Stomach,face,hair
Stomach,face,hair
Listen to this article

Stomach, face, hair- Curd: வயிறு, முகம், தலைமுடி… மூன்றுக்கும் ஃப்ரெண்ட் தயிர்!

யிர்… உயிர் காக்கும் ஆரோக்கியக் கூறுகள் அடங்கிய உணவுப்பொருள். புரோபயாடிக் நிறைந்த தயிரில் துத்தநாகம், வைட்டமின் இ, பாஸ்பரஸ் ஆகியவை இருக்கின்றன. கெட்டித் தயிரைச் சாப்பிட்டால் ஆயுள் கெட்டிதான். எப்படி என்கிறீர்களா?

தயிர் உள்ளே…

தினசரி தயிர் சாப்பிட்டால், சீக்கிரம் செரிமானம் ஆகும்.

நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.

ஊட்டச்சத்துக்களை உடல் கிரகிக்க உதவும்.

ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தி இதயத்தைப் பாதுகாக்கும்.

yogurt

எலும்பு மற்றும் பற்களுக்குத் தேவையான கால்சியம் கிடைக்கவும் உதவும்.

தயிரை உடலுக்கு வெளியே பயன்படுத்தினாலும் எக்கச்சக்க பலன்கள் கிடைக்கும்!

தயிருடன் மஞ்சள், சந்தனம், வெந்தயத்தூள் கலந்து சருமத்தில் பூசும்போது முகத்தில் படிந்த கருமை போயே போச்சு!

தழும்புகள், முகப்பருக்களுக்கு டாட்டா!

எப்போதும் முகத்தில் எண்ணெய் வழிகிறது என்று வருத்தப்படுபவர்கள் தயிருடன் பூசு மஞ்சள்தூளையும் சந்தனத்தையும் கலந்து பூசி மென்மையாக மசாஜ் செய்துவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுங்கள். அப்புறம் ‘அட, எண்ணெயெல்லாம் எங்கே போச்சு’ என்று ஆச்சர்யப்படுவீர்கள்

yogurt

தயிரும் தலை முடியும்…

தயிரைத் தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால், பொடுகு நீங்கும். முடியில் பளபளப்பு கூடும்.

மூன்று டேபிள்ஸ்பூன் தயிர், இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய், நான்கு டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி பஞ்சு மாதிரி மென்மையாக இருக்கும்.

yogurt

அரை கப் தயிருடன் இரண்டு டேபிள்ஸ்பூன் பாதாம் எண்ணெய், இரண்டு முட்டையை நன்கு அடித்துச் சேர்த்துத் தலையில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளித்தால் முடி பொலிவாக இருக்கும்.

முடி உதிர்வதுதான் உங்களுக்கு முக்கியப் பிரச்னையா? கவலையை விடுங்க! ஒரு கப் தயிருடன், சிறிது வெந்தயம் சேர்த்து அரைத்துத் தலையில் பூசி, 15 நிமிடங்கள் ஊறவைத்துக் குளிங்க. இனி உங்க முடி கம்பி மாதிரி செம ஸ்ட்ராங்கா இருக்கும்.

Curd: Stomach, face, hair… Curd is a friend to all three!

Curd… A food that contains life-saving health components. Probiotic-rich curd contains zinc, vitamin E, and phosphorus. Eating curd increases your lifespan. How do you say that?

Inside curd…

Eating curd daily speeds up digestion.

Improves immunity.

Helps the body absorb nutrients.

Controls blood pressure and blood cholesterol levels and protects the heart.

It also helps in obtaining the calcium needed for bones and teeth.

Even using curd externally can yield many benefits!

When curd is mixed with turmeric, sandalwood, and fenugreek powder and applied to the skin, the dark spots on the face disappear!

Great for scars and acne!

Those who are always worried about oil on their face, apply a paste of curd, turmeric powder and sandalwood, massage gently and wash your face with cold water. Then you will wonder, ‘Oh, where did all the oil go?’

Curd can also be used for hair…

Applying curd to your head and soaking it for an hour before bathing will get rid of dandruff. Your hair will become shiny.

Mix three tablespoons of curd, two tablespoons of coconut oil, and four tablespoons of aloe vera gel and apply it to your head. If you bathe after half an hour, your hair will be soft like cotton.

Mix half a cup of curd, two tablespoons of almond oil, and two eggs, beat well and apply it to your head. If you bathe after half an hour, your hair will be shiny.

Is hair loss your main problem? Stop worrying! Mix a cup of yogurt with some fenugreek seeds, grind it, apply it on your scalp, leave it for 15 minutes and wash it off. Now your hair will be as strong as a wire.

Low calorie, No cholesterol, Cancer control fruit

Beauty Tips usage of Orange and and Senna

herbal Hair Care balms for hair growth!