How to know symptoms of Stiff Neck?

Stiff Neck
Stiff Neck
Spread the love
Listen to this article

What are the main effects [கழுத்துப் பிடிப்பு] and symptoms of the Stiff Neck disease?

What is a neck spasm?

Discomfort in the neck area is called neck spasm. If this is neglected, it can cause pain and difficulty when turning or moving the neck. Cramps are often caused by painful muscle contractions.

What are the main effects and symptoms of the disease?

Neck spasms can cause pain in the neck and difficulty turning the head to one side. If pressure is applied to the nerve, tingling, numbness and weakness in the upper arms may occur on the side of the affected arm.

What are the main causes of infection?

Many daily activities such as working for long hours on laptops or mobile phones, incorrect sitting posture, incorrect walking posture, lifting heavy objects are common causes of neck spasm.

  All these activities cause discomfort to your neck and keep it at an uncomfortable angle for long periods of time. Another major factor is stress, which causes strain on the neck muscles and strain for long periods of time.

Sports injuries and accidents are some of the most common causes of neck stiffness. Some medical conditions that can cause neck stiffness include cervical spondylosis, torticollis, and fibromyalgia.

How is it diagnosed and treated?

Based on the symptoms, the doctor will examine your neck and the range of motion of the neck to assess the severity of the condition. Scans are usually not needed.

Muscle relaxants, pain relievers and anti-inflammatories are given for treatment if needed.

Stiff Neck

Home remedies and self-care measures are very effective and should be followed. They are as follows:

Hot and cold compresses once a day for 10-15 minutes.

Complete rest of the neck and no exercise until the symptoms disappear.

A gentle massage can be used to relieve neck stiffness.

A good firm mattress provides good support to the neck and relieves neck stiffness.

Neck spasms can be prevented by following some simple lifestyle changes:

Minimize time spent on laptop and mobile phone.

Adjusting the height of your chair so that the computer is at your eye level.

Practice stretching periodically without staying in one position.

Exercising regularly and maintaining good posture.

How to know symptoms of Breast Cancer

மார்பக புற்றுநோய் அறிகுறிகள் என்ன?

Way and Mode of Breastfeeding

தாய்(ப்)பால் புகட்டும் முறை:

How to know symptoms of Throat Cancer?

தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் என்ன?

கழுத்துப் பிடிப்பு என்றால் என்ன?

கழுத்துப் பகுதியில் ஏற்படும் அசௌகரியம் கழுத்துப் பிடிப்பு எனப்படுகிறது. இதை கவனிக்காமல் விட்டால், கழுத்தை திருப்பவோ அசைக்கவோ செய்யும் போது வலி மற்றும் சிரமம் ஏற்படலாம். பிடிப்பு பெரும்பாலும் வலியேற்படுத்தும் தசைச் சுருக்கத்தால் ஏற்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?   

கழுத்தில் வேதனை, தலையை ஒரு பக்கமாக திருப்புவதில் சிரமம் ஆகியவற்றை கழுத்துப் பிடிப்பு உண்டாக்கும். நரம்பில் அழுத்தம் ஏற்பட்டால், நரம்பில் சிலிர்ப்பு, உணர்வின்மை மற்றும் மேல்கைகளில் பலவீனம் ஆகியவை பாதிக்கப்பட்ட கைகளில் பக்கத்தில் ஏற்படும்.

நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

மடிக்கணனிகளில் அல்லது மொபைல் போன்களில் பல மணிநேரம் வேலை செய்தல், தவறான உட்காரும் நிலை, தவறான நடக்கும் தோரனை, கனமான பொருட்களை தூக்குதல் போன்ற பல அன்றாட நடவடிக்கைகள் பொதுவாக கழுத்துப் பிடிப்பிற்கு காரணமாகின்றன.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உங்கள் கழுத்தில் அசௌகரியம் ஏற்படுத்துகின்றன மற்றும் நீண்ட நேரம் சங்கடமான கோணத்திலும் இருக்க வைக்கின்றன. மற்ற முக்கிய காரணி மன அழுத்தம், இது கழுத்து தசையில் அழுத்தத்தையும் நீண்ட நேரத்திற்கு சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.

விளையாடும் போது ஏற்படும் காயங்கள் மற்றும் விபத்துக்கள் கழுத்துப் படிப்பிற்கான பொதுவான காரணங்களில் சில.கழுத்துப் பிடிப்பை ஏற்படுத்தும் சில மருத்துவ நிலைகளில் செர்விகல் ஸ்போண்ட்டிலோசிஸ், டார்டிகோலிஸ் மற்றும் ஃபைப்ரோமியால்ஜியா ஆகியவை அடங்கும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?   

அறிகுறிகளின் அடிப்படையில், மருத்துவர் உங்கள் கழுத்தை பரிசோதிப்பார் மற்றும் நிலையின் தீவிரத்தை மதிப்பீடு செய்ய கழுத்தின் இயக்கங்களின் வரம்பையும் பரிசோதிப்பார். ஸ்கேன்கள் பொதுவாக தேவைபடுவதில்லை.

தேவைப்பட்டால் சிகிச்சைக்காக தசை தளர்த்திகள், வலி நிவாரணிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்படும்.

Stiff Neck

வீட்டு வைத்தியம் மற்றும் சுய பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அவற்றை மேற்கொள்ள வேண்டும். அவை பின்வருமாறு:

10-15 நிமிட நேரத்திற்கு தினம் ஒரு முறை சூடான மற்றும் குளிர்ந்த ஒத்தடங்கள்.

அறிகுறிகள் நீக்கும் வரை கழுத்திற்கு முழுமையான ஓய்வு கொடுத்தல், உடற்பயிற்சி செய்யாதிருத்தல்.

கழுத்துப்பிடிப்பைக் குறைக்க மென்மையாக மசாஜ் செய்யலாம்.

நல்ல உறுதியான படுக்கும் மெத்தை கழுத்துக்கு நல்ல ஆதரவு தருகிறது மற்றும் இது கழுத்துப் பிடிப்பை விடுவிக்கிறது.

கழுத்துப் பிடிப்பை பின்வரும் சில எளிமையான வாழ்க்கை முறை மாற்றங்களால் தடுக்க முடியும்:

லேப்டாப் மற்றும் மொபைல் ஃபோனில் செலவிடும் நேரத்தை குறைத்தல்.

கணினி உங்கள் கண் மட்டத்தில் இருக்குமாறு, உங்கள் நாற்காலியின் உயரத்தை சரிசெய்தல்.

ஒரே நிலையில் இருக்காமல் அவ்வப்போது நீட்டுதல் பயிற்சி செய்தல்.

ஒழுங்கான உடற்பயிற்சி செய்வது மற்றும் நல்ல உடல் இருக்கை நிலையை பராமரித்தல்.

How to know symptoms of Breast Cancer

மார்பக புற்றுநோய் அறிகுறிகள் என்ன?

Way and Mode of Breastfeeding

தாய்(ப்)பால் புகட்டும் முறை:

How to know symptoms of Throat Cancer?

தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் என்ன?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *