமாக இருக்கும்.சிறு வயது குழந்தைகள் மற்றும் முதியோரும் இந்த உண்ணி தொற்றுக்கு எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்கள்.

இதேபோல், வெப்பமான தட்ப வெப்பநிலையும் இந்நோய் ஏற்படுவதற்கான காரணிகளை தூண்டலாம்.பாக்டீரியா தொற்றுநோய் ஏற்பட்டால் இந்நோய் மேலும் மோசமடையும், இதையொட்டி தோல் புண்கள், இதய நோய், செப்டிசெமியா (இரத்தக் குழாய்களில் நுழையும் பாக்டீரியா தொற்று) மற்றும் சிறுநீரக நோய் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

இந்நோய்க்கு அளிக்கப்படும் தகுந்த சிகிச்சையுடன், தொற்றுக்கு காரணமான உண்ணிகள் அழிந்து, மேலும் இந்த தொற்றுநோய் ஏற்படாமல் மறைந்து விடுகின்றன.எனினும், இந்நோய்க்கு சிகிச்சையளிக்கப்படாத நிலையில், இந்த உண்ணிகள் மீண்டும் இனப்பெருக்கம் செய்வதற்கான உந்துதலை ஏற்படுத்தி மேலும் இந்நிலைமையை மோசமடைய செய்கின்றன.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இந்நோயின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

தொடர்ந்து அரித்தல்.

வேனற்கட்டி அல்லது செதில் போன்ற தோல்.

தோல் புண்கள்.

இந்த தொற்று சருமத்தின் எந்த பகுதியின் மேற்பரப்பிலும் வளரலாம்.எனினும் இதனால் அதிகமாக பாதிக்கப்படும் பகுதிகள்  பின்வருமாறு:

கைகளில், குறிப்பாக நகங்களை சுற்றி மற்றும் விரல்களுக்கு இடையில் (விரல் தோலிழைமம்).

அக்குள், முழங்கைகள் மற்றும் மணிகட்டு.

முலைக்காம்பு.

இடுப்பும் தொடையும் சேருமிடம்.

இந்த சிரங்குகள் உருவாக அடைகாக்கும் காலம் 8 வாரங்கள் ஆகும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் வாரங்கள் அறிகுறிகள் யாவை?

இந்த சரும உண்ணிகளால் ஏற்படும் தொற்றானது ஒருவரின் சருமத்துடன் நேரடி தொடர்பு , படுக்கை,துணிகள் மற்றும் இருக்கைகளை பகிர்தல் போன்றவற்றால் ஒரு நபரிடமிருந்து மற்றவருக்கு பரப்பப்படுகிறது.இதே போல் தாயிடமிருந்து சேய்க்கும் கூட பரவலாம்.ஒருவரது உடலில் ஒட்டுண்ணியாக இல்லாமலே, இந்த உண்ணிகள் தனியாகவே 3-4 நாட்கள் உயிர்வாழக்கூடியது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

தொடர்ந்து ஏற்படும் அரிப்பு மற்றும்  மார்பு மற்றும் பிறப்புறுப்பு பகுதியை சுற்றி ஏற்படும் சிரங்கு வேர்முடிச்சுகளின் வளர்ச்சி போன்றவற்றை கொண்டு இந்நோய் ஏற்படுவதற்கான காரணம் கண்டறியப்படுகிறது.தோலில் இருந்து எடுக்கப்படும் மாதிரியை நுண்ணோக்கியின் வாயிலாக ஆராய்ந்து இந்நோயரிதல் உறுதி செய்யப்படுகிறது.

தகுந்த கிரீம்கள், லோஷன்கள் அல்லது தகுந்த மாத்திரைகளை பயன்படுத்துவதன் மூலம் சிரங்கினால் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கலாம்.இந்நோயினால் ஏற்பட்ட தொற்றுக்கு சிகிச்சையளிக்க லோஷன் மற்றும் கிரீம்களை உடலில் கழுத்திற்கு கீழ் உள்ள பகுதிகளில் பயன்படுத்த மருத்துவர் வழங்குவார்.

இதே போன்ற சிகிச்சை பாதிக்கப்பட்ட நபரின் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் பாலியல் தொடர்பில் உள்ள நபருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.இந்நோய்க்கு எடுத்து கொண்ட சிகிச்சையினை நிறுத்திய பிறகு மீண்டும் சொறி அல்லது அரிப்பு இருப்பது அறியப்பட்டால் மீண்டும் இந்நோய்க்கு சிகிச்சையினை எடுப்பது அவசியமாகும்.

இந்நோய் ஏற்படாமல் தடுக்க எடுக்கப்படும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்வருமாறு:

சுத்தமான மெத்தை விரிப்பு மற்றும் ஆடைகளைப் பயன்படுத்துங்கள்.

50 செல்சியஸ் மற்றும் அதற்கும் மேலே உள்ள நீரில் ஆடைகளை சுத்தம் செய்தல்.