lungs
lungs
Listen to this article

lungs -நுரையீரலில் எந்தப் பிரச்னைகளும் வராமல் ஆரோக்கியமாக இருக்க… மருத்துவர் சொல்லும் வழி!

நுரையீரல், நம் உடலின் ராஜ உறுப்புகளில் ஒன்று. இது ஆரோக்கியமாக இல்லையென்றால், நம் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் கேள்விக்குறிதான். அதனால், நுரையீரலில் எந்தப் பிரச்னைகளும் வராமல் தடுப்பது எப்படி என்று சொல்கிறார், காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோய் நிபுணராகப் பணியாற்றும் டாக்டர் ராமச்சந்திரன்.

நுரையீரலில் எந்தப் பிரச்னையும் இல்லாத ஒரு நபர் மாஸ்க் இல்லாமல் தொடர்ந்து சிக்னலில் நிற்கும்போது அவருக்கு என்ன மாதிரியான பிரச்னைகள் வரலாம்?

”தொடர்ந்து பல வருடங்களாக பிசியான சிக்னல்களில் நின்று புகை நிரம்பிய அந்தக் காற்றைச் சுவாசிப்பவர்களுக்கு, நுரையீரல் காற்றுக்குழாய்களில் அடைப்பு வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றன. பொதுவாக இந்தப் பிரச்னை புகை பிடிப்பவர்களுக்கு வரும். இப்போது மாசுபட்ட காற்றைத் தொடர்ந்து சுவாசிப்பவர்களுக்கும் வருகிறது.

தொடர்ந்து மாசடைந்த காற்றைச் சுவாசித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு அதிகமாகிவிடும். தொடர்ந்து மாசு படிந்த காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கும்போது கண்ணுக்கே தெரியாத துகள்கள் நுரையீரலில் படிந்து ரத்தத்தில் கலந்து விடும். இது கேன்சர் போன்ற பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். தவிர, இந்த துகள்கள் ரத்தத்திலும் கலந்துவிடுவதால், அது மூளை அல்லது இதயத்துக்குள் செல்லும்போது அங்கும் சில பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

இந்தத் துகள்கள் 2.5 மைக்ரன்ஸ் மட்டுமே இருக்கும் என்பதால், மூக்கின் உள்ளே இருக்கிற சளிப்படலத்தாலோ, முடியாலோ அதைத் தடுக்க முடியாது. இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி வண்டி ஓட்டும்போதும், பயணிக்கும்போதும் மாஸ்க் அணிவது மட்டும்தான். நுரையீரலில் பிரச்னை இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்…

சம்பந்தப்பட்ட நபருக்குச் சளி, இருமல் தொந்தரவுகள் இருக்காது என்றாலும் மூச்சு வாங்கும். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தொடர்ந்து இருமல் இருப்பது… அந்த இருமல் எந்த மருந்துக்கும் கட்டுப்படாமல் இருப்பது… சோர்வாக உணர்வது… உடல் எடை குறைந்து கொண்டே வருவது…

ஒருவேளை துரதிஷ்டவசமாக நுரையீரலில் கேன்சர் வந்துவிட்டது என்றால், அதற்கான அறிகுறிகளான பசியின்மை, திடீர் உடல் எடை குறைதல், இருமும் போது ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் வரலாம். தவிர, நெஞ்சு வலி, கிட்டத்தட்ட இரண்டு மூன்று வாரங்கள் வரைக்கும் அவர்களுடைய இயல்பான குரலிலிருந்து மாற்றமடைந்து இருக்கும். சிலருக்கு உணவு விழுங்குவதும் கஷ்டமாக இருக்கும்.

புகைப்பிடிப்பவர்களின் நுரையீரலில் என்ன மாதிரியான பிரச்னைகள் வரலாம்..?

புகைப்பிடிப்பவர்களை ஃபர்ஸ்ட் ஹாண்ட் ஸ்மோக், செகண்ட் ஹேண்ட் ஸ்மோக், தர்ட் ஹேண்ட் ஸ்மோக் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

புகைப்பிடிப்பவர்கள் முதல் பிரிவின் கீழ் வருவார்கள். இவர்களுக்கு சினிமா தியேட்டர்களில் படம் வருவதற்கு முன் புகைப்பிடிப்பதால் வரக்கூடிய பிரச்னைகளை விளம்பரம் செய்வார்கள் இல்லையா… அந்தப் பிரச்னைகள் வரும். இந்தப் பிரச்னைகள் வந்துவிட்டால் சரி செய்ய முடியாது. ஆனால், வருவதற்கு முன் தடுக்க முடியும். சிகரெட் புகையில் இருக்கிற கண்ணுக்குத் தெரியாத சிறு, சிறு துகள்களும்கூட நுரையீரலில் படிந்து ரத்தத்தில் கலக்கக்கூடியதுதான். இதனாலும் இதயத்தில் பிரச்னைகள், நுரையீரலில் புற்றுநோய் வரலாம்.

இப்போது இரண்டாவது பிரிவினருக்கு வருவோம். இவர்கள் புகைப்பிடிப்பவர்களின் அருகே இருக்கிற குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள். புகைப்பிடிப்பவர்களுக்கு இதய நோய், புற்றுநோய் வருவது எப்படி எளிதானதோ, அதுபோலவே புகைப்பிடிப்பவர்களின் அருகே இருப்பவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் எளிதாக வந்துவிடும். ஏனென்றால், சிகரெட்டுக்குள் இருக்கிற பொருள்களில் 200 முதல் 300 வரை வகையான புற்றுநோய் வரவழைக்கக்கூடிய கார்சினோமா இருக்கின்றன. இந்தத் துணுக்குகள் நுரையீரலுக்குள் சென்றால் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம்.

புகைப்பிடிப்பவர்களுக்குப் புகையை வெளிவிடத் தெரியும். ஆனால், அவர்களுக்கு அருகே இருப்பவர்களுக்கு அதை வெளிவிடத் தெரியாது. அதனால், புகைப்பிடிப்பவர்களைவிட அவர்களின் அருகே இருப்பவர்களுக்குத்தான் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்படுவது உண்மைதானா?

இதில் உண்மை இல்லை. அருகே இருப்பவர்களைவிட புகைப்பிடிப்பவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் மொத்தமாகப் புகையை உள்ளே இழுக்கிறார்கள். இதனால், அருகே இருப்பவர்களைவிட புகைப்பிடிப்பவர்களின் நுரையீரலில்தான் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான துணுக்குகள் நிறைய படித்திருக்கும். இதற்கென இருக்கிற உபகரணத்தைப் பயன்படுத்தி நுரையீரலைப் பரிசோதித்துப் பார்த்தால், நீண்ட காலமாகப் புகைப்பிடிப்பவர்களின் நுரையீரலில் கருந்திட்டுகளாகப் புகை படிந்து போய் இருக்கும்.

புகைப்பிடிப்பவர்களைவிட அருகே இருப்பவர்களுக்குப் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு 50 சதவிகிதம் குறைவுதான் என்றாலும், அவர்களுக்கும் பிரச்னை வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை நான் இங்கே அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன்.

lungs

புகைப்பிடிப்பதில் மூன்றாவதாக ஒரு பிரிவினர் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

இப்போது மூன்றாவது பிரிவினரைப் பார்ப்போம். அதாவது புகைப்பிடிக்கிற முதல் பிரிவினரின் உடைகளிலும், அவர்களுக்கு அருகே இருப்பவர்களின் உடைகளிலும் படிந்திருக்கிற சிகரெட் புகையின் வாடையை நுகர்பவர்கள்தான் இந்த மூன்றாவது பிரிவினர். இவர்களுக்கும் முதலிரண்டு பிரிவினர்களுக்கு வரக்கூடிய அதே பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பிருப்பதாகச் சமீபத்திய சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஆய்வுகள் நடந்துகொண்டே கொண்டிருக்கின்றன என்பதையும் இங்கே நான் பதிவிட விரும்புகிறேன்.

புகைப்பிடிப்பதால் வரக்கூடிய நுரையீரல் புற்றுநோய்க்கும் சளி, இருமல், மூச்சுத்திணறல், இருமும்போது ரத்தம் வெளிப்படுதல் போன்றவைதான் அறிகுறிகள். புகைப்பிடிப்பவர்களுக்குக் காலையில் எழுந்தவுடன் சளி அதிகமாக வெளியேறும். எந்த அளவுக்கு என்றால் நுரையீரலில் பிரச்னை இல்லாத ஒரு நபருக்குக் காலையில் 30 எம்.எல் வரை சளி வெளியேறும் என்றால், இவர்களுக்கு 60 எம்.எல் வரை வெளியேறும். இனி நுரையீரலில் வரக்கூடிய ஆஸ்துமா பற்றிப் பார்ப்போம்.

ஆஸ்துமா ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை தற்போது வரை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆஸ்துமா என்பதும் ஒரு வகையான அலர்ஜிதான். குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் அது மற்றவர்களுக்கும் வரலாம். தாத்தா – பாட்டிக்கோ அல்லது பெற்றோருக்கோ ஆஸ்துமா இருந்தால், அது அவர்களுடைய பிள்ளைகளுக்கோ அல்லது பேரன் – பேத்திக்கோ வரலாம். மற்றபடி, ஆஸ்துமா என்பது ஒரு வியாதி கிடையாது. அது ஒரு நிலைதான்.

சிலருக்குப் பூவாசம் ஒத்துக்கொள்ளாது. சிலருக்கு சென்ட் வாசம், சிலருக்கு பாடி ஸ்பிரே வாசம் ஒத்துக்கொள்ளாது. பூவில் இருக்கிற மகரந்தத்தைச் சுவாசித்துவிட்டால் அவர்களுடைய மூச்சுக்குழாயில் இறுக்கம் ஏற்பட்டு மூடிக்கொள்ளும். அந்த அலர்ஜிக்கான எதிர்வினை அது. இப்படி ஆஸ்துமாவைத் தூண்டிவிடக் கூடிய காரணிகளைக் கண்டறிந்து அதைத் தவிர்த்து விட்டாலே, அந்தக் காரணங்களால் ஆஸ்துமா வருவதை தடுத்து விடலாம். அந்தக் காரணிகளைத் தவிர்ப்பதுதான் ஆஸ்துமாவுக்கு முதல் சிகிச்சை.

lungs

கெமிக்கல் தயாரிக்கும் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு அதன் காரணமாக ஆஸ்துமா வரலாம். அந்த வேலையைத் தவிர்த்துவிட்டாலே அவர்களுக்கு ஆஸ்துமா வருவதை தடுத்துவிடலாம். சில மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது ஆஸ்துமா வரலாம். இவையெல்லாம் ஆஸ்துமா வருவதற்கான தெரிந்த காரணங்கள்… தெரியாத காரணங்கள் நிறைய இருக்கலாம்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல ஆஸ்துமா என்பது ஒரு நிலை. அந்தப் பிரச்னை வரும்போது சுவாசக்குழாய் சுருங்கும். அதற்கான மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் சுவாசக்குழாய் விரிந்து விடும். பனிக்காலத்தில்தான் ஆஸ்துமா தொந்தரவு அதிகமாகுமா?

உண்மைதான். பனிக்காலத்தில் இருக்கிற குளிர் சீதோஷ்ணமே ஆஸ்துமாவைத் தூண்டி விட்டுவிடும். பனிக்காலத்தில் நிறைய வைரஸ்கள் காற்றில் பரவி இருக்கும். அதனால்தான் அந்தக் காலத்தில் வைரஸ் காய்ச்சல்கள் அதிகமாக வரும். அதிகாலையிலோ அல்லது இரவிலோ வெளியே சென்றால் அந்த வைரஸ் தொற்று உங்களையும் தொற்றிக் கொள்ளும். இதனால், ஆஸ்துமா தூண்டிவிடப்படும் அல்லது இன்னும் அதிகமாகும்.

lungs

ஆஸ்துமா குணப்படுத்தக்கூடிய பிரச்னையா அல்லது கட்டுக்குள் வைக்கக்கூடிய பிரச்னையா?

ஆஸ்துமா வியாதி அல்ல என்பதால் அதைக் குணப்படுத்த முடியும் என்று சொல்ல முடியாது. அது ஒரு நிலை என்பதால், அதை தூண்டி விடக்கூடிய காரணிகளைத் தடுத்துவிட்டால் ஆஸ்துமா வராமல் தடுக்க முடியும். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஏதோ ஒரு உணவுப்பொருள் உங்களுக்கு அலர்ஜி என்றால் அதை நாம் வியாதி என்று சொல்ல மாட்டோம். அந்த உணவுப்பொருளைச் சாப்பிட மாட்டோம் அவ்வளவுதான். இதே நிலைதான் ஆஸ்துமாவுக்கும் பொருந்தும். காரணிகளைத் தடுத்துவிட்டால் அது வாழ்நாள் முழுக்க வராது அவ்வளவுதான்.

ஆஸ்துமா எப்படி வரும் என்றால், குழந்தைப் பருவத்தில் ஆஸ்துமா வந்திருக்கும். பிறகுச் சரியாகி இருக்கும். பத்து அல்லது பதினைந்து வருடங்கள் கழித்து மறுபடியும் அதே காரணி தூண்டும்போது ஒரு எபிசோட் போல மறுபடியும் ஆஸ்துமா வரும்.

ஆஸ்துமாவை மூச்சுப்பயிற்சி தடுக்குமா?

தடுக்கும். என்றாலும், அதை சிகிச்சையாக எடுத்துக்கொள்ள முடியாது. மூச்சுப்பயிற்சி என்பது நுரையீரலுக்கான ஒரு பயிற்சி. அதை சிகிச்சை என்று சொல்லமுடியாது. ஆஸ்துமா என்பது மூச்சுக்குழாய் மூடிக்கொள்வது. அதை திறப்பதற்கு வேண்டுமானால் மூச்சுப்பயிற்சி உதவலாமே தவிர, அதை சரி செய்வதற்கு உதவாது. மூச்சுப்பயிற்சி செய்தால் நுரையீரலின் செயல் திறன் நன்றாக இருக்கும். இதனால் மூச்சு வாங்கும்போது நெஞ்சுக்கூடு உள்ளே சென்று சென்று வருவது குறையும்.

lungs

ஆஸ்துமா நோயாளிகள் அனைவரும் பஃப் பயன்படுத்தலாமா?

குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை பஃப் பயன்படுத்தலாம். ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அவர்களாகவே மெடிக்கல் ஷாப்பில் வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. ஆஸ்துமாவுக்கான மாத்திரை சாப்பிடும்போது அது உணவுடன் செரிமானமாகி ரத்தத்தில் கலந்து நுரையீரலில் இருக்கிற ஆயிரக்கணக்கான காற்று அறைகளுக்குள் செல்வது மிகவும் கடினம். அதற்காகத்தான் மருத்துவர்கள் நாங்கள் பஃப் பயன்படுத்த சொல்கிறோம். மாத்திரை பயன்படுத்தினால் ஆஸ்துமா கட்டுப்பட நீண்ட நாட்கள் எடுக்கும்.

சிறு குழந்தைகளுக்குச் சளி அதிகமாகிவிட்டால், மருத்துவமனைகளில் வைக்கிற நெபுலைசரும் பஃபும் ஒரே மாதிரியான மருந்துதான். ஒரே மாதிரியான சிகிச்சைதான். குழந்தைகளால் பஃபில் இருக்கும் மருந்தை உள்ளிழுக்கத் தெரியாது என்பதால் நெபுலைசர் வைக்கிறோம். ஆஸ்துமா இருக்கும்போது சூடான பானங்களை அருந்துவது, நீராவிப்பிடிப்பது உதவியாக இருக்குமா?

இருக்கும். இது, குளிர்ந்த சூழலில் இருக்கும்போது சூடாக ஒன்று சாப்பிட்டால் கொஞ்சம் பெட்டராக உணர்வதுபோல. இது அவர்களுடைய மனம் சம்பந்தப்பட்டது. இதனால் எந்தக் கெடுதலும் நிகழப் போவதில்லை. அதே நேரம் நீராவிப்பிடிக்கும் நீரில் எதையும் சேர்க்காமல் வெறும் தண்ணீரை ஆவி பிடித்தாலே போதும்.

lungs

நுரையீரலைச் சுத்தமாக்குமா மூலிகைச்சாறுகள்?

சோஷியல் மீடியாக்களில் வருவதுபோல, இந்த ஜூஸ் குடித்தால் நுரையீரல் சுத்தமாகும் என்பதில் எல்லாம் உண்மையில்லை. நல்லக் காற்றைச் சுவாசிப்பது, நிறைய தண்ணீர் குடிப்பதுதான் நுரையீரலைச் சுத்தம் செய்ய நல்ல வழிகள். தவிர, ஆன்ட்டி ஆக்சிடன்ட் நிறைந்த ஆரஞ்சு, மாதுளம் பழம் போன்றவற்றைச் சாப்பிட்டு வந்தாலும் நுரையீரல் நன்றாக இருக்கும். அடுத்து, நுரையீரலைப் பாதிக்கக்கூடிய காசநோய் பற்றிப் பார்ப்போம்.

காசநோய் காற்றில் பரவுகிற ஒரு நோய். இந்தியாவில் மக்கள்தொகை அதிகம். மக்கள் நெருக்கமாக வசிக்கிற இடங்களில் சிலருக்குக் காசநோய் இருந்தாலும், பலருக்கும் அது பரவி விடும். காசநோய் வந்தவர்களில் பாதி பேர் சிகிச்சை எடுப்பதில்லை.

அப்படியே எடுப்பவர்களும் சிகிச்சையைப் பாதியிலேயே விட்டுவிடுகிறார்கள். இவர்கள் முகக்கவசமும் அணிவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தெருவிலேயே எச்சில் துப்புகிறார்கள். அதில் இருக்கிற கிருமிகள் நம்மையும் தொற்றிக்கொள்ளும். நமக்கு வயதாகும்போதோ அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போதோ காச நோய் வந்துவிடலாம்.

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் அதிகமாக இருப்பதால்தான் அரசாங்கம் அவர்களுக்கு இலவசமாக மருந்து தருகிறது. போன் செய்து மாத்திரை போட்டீர்களா என்றுகூட விசாரிக்கிறது. காசநோய் வந்தவர்களுக்கு மாதம் 500 ரூபாய் தருகிறது அரசாங்கம். ஆனாலும் காசநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது.

lungs

குழந்தைகளுக்கு வருகிற பிரைமரி காம்ப்ளக்ஸ் பின்னாளில் காசநோய் வருவதற்கான அறிகுறியா..?

குழந்தைகளுக்குத் தொடர் இருமல், காய்ச்சல் இருக்கும்போது ’பிரைமரி காம்ப்ளக்ஸ்’ பிரச்னை இருக்கிறதா என்பதைக் கண்டறிய மாண்டோ பரிசோதனை மற்றும் நெஞ்சுப்பகுதி எக்ஸ்ரே எடுப்பார்கள். மாண்டோ பரிசோதனை (Mantoux Test) என்பது, காசநோய் பாக்டீரியாவை ஊசி வழியாக குழந்தைகளின் கையின் மேல் தோலில் செலுத்துவது. குழந்தைக்குத் தொற்று இருந்தால் ஊசிப்போட்ட இடத்தில் வீங்கிய சிவப்பு நிறத்திட்டு ஏற்படும். அதை வைத்து குழந்தைக்குத் தொற்று வந்திருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க முடியுமே தவிர்த்து காசநோய் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது.

அந்தப் பரிசோதனை பாசிட்டிவாக இருந்தால் காசநோய் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. நெகட்டிவ் என்றால் காசநோய் இல்லை என்றும் அர்த்தமில்லை. இந்தியாவில், காசநோய்க்கு எதிரான பி சி ஜி தடுப்பூசி குழந்தைகளுக்குப் போடப்படுகிறது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்’’ என்கிறார் டாக்டர் ராமச்சந்திரன்.

நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்குச் சிகிச்சையளிப்பதில், சேலம் காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோய் நிபுணராகப் பணியாற்றும் டாக்டர் எம்.வி. ராமச்சந்திரன் மிகச்சிறந்த அனுபவமிக்கவர்.

How to stay healthy without any problems in the lungs… The doctor’s way!

The lungs are one of the royal organs of our body. If it is not healthy, the health of our entire body is questionable. Therefore, how to prevent any problems in the lungs, says Dr. Ramachandran, a pulmonologist at Kauvery Hospital.

What kind of problems can a person who has no problems in the lungs face when he continuously stands at the signal without a mask?

”Those who have been standing at busy signals for many years and breathing that air filled with smoke, are very likely to get blocked in the lung airways. This problem usually occurs in smokers. Now it also occurs in those who continuously breathe polluted air.

Those who continuously breathe polluted air have an increased level of carbon monoxide in their blood. When you continuously breathe polluted air, invisible particles accumulate in the lungs and mix with the blood. This can cause serious problems like cancer and be life-threatening.

In addition, since these particles mix with the blood, they can also cause some problems when they enter the brain or heart. Since these particles are only 2.5 microns, they cannot be blocked by the mucous membrane or hair inside the nose. The only way to avoid this danger is to wear a mask while driving or traveling. Signs of a problem with the lungs…

The person concerned may not have a cold or cough, but he or she will have difficulty breathing. Coughing continuously for two or three weeks… That cough is not controlled by any medicine… Feeling tired… Weight loss… If unfortunately, cancer has spread to the lungs, symptoms such as loss of appetite, sudden weight loss, and coughing up blood may occur. In addition, chest pain, a change in their normal voice for about two to three weeks. Some people may also have difficulty swallowing food.

What kind of problems can smokers have in their lungs?

Smokers can be divided into three categories: first-hand smoke, second-hand smoke, and third-hand smoke.

Smokers fall under the first category. They are often advertised in cinemas before a movie is shown about the problems that smoking can cause… and those problems will occur. Once these problems occur, they cannot be fixed. But they can be prevented before they occur. Even the tiny, invisible particles in cigarette smoke can settle in the lungs and mix with the blood. This can also cause heart problems and lung cancer.

Now let’s come to the second category. These are the family and friends who are close to smokers. Just as smokers are more likely to get heart disease and cancer, those who are close to smokers are also more likely to get lung cancer. Because there are 200 to 300 types of carcinogens in the substances inside cigarettes. If these particles enter the lungs, the chance of getting cancer is very high.

Smokers know how to exhale smoke. But those around them do not know how to exhale it. So, is it true that those around them are more likely to get cancer than those around them?

This is not true. Smokers are more affected than those around them. Because they inhale the smoke as a whole. As a result, smokers have more dangerous particles that can cause cancer in their lungs than those around them. If you examine the lungs using the equipment available for this, you will find that smoke has accumulated in the lungs of smokers for a long time.

Although the chances of people around you getting sick are 50 percent less than smokers, I want to emphasize here that they too can get sick.

It is something that many people do not know that there is a third group of people who are affected by smoking.

Now let’s look at the third group. That is, this third group is the one who consumes the smell of cigarette smoke that is left on the clothes of the first group of smokers and the clothes of those around them. Some recent studies have shown that they are also likely to get the same problems as the first two groups. I would also like to mention here that studies related to this are ongoing.

Symptoms of lung cancer caused by smoking include a runny nose, cough, shortness of breath, and coughing up blood. Smokers produce more mucus when they wake up in the morning. To what extent, if a person without lung problems produces up to 30 ml of mucus in the morning, these people produce up to 60 ml. Now let’s look at asthma that can occur in the lungs.

The reason why asthma occurs has not been definitively determined yet. Asthma is also a type of allergy. If someone in the family has it, it can also occur in others. If grandparents or parents have asthma, it can occur in their children or grandchildren. Otherwise, asthma is not a disease. It is a condition.

Some people do not like the smell of flowers. Some people do not like the smell of perfume, some people do not like the smell of body spray. If they breathe in the pollen in the flower, their airways tighten and close. It is a reaction to that allergy. If you identify and avoid the factors that can trigger asthma, you can prevent asthma from occurring due to those reasons. Avoiding those factors is the first treatment for asthma.

People who work in chemical manufacturing companies can get asthma because of that. If you avoid that job, you can prevent asthma from occurring. Asthma can occur when you take certain medications. These are all known causes of asthma… There may be many unknown causes.

Asthma, as I have already said, is a condition. When that problem occurs, the airways constrict. If you take medicines and tablets for it, the airways expand. Does asthma only worsen during the winter season?

It is true. The cold weather in the winter season can trigger asthma. Many viruses are spread in the air during the winter season. That is why viral fevers occur more during that season. If you go out in the morning or at night, that virus infection can also infect you. This can trigger or worsen asthma.

Is asthma a curable or manageable problem?

Since asthma is not a disease, it cannot be said that it can be cured. Since it is a condition, it can be prevented by preventing the factors that trigger it. For example, if you are allergic to a certain food, we do not call it a disease. We do not eat that food, that is all. The same applies to asthma. If you prevent the factors, it will not occur for life, that is all.

How does asthma occur? Asthma may have occurred in childhood. Then it will improve. Ten or fifteen years later, when the same factor triggers it again, asthma will come back like an episode.

Can breathing exercises prevent asthma?

It can be prevented. However, it cannot be considered a treatment. Breathing exercises are an exercise for the lungs. It cannot be called a treatment. Asthma is a condition in which the bronchial tubes close. Breathing exercises can help to open it, but they will not help to fix it. If you do breathing exercises, the lung function will be better. This will reduce the amount of air going in and out of your chest when you breathe.

Can all asthma patients use puffs?

Starting from children to adults, puffs can be used. However, they should not buy them from a medical shop without consulting a doctor. When you take an asthma pill, it is very difficult for it to be digested with food and mixed with the blood and enter the thousands of air chambers in the lungs. That is why doctors tell you to use puffs. If you use pills, it will take a long time for asthma to be controlled.

When small children have a bad cold, the nebulizer and puffs that are used in hospitals are the same medicine. They are the same treatment. We use a nebulizer because children do not know how to inhale the medicine in the puff. Will drinking hot drinks and inhaling steam help when you have asthma?

Yes. It is like feeling a little better if you eat something hot when you are in a cold environment. This is related to their mind. No harm will be done by this. At the same time, it is enough to steam the water without adding anything to the steaming water.

Can herbal juices cleanse the lungs?

As is being said on social media, it is not true that drinking this juice will cleanse the lungs. Breathing good air and drinking plenty of water are good ways to cleanse the lungs. Apart from that, eating antioxidant-rich fruits like oranges and pomegranates will also keep the lungs healthy. Next, let’s look at tuberculosis, which can affect the lungs.

Tuberculosis is a disease that spreads through the air. India has a large population. In places where people live in close proximity, even if some people have tuberculosis, it can spread to many others. Half of those who get tuberculosis do not seek treatment. Even those who do, abandon treatment halfway. They do not wear masks. Those infected spit on the street. The germs in it can infect us. When we get old or have low immunity, we can get tuberculosis.

The government gives them free medicine because there are a lot of people suffering from tuberculosis in India. They even call and ask if they have taken the pills. The government gives 500 rupees a month to those who have tuberculosis. However, the number of tuberculosis patients is increasing.

Is primary complex in children a sign of developing tuberculosis later?

When children have a persistent cough and fever, they take a Manto test and a chest X-ray to find out if they have a ‘primary complex’ problem. The Mantoux test is a test in which the tuberculosis bacteria are injected into the skin of a child’s upper arm through a needle. If the child is infected, a red, raised bump will appear at the injection site.

It can be used to determine whether the child is infected, but it cannot be used to tell if the child has tuberculosis. A positive result does not mean that the child has tuberculosis. A negative result does not mean that the child does not have tuberculosis. I would also like to mention here that in India, the BCG vaccine against tuberculosis is given to children,” says Dr. Ramachandran.

In treating lung-related problems, the Pulmonologist at Kauvery Hospital, Salem.

How to know Diets for Kidney Stones Patients?

What are benefits in breast milk?

How to know Common Breastfeeding Problems