Diet during pregnancy
Diet during pregnancy
Listen to this article

Diet during pregnancy – கர்ப்ப காலத்தில் வாய்க்குப் பிடிச்சதை சாப்பிடலாமா… சரியான உணவு முறை எது?

கர்ப்ப காலத்தில் வழக்கமாகச் சாப்பிடும் உணவுகள் தவிர்த்து, புதிது புதிதாக ஏதேதோ உணவுகளைச் சாப்பிடும் தேடல் இயல்பாகவே அதிகரிக்கும்.  ‘வாய்க்குப் பிடிச்சதை சாப்பிடு’ என்பார்கள் வீடுகளில். ஆனால், மருத்துவர்களோ, கண்டதையும் சாப்பிடக்கூடாது… பார்த்துப் பார்த்துதான் சாப்பிட வேண்டும்’ என்பார்கள். இரண்டில் எது சரி?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தனக்காக மட்டுமல்லாமல், தன் கருவில் வளரும் குழந்தைக்காகவும் சேர்த்துச் சாப்பிடுகிறாள். அதனால், எந்த உணவைச் சாப்பிட்டாலும் அதை கவனமாகப் பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.

அதாவது குழந்தைக்கும் ஊட்டச்சத்துகள் முழுமையாகப் போய்ச் சேர வேண்டும். அதே சமயத்தில் அம்மாவுக்கும் சிக்கல்கள் தராத உணவாக இருக்க வேண்டும். அதாவது அம்மா சாப்பிடும் உணவுகள், பிபி, சுகர் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தாதவையாக இருக்க வேண்டும்.

கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோ, ஊசிகளோ பரிந்துரைக்கப்படுவதில்லை. ஒருவேளை அந்தப் பெண் ரத்தச்சோகை எனப்படும் அனீமியாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இரும்புச்சத்து மாத்திரைகளைக் கொடுக்க மாட்டோம்.

அப்படிக் கொடுத்தால் கர்ப்பிணிகள் வாந்தி எடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்பதே காரணம். எனவே, அந்த முதல் 3 மாதங்களில் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளாகச் சாப்பிட வேண்டும். அந்த வகையில் நிறைய காய்கறிகள், கீரைகள், பேரீச்சம்பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளச் சொல்வோம்.

Diet during pregnancy

இரும்புச்சத்தைப் போலவே கால்சியம் சத்தும் கர்ப்பிணிகளுக்கு மிகமிக முக்கியம். அதனால் பால் மற்றும் பால் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளச் சொல்வோம். இந்தச் சமயத்தில் கர்ப்பிணிகளுக்கு புரதச்சத்தும் மிக முக்கியம். எனவே, கார்போஹைட்ரேட் உணவுகளை மிதமாக எடுத்துக்கொண்டு, கொழுப்பைத் தவிர்த்துவிட்டு, புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

குழந்தையின் உடல் உறுப்புகள் முதல் 12 வாரங்களில்தான் உருவாகத் தொடங்கும்.  பிறக்கும் குழந்தை புத்திசாலியாக இருந்தால், அதற்கு அந்த அம்மா முதல் 3 மாதங்களில் சாப்பிட்ட உணவுகள்தான் காரணம். 

ஆனால், பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கும் முதல் 3 மாதங்களில்தான் வாந்தி உணர்வு மிக அதிகமாக இருக்கும். அதனால் சாப்பிடவே தோன்றாது. எனவே, அந்த நாள்களில் அவர்களுக்குப் பிடித்த உணவுகளையே ஆரோக்கியமாக சமைத்துக்கொடுத்துச் சாப்பிட வைக்கலாம்.

முளைகட்டிய பயறு, முட்டையின் வெள்ளைக் கரு, சிக்கன், குட்டி மீன்கள் (பெரிய மீன்களில் பாதரசம் அதிகமிருக்கும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது) போன்றவற்றைச் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த உணவுகளால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும்.

Diet during pregnancy

கர்ப்பிணிகள் கட்டாயம் தினமும் 2 டம்ளர் பால் குடிக்க வேண்டும். பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு புரோட்டீன் பவுடரை மருத்துவர் பரிந்துரைப்பார், அந்த பவுடரை சூடான பாலில் கலக்காமல், வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிக்க வேண்டும். தினம் ஒரு கப் தயிர், நட்ஸ், உலர் பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

நட்ஸ் மற்றும் டிரை ஃப்ரூட்ஸை அப்படியே சாப்பிடப் பிடிக்காவிட்டால்  பாலுடன் சேர்த்து அரைத்து வாழைப்பழமும் சேர்த்து மில்க் ஷேக்காக குடிக்கலாம். உப்பு, சர்க்கரை அளவைக் குறைத்துக்கொள்வதன் மூலம் கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் ரத்த அழுத்தமும் கர்ப்பகால நீரிழிவும் வராமல் தடுக்கலாம்.

Diet during pregnancy

Can you eat whatever you like during pregnancy… What is the right diet?

During pregnancy, the search for new foods, other than the usual foods, naturally increases. ‘Eat whatever you like’ is said at home. But doctors say, ‘You should not eat whatever you see… You should eat it only after looking at it.’ Which of the two is correct?

Answers, Mala Raj, a specialist in gynecology and infertility treatment from Chennai.

During pregnancy, a woman eats not only for herself, but also for the baby growing in her womb. Therefore, whatever food she eats, she should carefully consider and choose it. That is, the baby should also get all the nutrients. At the same time, it should be a food that does not cause problems for the mother. That is, the foods that the mother eats should not cause problems like BP and sugar.

Iron tablets or injections are not recommended for pregnant women in the first 3 months of pregnancy. Even if the woman is suffering from anemia, we will not give iron tablets. The reason is that if we give them like that, pregnant women will keep vomiting. Therefore, in the first 3 months, they should eat foods rich in iron. In that case, we will tell them to eat a lot of vegetables, greens, dates, etc.

Like iron, calcium is also very important for pregnant women. Therefore, we will tell them to eat more milk and dairy products. Protein is also very important for pregnant women at this time. Therefore, they can eat carbohydrate foods in moderation, avoid fat, and eat protein-rich foods. The baby’s body organs start forming only in the first 12 weeks. If the baby is born intelligent, it is because of the foods that the mother ate in the first 3 months.

However, most pregnant women have a lot of vomiting in the first 3 months. Therefore, they do not feel like eating at all. Therefore, during those days, they can be made to eat their favorite foods cooked in a healthy way. You can eat sprouted lentils, egg whites, chicken, and small fish (it is safer to avoid large fish as they are high in mercury). Fried foods should also be avoided as they increase blood pressure.

Pregnant women must drink 2 glasses of milk daily. Most often, the doctor will recommend protein powder for pregnant women, and the powder should be mixed with warm milk, not hot milk. You can take a cup of yogurt, nuts, and dry fruits daily. If you do not like eating nuts and dry fruits as they are, you can grind them with milk and drink them as a milkshake with a banana. By reducing salt and sugar intake, you can prevent blood pressure and gestational diabetes in the last months of pregnancy.

How to know Breast pain prevention?

How to know Causes of breast pain?

How to know types of Breast Pain?