Excess body fat
Excess body fat
Listen to this article

Excess body fat- `பி.எம்.ஐ நார்மல், ஆனால், உடலில் கொழுப்பு அதிகம்’ காரணமென்ன, தீர்வுகள் உண்டா?

என் வயது 40. நான் என் உயரத்துக்கேற்ற எடையில் இருக்கிறேன். அதாவது என்னுடைய பி.எம்.ஐ சரியாகவே இருக்கிறது. ஆனாலும், எனக்கு கொழுப்பு அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். பி.எம்.ஐ சரியாக இருக்கும்போதும் கொழுப்பு அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டா? இதற்கு என்ன காரணம், எப்படிக் குறைப்பது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.  

உங்கள் மருத்துவர் சொன்னதுபோல ஒருவருக்கு பி.எம்.ஐ (BMI) சரியாக இருந்தாலும், அவருக்கு உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்க வாய்ப்புகள் உண்டு. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

சமீபத்தில் நீங்கள் எடைக்குறைப்பு முயற்சியில் இருந்தீர்களா… அப்படியானால், வேகமாக எடையைக் குறைக்கும் டயட் முறையைப் பின்பற்றி, எடையை மட்டுமன்றி, தசைகளின் அடர்த்தியையும் வெகுவாக இழந்திருக்கலாம். 

அதீதமான உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றி, எடையைக் குறைத்தீர்களா என்று யோசியுங்கள்.  அடுத்து உங்களுக்கு தைராய்டு பாதிப்போ, இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் பிரச்னையோ இருக்கக்கூடும். அதுவும் இந்தப் பிரச்னைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.  

உடலியக்கமற்ற வாழ்க்கைமுறையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கும்.  சிலர் தினமும் ஜிம்முக்கு செல்கிறவராக இருப்பார்கள். ஜிம்மில் செலவழிக்கும் அந்த அரை மணி நேரம், ஒரு மணி நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் உடல் இயக்கமே இல்லாமல் இருப்பார்கள். அதுவும் உடலில் கொழுப்புகூட காரணமாகலாம்.

உங்களுடைய தூக்க ஒழுக்கம் எப்படியிருக்கிறது என்றும் பாருங்கள். சரியான நேரத்துக்குப் போதுமான அளவு தூக்கம் இல்லை என்றால், அது உங்கள் ஹார்மோன்களின் சமநிலையை பாதிக்கும். அதனாலும் கொழுப்பு அதிகரிக்கும்.

கடைசியாக, உங்கள் உணவுப்பழக்கத்தில் போதுமான அளவு புரதச்சத்தும் நார்ச்சத்தும் இருக்கின்றனவா என்று பாருங்கள். புரதச்சத்து இருந்தால்தான் தசைகளின் அடர்த்தி தக்கவைக்கப்படும். நார்ச்சத்து இருந்தால்தான் தேவையற்ற கொழுப்பு வெளியேறும்.

எனவே, இந்த எல்லா விஷயங்களையும் கவனித்து உங்களுக்கு கொழுப்பு அதிகரிக்க எது காரணமாக இருக்கலாம் என யோசியுங்கள். தேவைப்பட்டால் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து ஆலோசகரை சந்தித்து அவர்கள் பரிந்துரைக்கும் விஷயங்களைப் பின்பற்றுங்கள்.

Excess body fat

“Normal BMI, but high body fat” What is the reason, are there any solutions?

I am 40 years old. I am at a weight appropriate for my height. That is, my BMI is correct. However, doctors say that I have excess fat. Is it possible to have excess fat even if the BMI is correct? What is the reason for this, and how to reduce it?

Answered by Shiny Surendran, a Sports and Preventive Health Dietitian from Chennai.

As your doctor said, even if a person has a normal BMI, he may have high body fat. There may be many reasons for this.

Have you been trying to lose weight recently… If so, you may have lost not only weight but also muscle mass by following a fast weight loss diet.

Think about whether you have lost weight by following an extreme diet. Then you may have a thyroid problem or insulin resistance. That may also be a cause of this problem.

A sedentary lifestyle also plays an important role in this. Some people may go to the gym every day. Except for that half an hour or an hour spent in the gym, they do not do any physical activity at all. That can also cause fat in the body.

Also, look at your sleep habits. If you do not get enough sleep at the right time, it will affect the balance of your hormones. That will also increase fat.

Finally, see if there is enough protein and fiber in your diet. Only if there is protein, muscle density will be maintained. Only if there is fiber, unnecessary fat will be removed. So, keep all these things in mind and think about what might be causing your fat gain. If necessary, consult a doctor or nutritionist and follow their recommendations.

Low calorie, No cholesterol, Cancer control fruit

Beauty Tips usage of Orange and and Senna

herbal Hair Care balms for hair growth!