Health immunity
Health immunity
Listen to this article

Health immunity- `எக்ஸ்ட்ரா’ நோய் எதிர்ப்பு சக்திக்கு 10 டிப்ஸ்!

வாழ்க்கை முறை

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன்மூலம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். அதாவது, உணவில் அதிக அளவு காய்கறி, பழங்கள், முழு தானியங்களைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். தவறாமல் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடல் எடையை ஒரே சீராகப் பராமரிக்கவேண்டும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். புகைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணமே இருக்கக்கூடாது. இவற்றைச் செய்தாலே நோயற்ற வாழ்வு நம் வசம்.

இதேபோல், நாம் வாழும் வாழ்க்கையும் சுற்றுப்புறச் சூழலும் நம் உடல் நலத்தை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. தூசு மாசு படிந்த சூழ்நிலையில், முகக் கவசங்கள் அணிவதன் மூலம் நம்மை நாமே காத்துக் கொள்ள முடியும். சகலமும் மாறி விட்ட வேகமான வாழ்க்கை முறையில் நாம் கடைபிடிக்கும் பழக்கவழக்கங்களே நம்மை நோயிலிருந்து காக்க உதவும்.

Health immunity

உணவு முறை

நோய் எதிர்ப்புப் போர் வீரர்கள், அவர்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்தைக் கொண்டே நடைபோடுகின்றனர். எனவே, அவர்களுக்கு நல்ல, போதுமான, தொடர் ஊட்டச் சத்துக்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்படி செய்ய வேண்டும். வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க, சரிவிகித உணவு எடுத்துக்கொள்வது அவசியம். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க புரதச்சத்து அதிகமுள்ள உணவு, கொழுப்புச்சத்துக் குறைவான உணவு, மாவுச்சத்து சம அளவில் உள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். சிறுதானியங்கள், பழங்கள், பால் முதலியவற்றை உட்கொள்வதன் மூலம் வைட்டமின்கள், தாது உப்புக்கள் தானாக உடலில் சேர்ந்து சக்தி கொடுக்கும். நிம்மதியான தூக்கம்

தூக்கம் குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தியும் குறைய ஆரம்பிக்கிறது. தூக்கத்தின்போது நம்முடைய நோய் எதிர்ப்பு மேம்படுகிறது. தூக்கத்தின்போது நோய்க்கிருமிகள் மற்றும் உடலினுள் ஏற்படக்கூடிய வீக்கங்ளுக்கு எதிராக நம்முடைய எதிர்ப்பு சக்தி தீவிரமாக செயல்படுகிறது.

தூக்கம் தடைபடும்போது நோய்க்கிருமிகள் ஊக்கம் பெறுகின்றன. ஒருநாள் தூக்கம் தடைபடுவதால் பிரச்னை இல்லை. பல நாட்களாக சரியாக தூங்கவில்லை என்றால் பிரச்னை ஆரம்பிக்கிறது. இதைத் தவிர்க்க, இரவு 10 அல்லது 11 மணிக்குள் படுக்கைக்குச் சென்று அதிகாலையில் 6 மணிக்கு எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

Health immunity

உடற்பயிற்சி

நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம். இது இதயம், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது. பல்வேறு வியாதிகளில் இருந்து பாதுகாக்கிறது. காலை எழுந்ததும் மன அமைதிக்காக பத்து நிமிட தியானம், உடல் அமைதிக்காக யோகா, ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சியோ அல்லது வீட்டிலிருந்தே எளிய உடற்பயிற்சியோ செய்யலாம்.

இது கலோரிகளை எரிக்க உதவும். மாலையில் சிறிது நடைப்பயிற்சி, நீச்சல் போன்றப் பயிற்சிகளைத் தொடர்ந்து கடைப் பிடித்து வந்தால் உடல் கட்டுக்குள் அடங்கி, கட்டுக்கோப்பாக இருப்பது மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளும் சரியான முறையில் இயங்கும்.

இனிப்பை தவிர்க்கலாம்

இனிப்புப் பலகாரங்கள் பெரும்பாலும் எண்ணெய்ப் பலகாரங்களாகவே இருப்பதால் அவை, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு தீங்கை விளைவிக்கின்றன. மேலும் பலகாரங்களைப் பதப்படுத்துவதற்காகக் கலக்கப்படும் பொருட்களால் உடலுக்குக் கூடுதல் தீங்கு.

அதிரசமும், எள்ளுருண்டையும் இதற்கு விதிவிலக்கு. அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் இவற்றின் மகத்துவத்தைக் கூறியுள்ளனர். எனவே இது போன்ற பலகாரங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தேவையான சக்தியும் கிடைக்கும்.

Health immunity

மன அழுத்தம் தவிர்த்துவிடலாம்

மன அழுத்தத்துக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மன அழுத்தம் அதிகரிக்கும்போது அது நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதித்து, நோய் எதிர்ப்பு சக்தியை கீழ்நோக்கிக் கொண்டு செல்லும். எனவே, மன அழுத்தத்தைத் தவிர்க்கக்கூடிய வழிமுறைகளைக் கற்று, அதைப் பின்பற்றுங்கள். நேரத்தைத் திட்டமிட்டு, திட்டமிட்ட நேரத்தில் வேலையை முடிப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

ஊட்டச்சத்துகள்

பலருக்கு வைட்டமின் டி குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் என்ற உண்மை தெரிவதில்லை. நம் ஊரில்தான் வைட்டமின் டி குறைபாடு அதிகம் உள்ளவர்களும் உள்ளனர். எனவே, ஒரு நாளைக்குத் தேவையான அளவு வைட்டமின் டி-யை சூரியன் மற்றும் உணவில் இருந்து பெறுகிறோமா என்பதை கவனித்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரையின்பேரில் சத்து மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

இதேபோல துத்தநாகம் (ஸிங்க்) புற்றுநோய் செல்லைக்கூட எதிர்த்து போராடும் ஆற்றலை அளிக்கக்கூடியது. நாள் ஒன்றுக்கு 12 மி.கி. அளவுக்கு துத்தநாகம் தேவை. இதை முந்திரி, தயிர், நண்டு, இறைச்சி போன்ற உணவில் இருந்து பெறமுடியும். துத்தநாகம் ஊட்டச்சத்து மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள், ஒரு நாளைக்கு 15 மி.கி.க்கு குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். துத்தநாகம் அதிகமானாலும், மற்ற ஊட்டச்சத்து மற்றும் தாது உப்புக்களை உடல் கிரகிப்பதில் குறைபாடு ஏற்படும்.

எண்ணெய் சத்து நிறைந்த மீன் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைவாக உள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. எனவே, கெட்ட கொழுப்பு நிறைந்த ‘ரெட் மீட்’ உணவுகளுக்குப் பதில் இந்த மீனைச் சாப்பிடலாம். மீன் சாப்பிடப் பிடிக்காதவர்கள், சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள் மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

Health immunity

கை சுத்தம் தருமே சுகாதாரம்

நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட பொது சுகாதாரம் மிக முக்கியம். உணவைச் சமைப்பதற்கு முன்பும் சாப்பிடுவதற்கு முன்பும் பலர் கை கழுவுவது இல்லை. கை கழுவுவதில் நுணுக்கமே உள்ளது. சமைப்பதற்கு முன்பு, சமைத்த பின், உணவுப் பொருளைத் தொடுவதற்கு முன்பு, தொட்ட பிறகு, கழிப்பறைக்கு சென்று வந்த பிறகு கை கழுவுவது மிகவும் அவசியம்.

வெறும் தண்ணீர் ஊற்றி கழுவாமல், சோப் அல்லது பிரத்யேக கை கழுவும் திரவத்தைப் பயன்படுத்தி கையின் மேல் பகுதி, அடிப்பகுதி, நகங்கள், விரல் இடுக்குகள் என கையின் அனைத்துப் பகுதிகளையும் தேய்த்து சுத்தமாகக் கழுவ வேண்டும். ‘க்ளென்சிங் ஏஜன்ட்’ கொண்டு மேலே சொன்ன முறைப்படி கழுவினாலே, 90 சதவிகிதக் கிருமிகள் நம்மை அண்ட விடாமல் விரட்டி விடலாம்.

வெள்ளைப்பூண்டும் வெங்காயமும்

எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு வெள்ளைப்பூண்டு நல்லதோர் மருந்து. நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை பூண்டுக்கு உண்டு. பாக்டீரியாவுக்கு எதிராக செயலாற்றும் தன்மை பூண்டுக்கு உள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

பூண்டு மற்றும் வெங்காயத்தை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கொழுப்பைக் குறைக்கும் சக்தி வெள்ளைப்பூண்டில் இருப்பதால் கொழுப்புச் சத்து அதிகமுள்ளவர்கள் அதை எடுத்துக் கொள்ளலாம். மேலும், இதில் ‘ஆன்டி ஆக்சிடன்ட்’ இருப்பதால் உடலுக்கு கூடுதல் நலம்.

தண்ணீர் அவசியம்

உயிர் வாழ்வதற்குத் தண்ணீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு உடலின் எதிர்ப்பு சக்திக்கும் தண்ணீர் மிக அவசியம். போதுமான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்றால் உடலில் நீர்ச்சத்துக் குறைந்து உடல் நலம் கெட வாய்ப்புள்ளது. எனவே சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்றரை லிட்டர் வரை தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Health immunity

10 Tips for `Extra’ Immunity!

Lifestyle

You can boost your immunity by following a healthy lifestyle. That is, you should include more vegetables, fruits, and whole grains in your diet. You should exercise regularly. You should maintain a consistent body weight. You should keep your blood pressure under control. You should not even think about smoking. If you do these, you will have a disease-free life.

Similarly, the life we ​​live and the environment we live in play a major role in determining our health. In dusty and polluted conditions, we can protect ourselves by wearing face masks. The habits we follow in our fast-paced lifestyle that has changed everything will help protect us from disease.

Diet

The warriors of the immune system walk with the nutrition they receive. Therefore, we should ensure that they continue to receive good, adequate, and continuous nutrition. People living in poverty and malnutrition are more susceptible to disease. It is important to eat a balanced diet to get adequate nutrients. To increase immunity, you should eat foods that are high in protein, low in fat, and have a balanced amount of carbohydrates. By consuming grains, fruits, milk, etc., vitamins and minerals will automatically enter the body and give you energy. Restful sleep

When sleep decreases, immunity also starts to decrease. Our immunity improves during sleep. During sleep, our immunity works actively against pathogens and inflammation that may occur in the body. When sleep is disrupted, pathogens get a boost. There is no problem if sleep is disrupted for one day. If you have not slept properly for several days, the problem starts. To avoid this, you should make it a habit to go to bed by 10 or 11 pm and wake up at 6 am.

Exercise

Exercise is very important to improve immunity. It improves heart and lung function. Lowers blood pressure. Reduces body weight. Protects against various diseases. When you wake up in the morning, you can meditate for ten minutes for peace of mind, yoga for peace of body, go to the gym and do simple exercises at home. This will help burn calories. If you continue to practice exercises like walking and swimming in the evening, not only will your body be in control and fit, but your internal organs will also function properly.

Avoid sweets

Since sweet foods are mostly oily foods, they cause harm to the body’s immune system. Moreover, the ingredients mixed to process the foods cause additional harm to the body. Adirasam and sesame seeds are exceptions to this. Our ancestors have already mentioned their greatness at that time. Therefore, you can include such foods in your diet. You will also get the necessary energy.

Avoid stress

There is a close relationship between stress and immunity. When stress increases, it affects the immune system and leads to a decline in immunity. Therefore, learn ways to avoid stress and follow them. You can reduce stress by planning your time and completing your work on time.

Nutrition

Many people are not aware of the fact that vitamin D deficiency affects the immune system. There are many people with vitamin D deficiency in our city. Therefore, we should take care of whether we get the required amount of vitamin D from the sun and food per day. Those with vitamin D deficiency can consult a doctor and take nutritional tablets as per his recommendation.

Similarly, zinc can provide the power to fight even cancer cells. 12 mg of zinc is required per day. This can be obtained from foods like cashews, yogurt, crab, and meat. Those who take zinc nutritional tablets should ensure that it is less than 15 mg per day. Even though zinc is high, the body will have a deficiency in absorbing other nutrients and minerals.

Oily fish are rich in omega-3 fatty acids. This improves our immune system. Therefore, you can eat this fish instead of ‘red meat’ foods that are full of bad fats. Those who do not like eating fish or those who eat only vegetarian food can take fish oil tablets.

Hand hygiene is the key to health

Public hygiene is very important to improve immunity. Many people do not wash their hands before cooking and eating food. There is a subtlety in washing hands. It is very important to wash hands before cooking, after cooking, before and after touching food, and after going to the toilet. Instead of just washing with water, use soap or a special hand washing liquid to rub all parts of the hands, including the upper part of the hands, the bottom of the hands, nails, and fingernails, and wash them thoroughly. Washing them as described above with a ‘cleansing agent’ can eliminate 90 percent of the germs.

Garlic and Onion

Garlic is a good medicine for people with low immunity. Garlic has the ability to fight germs. Medical research has proven that garlic has the ability to fight bacteria. It has also been found that people who eat a lot of garlic and onions have a lower risk of cancer. Garlic has the ability to reduce cholesterol, so people with high cholesterol can take it. Also, it is beneficial for the body because it contains ‘antioxidants’.

Water is essential

Just as water is important for life, water is also essential for the body’s immune system. If you do not drink enough water, your body may become dehydrated and your health may deteriorate. Therefore, you should consume an average of two to three and a half liters of water per day.

Will eating bananas every day cause diabetes?

A mesmerizing scent and some beauty tips

How do we handle our anger?