Cures anemia
Cures anemia
Listen to this article

Cures anemia-ணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியம். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். ரத்தசோகை பிரச்னைக்கும் சிறந்த தீர்வு கீரைகள்தான்.

கீரைகளின் இயல்புத்தன்மை, அதில் அடங்கியுள்ள சத்துக்கள் என்னென்ன, யார் சாப்பிடலாம், யாரெல்லாம் தவிர்க்கலாம் என்பன உட்பட பல்வேறு பலன்களை விளக்குகின்றனர், ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால் மற்றும் நல்ல கீரை ஜெகன்னாதன்.

Drumstick Tree spinach

ரத்த சோகையை விரட்டும் முருங்கை

முருங்கை மரத்தில் கிடைக்கும் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமே.  அதிகச் சத்துக்கள் நிறைந்தது முருங்கைக் கீரை. அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்தக் கீரை, மிகவும் குளிர்ச்சித்தன்மை கொண்டது.

சத்துக்கள்: கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் சி, இரும்புச் சத்துகள், நார்சத்துக்கள் உள்ளன. அதிக அளவில் இருப்பவை இரும்புச் சத்தும், வைட்டமின் சியும்தான்.

பலன்கள்: இரும்புச்சத்தும் வைட்டமின் சியும் சேர்ந்த கலவை, ரத்தத்தை உற்பத்தி செய்யும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்து. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வாரம் இருமுறை சாப்பிட்டுவந்தால், முடி உதிர்தல் நிற்கும். இளநரையைப் போக்கும். கண் பார்வைத் திறன் அதிகரிக்கும். உடல்சூடு தணியும். உடல்நலத்தை அதிகரிக்கும்.

டிப்ஸ்: ரத்தசோகை பிரச்னை உள்ளவர்கள் வாரம் இருமுறை,  முருங்கைக் கீரை சூப் வைத்து, அதில் எலுமிச்சைச் சாறை சிறிதளவு சேர்த்து சாப்பிடலாம்.

கவனிக்க: கல்லீரலில் பிரச்னையிருப்பவர்களுக்கு செரிமானக் குறைபாடு இருக்கும். முருங்கையில் அதிகளவு நார்ச்சத்துக்கள் இருப்பதால், அவர்களால் இந்த உணவை ஜீரணிக்க முடியாது. மற்ற அனைவரும் சாப்பிடலாம். ஊட்டமளிக்கும் முளைக்கீரை

எளிதில் கிடைக்கக்கூடிய கீரை இது. பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கின்றன. இரண்டு வகைக் கீரைகளும் உடலுக்கு நல்லதுதான். இது குளிர்ச்சித்தன்மையுடையது. ஊட்டமளிக்கும் சத்துகள் இதில் மிகுதியாக உள்ளன.

சத்துக்கள்: கால்சியம், புரதம், வைட்டமின் ஏ, பி, மற்றும் இரும்பு, சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புக்கள், ஆக்சாலிக் அமிலம் இதில் நிறைவாக உள்ளன.

பலன்கள்: கண்களுக்கு குளிர்ச்சியூட்டி பார்வையைத் தெளிவாக்கும். மாலைக்கண் நோய்க்கு சிறந்த மருந்து. மூளை வளர்ச்சிக்கு உதவும். சருமத்துக்குக் கவசமாகும். பசியைத் தூண்டும். உடல் எடை அதிகரிக்கும். பலவீனமாக இருப்பவர்கள், அதிக உடல் சூடு கொண்டவர்கள் மற்றும் பித்த உடல் உள்ளவர்கள் இந்தக் கீரையை தாராளமாகச் சாப்பிடலாம்.

டிப்ஸ்: சிலர் வாய்ப்புண்ணால் அவதிப்படுவார்கள். முளைக்கீரையின் ஐந்து இலைகளை 100 மி.லி நீரில் கொதிக்கவைத்து,  நீர் பாதியாக சுண்டவிட வேண்டும். அந்த நீரில் வாய் கொப்பளித்தால், வாய்ப்புண் குணமாகிவிடும்.

கவனிக்க: இது குளிர்ச்சித்தன்மைகொண்டது என்பதால் ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள் தவிர்க்கவும்.

Adding a green leaf to your diet every day is good for your body. Green leaves are rich in vitamins and minerals. A green leaf is essential for children to grow healthy. Green leaves are also the best solution to anemia.

Ayurvedic doctor Shanthi Vijaypal and Nalla Keera Jagannathan explain the various benefits of green leaves, including the nature of the nutrients they contain, who can eat them, and who can avoid them.

Moringa that fights anemia

Everything found in the moringa tree is healthy for the body. Moringa green leaves are rich in nutrients. This green leaf, which is easily available to everyone, is very cooling.

Nutrients: Contains calcium, phosphorus, vitamins B and C, iron, and fiber. The most abundant are iron and vitamin C.

Benefits: The combination of iron and vitamin C produces blood. This is an excellent medicine for people with anemia. It increases immunity. Eating it twice a week will stop hair loss. It will prevent gray hair. It will improve eyesight. It will cool down the body. It will improve health.

Tips: People with anemia can eat drumstick soup twice a week and add a little lemon juice to it.

Note: People with liver problems will have digestive problems. Since drumsticks contain a lot of fiber, they cannot digest this food. Everyone else can eat it. Nourishing sprouts

This is a readily available spinach. It is available in green and red colors. Both types of spinach are good for the body. It is cooling. It is rich in nutritious nutrients.

Drumstick Tree spinach

Nutrients: It is rich in calcium, protein, vitamin A, B, and mineral salts including iron, sodium, potassium, and oxalic acid.

Benefits: It cools the eyes and makes vision clearer. It is an excellent medicine for night blindness. It helps in brain development. It protects the skin. It stimulates appetite. It increases body weight. People who are weak, have high body temperature and have a bile body can eat this leaf liberally.

Tips: Some people suffer from mouth ulcers. Boil five leaves of spinach in 100 ml of water and reduce the water to half. Gargling with this water will cure mouth ulcers.

Note: Asthma and sinus patients should avoid this as it is cooling.

Is it true that drinking coffee cures headaches?

High hemoglobin levels in the blood

Whar are the basis for a healthy life?