physical strength
physical strength
Listen to this article

physical strength- உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியம். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். ரத்தசோகை பிரச்னைக்கும் சிறந்த தீர்வு கீரைகள்தான்.

கீரைகளின் இயல்புத்தன்மை, அதில் அடங்கியுள்ள சத்துக்கள் என்னென்ன, யார் சாப்பிடலாம், யாரெல்லாம் தவிர்க்கலாம் என்பன உட்பட பல்வேறு பலன்களை விளக்குகின்றனர், ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால் மற்றும் நல்ல கீரை ஜெகன்னாதன்.

உடல் வலிமைக்கு அரைக்கீரை

மிகவும் குளிர்ச்சித்தன்மை வாய்ந்தது. எந்த வகை நோயாளிகளுக்கும் ஏற்றது. இலைகளுடன் தண்டுகளையும் சேர்த்து சாப்பிடலாம்.

சத்துக்கள்: புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் நிறைவாக உள்ளது.

பலன்கள்: உடல் வலுப்பெறும். ரத்தத்தை அதிகரிக்கும். பிரசவித்த பெண்களுக்கு உடனடி ஊட்டத்தை அளிக்கும். பால் அதிகம் சுரக்கச் செய்யும்.  நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். சோர்வு, உடல் வலியைப் போக்கி புத்துணர்வு தரும். ரத்த நாளங்கள் நன்கு செயல்படும். வாயுப்  பிரச்னையைப் போக்கும்.

Amaranth greens Spinach

  டிப்ஸ்: சின்ன வெங்காயம், தக்காளியை வதக்கி கீரை சேர்த்து வெந்ததும், உப்பு, புளி சேர்த்துக்கொள்ளவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, துவையலாக அரைத்தும் சாப்பிடலாம்.

கவனிக்க: குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைவருமே  சாப்பிடலாம். கண்களுக்கு பொன்னாங்கண்ணி

அனைத்து சூழல்களிலும் வளரும் தன்மைகொண்டதால், எந்தக் காலத்திலும் மிக எளிதாகக் கிடைக்கும். இதில் நிறைய வகைகள் இருந்தாலும் நாட்டுப் பொன்னாங்கண்ணியே சமையலுக்குப் பயன்படுகிறது. இந்தக் கீரை குளிர்ச்சித்தன்மை கொண்டது.

சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து, பீட்டாகரோட்டீன் உள்ளன. கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாது உப்புக்கள் உள்ளன.

பலன்கள்: சிறு குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பிரச்னை இருந்தால், இதைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிடுவதுடன், கண்களுக்குப் பயிற்சியும் செய்துவந்தால், பார்வைத்திறன் அதிகரிக்கும். கண்களில் நீர்வழிதல், கட்டி, தொற்று, மங்கலான பார்வை போன்ற கண் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் தீரும். மாலைக்கண் நோய்கூட குணமாகும். மூளை, நரம்புகள் சீராக இயங்கும். எலும்புகளும் வலிமை பெறும். சருமம் பொலிவுறும். கூந்தல் நன்றாக வளர உதவும்.

டிப்ஸ்: பொன்னாங்கண்ணி இலைகளின் சாறோடு, பசு வெண்ணெய் கலந்து, பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்தால், கண்கள் குளிர்ச்சி அடையும்.  

கவனிக்க: பொன்னாங்கண்ணி யாருக்கும் எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. அனைவரும் சாப்பிடலாம்.

Adding a green leaf to your diet every day is good for your body. Green leaves are rich in vitamins and minerals. A green leaf is essential for children to grow healthy. Green leaves are also the best solution for anemia.

Ayurvedic doctor Shanthi Vijaypal and Nalla Keera Jagannathan explain the various benefits of green leaves, including the nature of the nutrients they contain, who can eat them, and who can avoid them.

Half a green leaf for body strength

Very cooling. Suitable for all types of patients. You can eat the leaves and stems together.

Nutrients: Rich in protein, fat, starch, potassium, magnesium, and calcium.

Benefits: Strengthens the body. Increases blood. Provides immediate nourishment to women who have given birth. Increases milk secretion. Relieves nervous tension. Relieves fatigue and body pain and gives refreshment. Blood vessels function well. Relieves gas problems.

Tips: Fry small onions, tomatoes, add spinach and when it is cooked, add salt and tamarind. Roast urad dal and dried chilies, mix everything together, grind it and eat.

Note: Everyone, including children, adults and patients, can eat it. Ponnankanni for eyes

Since it grows in all environments, it is easily available at any time. Although there are many varieties of it, only the native Ponnankanni is used for cooking. This spinach has a cooling effect.

Nutrients: Contains vitamin A, B, C, fiber, beta-carotene. Contains mineral salts including calcium and iron.

Benefits: If young children have myopia, if they continue to eat this for 48 days and exercise their eyes, their eyesight will improve. All eye-related problems like watery eyes, swelling, infection, blurred vision will be solved. Even cataracts will be cured. The brain and nerves will function smoothly. The bones will also become strong. The skin will become radiant. It will help hair grow well.

Tips: If you mix the juice of Ponnankanni leaves with cow ghee, dip a cotton ball in it and place it on the eyes, the eyes will feel cool.

Note: Ponnankanni does not cause any side effects to anyone. Everyone can eat it.

Mental health counselor say on Valentine’s Day

Tips for Wearing a helmet Hygiene!

What if I take birth control pills?