Girl attend age- வயதுக்கு வரும் பெண்களுக்கு பச்சை முட்டை, நல்லெண்ணெய், உளுத்தங்களி கொடுக்கலாமா?
வயதுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு உளுத்தங்களி, பச்சை முட்டை, நல்லெண்ணெய் போன்றவற்றைக் கொடுக்கும் வழக்கம் சில இனத்தாரிடம் இருக்கிறது. இது எந்த அளவுக்குச் சரியானது… ஒவ்வொரு மாதம் பீரியட்ஸ் வரும்போது இந்த உணவுகளைக் கொடுக்க வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

வயதுக்கு வந்த பெண் குழந்தைகளுக்கு உளுத்தங்களி கொடுப்பது, பச்சை முட்டை, நல்லெண்ணெய் கொடுப்பது காலங்காலமாகத் தொடர்கிறது.
உடல்ரீதியான மாற்றம் நிகழ்கிற இந்தத் தருணத்தில், புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. உளுத்தங்களி, முட்டை போன்றவற்றில் புரதச்சத்து அதிகம். ஆனால், இதை பூப்பெய்தும்போது மட்டும் கொடுத்தால் பிரச்னையில்லை.
உடல்ரீதியான மாற்றம் நிகழ்கிற இந்தத் தருணத்தில், புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. உளுத்தங்களி, முட்டை போன்றவற்றில் புரதச்சத்து அதிகம். ஆனால், இதை பூப்பெய்தும்போது மட்டும் கொடுத்தால் பிரச்னையில்லை.
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதாக நினைத்துக்கொண்டு, இத்தகைய உணவுகளைத் தொடர்ந்து கொடுத்து வந்தால், பெண் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. சிலர் நல்லெண்ணெய் கொடுப்பார்கள். இந்தப் பருவத்தில் புரதச்சத்துள்ள உணவுகள்தான் பிரதானமாகக் கொடுக்கப்பட வேண்டியவை. கொழுப்பு நிறைந்த உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். நல்லெண்ணெய் போன்ற உணவுகள் கொழுப்பை அதிகரித்து, எடையையும் கூட்டுபவை.

பருவமெய்திய பெண்களுக்கு கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளைக் கொடுப்பதால், சரியாக வந்துகொண்டிருக்கும் பீரியட்ஸ் சுழற்சி முறைதவறிப் போக வாய்ப்பு உண்டு. பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை வரவும் வாய்ப்பு உண்டு.
ஹார்மோன்களின் சமநிலை மாறும். அதன் பக்கவிளைவாக வேறு பிரச்னைகள் வரும். அதையெல்லாம் தவிர்க்க, சரிவிகித உணவுகள், உடற்பயிற்சிகள் போன்றவற்றில் சரியாக இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான பெற்றோரும், பெண் குழந்தைகள் வயதுக்கு வந்ததும், அத்தனை நாள்கள் ஆக்டிவ்வாக இருந்த ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பல விஷயங்களில் இருந்தும் அவர்களை நிறுத்திவிடுகிறார்கள்.
இது மிகவும் தவறு. உண்மையில், இந்தப் பருவத்தில்தான் அவர்களுக்கு உடலியக்கம் அதிகம் தேவை. எனவே, விளையாட்டு உள்ளிட்ட விஷயங்களை நிறுத்த வேண்டாம். ஸ்போர்ட்ஸ் ஆர்வம் இல்லாத பெண் குழந்தைகளுக்கு உடற்பயிற்சிகளைச் செய்ய அறிவுறுத்த வேண்டும்.

Can we give raw eggs, sesame oil, and urad dal to women of childbearing age attend?
Some ethnic groups have a custom of giving urad dal, raw eggs, and urad dal to women of childbearing age. How correct is this… Should we give these foods every month when their periods start?
Answers Mala Raj, a specialist in women’s health and infertility treatment from Chennai.
Giving urad dal, raw eggs, and urad dal to women of childbearing age has been going on for ages.
At this time of physical change, it is necessary to give protein-rich foods. Urad dal, eggs, etc. are high in protein. However, there is no problem if you give them only when they are in puberty.
At this time of physical change, it is necessary to give protein-rich foods. Eggs, lentils, etc. are high in protein. However, there is no problem if you give them only when they are in bloom. If you think that you are caring for the health of the children and continue to give them such foods, there is a chance that the body weight of the girls will increase.

Some people give them refined oil. Protein-rich foods should be the main ones to be given during this season. Fatty foods should be avoided. Foods like refined oil increase fat and also increase weight.
By giving foods high in fat to pubescent girls, there is a chance that their regular period cycle will go wrong. There is also a chance of developing PCOD. The balance of hormones will change. Other problems will come as a side effect of this.
To avoid all that, you should be correct in terms of balanced diet, exercise, etc. But, most parents, when their girls reach puberty, stop them from doing many things, including sports, that they were always active in. This is very wrong. In fact, it is during this period that they need the most physical activity. So, do not stop doing things, including sports. Girls who are not interested in sports should be advised to do exercises.
How to know symptoms of Wheezing?
How to know symptoms of Vaginal Cancer?
How to know symptoms of Low Sperm Count?