stomach problems
stomach problems
Listen to this article

stomach problems- உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியம். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். ரத்தசோகை பிரச்னைக்கும் சிறந்த தீர்வு கீரைகள்தான்.

கீரைகளின் இயல்புத்தன்மை, அதில் அடங்கியுள்ள சத்துக்கள் என்னென்ன, யார் சாப்பிடலாம், யாரெல்லாம் தவிர்க்கலாம் என்பன உட்பட பல்வேறு பலன்களை விளக்குகின்றனர், ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால் மற்றும் நல்ல கீரை ஜெகன்னாதன்.

வயிற்றுப் பிரச்னைக்கு வெந்தயக்கீரை

குட்டிக் குட்டி இலைகளாக, சிறிய தண்டுகளுடன் இருக்கும் வெந்தயக்கீரை, லேசான கசப்புச் சுவை கொண்டது.

சத்துக்கள்: புரதம், கால்சியம், இரும்பு உள்ளிட்ட தாதுஉப்புக்கள், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளெக்ஸ் இதில் நிறைய உள்ளன.

பலன்கள்: உடலின் பலத்தை அதிகரிக்கும். நோய் எதிர்பாற்றலை உருவாக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னையை குணமாக்கும். மாதவிடாய் கோளாறுகளை நீக்கும். வாயுப் பிரச்னை குணமாகும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி சீராகவைக்கும். வயிற்றுக் கோளாறுகளைப் போக்கும். உடல்சூடு தணியும். முகப்பரு தொல்லை, சருமப் பிரச்னைகள் குணமாகும். குடல்புண்களை ஆற்றும்.

Fenugreek Spinach for stomach problems

டிப்ஸ்: வெந்தயக்கீரையை கோதுமை மாவில் சேர்த்து  சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். பாசிப்பருப்பு சேர்த்து செய்தால் இதன் கசப்புச் சுவை நீங்கும்.

கவனிக்க: சளி, இருமல் போன்ற பிரச்னை உள்ளவர்கள் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். புத்துணர்வு தரும் புளிச்சக்கீரை

புளிப்புச் சுவை கொண்டுள்ள இந்தக் கீரையை அனைத்து வகையிலும் செய்து சாப்பிடலாம். ஆனால், புளியின் அளவைக் குறைப்பதே நல்லது. இரண்டு புளிப்பும் சேர்ந்து சுவையை மாற்றிவிடும். மேலும் இதனுடன் எள் சேர்த்தும் சாப்பிடலாம்.

சத்துக்கள்: வைட்டமின் பி, இ, சி, பொட்டாசியம் ஆகியவை உள்ளன.

பலன்கள்: சரும வறட்சியைப் போக்கும். சருமம் அழகு பெறும். பசியின்மையைப் போக்கும். மந்தத்தை நீக்கும். சருமத்தில் உருவாகும் சிறு ரத்தக் கட்டிகளைப் போக்கும். ரத்த நாளங்களை சீர்செய்யும்.

டிப்ஸ்: சிறிது எண்ணெயில் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, கீரையை சேர்த்து பிரட்டி, உப்பு சேர்த்து அரைத்து, துவையலாக செய்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.  வயிறு மந்தம் நீங்கும். புளிச்ச கீரையை நீரில் கொதிக்கவிட்டு அந்த நீரைக் குடித்துவந்தால், உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும்.

கவனிக்க: மூட்டுவலிப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்கலாம்.

Adding a green leaf to your diet every day is good for your health. Green leaves are rich in vitamins and minerals. A green leaf is essential for children to grow up healthy. Green leaves are also the best solution for anemia.

Ayurvedic doctor Shanthi Vijaypal and Nalla Keera Jagannathan explain the various benefits of green leaves, including the nature of the nutrients they contain, who can eat them, and who can avoid them.

Fenugreek for stomach problems

Fenugreek, which has small leaves and small stems, has a slightly bitter taste.

Nutrients: It contains a lot of protein, calcium, iron, and minerals, vitamins A, C, and B complex.

Benefits: Increases the body’s strength. Builds immunity. Cures the problem of leukorrhea in women. Eliminates menstrual disorders. Cures gas problems. Controls and regulates the level of sugar in the body. Relieves stomach disorders. It reduces body heat. It cures acne and skin problems. It soothes intestinal ulcers.

Tips: You can make chapatis by mixing fenugreek leaves with wheat flour. Adding dal will remove its bitter taste.

Note: People with cold and cough problems should avoid eating too much. Refreshing tamarind

This leafy green has a sour taste and can be eaten in all forms. However, it is better to reduce the amount of tamarind. The two tamarinds together will change the taste. You can also eat it with sesame seeds.

Nutrients: Contains vitamins B, E, C, and potassium.

Benefits: Relieves skin dryness. Makes the skin beautiful. Relieves loss of appetite. Relieves fatigue. Removes small blood clots that form on the skin. Improves blood vessels.

Tips: Fry urad dal, dried chilies, and turmeric powder in a little oil, add spinach, fry, add salt, grind, make into a paste and eat with hot rice. It relieves stomach upset. Boiling sour spinach in water and drinking the water will refresh the body.

Note: People with joint pain should avoid it.

Are there so many benefits to kissing?

Increase in men seeking mental health help

Tips From urinary stones to vaginal discharge