vaginal discharge
vaginal discharge
Listen to this article

vaginal discharge-சிறுநீரகக்கல் முதல் வெள்ளைப்படுதல் வரை… உதவி செய்யும் முள்ளங்கி!

குறைந்த விலையில் நிறைந்த சத்துகளைத் தரும் காய்கறிகளில், முள்ளங்கிக்குத்தான் முதல் இடம். அன்றாட உணவில் தவறாது இடம் பிடிக்கும் காய் இது. முள்ளங்கியின் மகத்துவத்தை அறிந்து, பீட்சா, பர்கர், சான்ட்விச் போன்ற வெளிநாட்டு உணவுகளிலும், முள்ளங்கியைத் துருவிப் பயன்படுத்துகின்றனர். முள்ளங்கியின் மருத்துவப் பலன்களைப் பற்றிக் காரைக்குடி சித்த மருத்துவர் சி.சொக்கலிங்கம் பிள்ளையிடம் கேட்டோம்.

‘முள்ளங்கியில் சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி, மஞ்சள் முள்ளங்கி, சுவர் முள்ளங்கி என நான்கு வகைகள் உண்டு. இதில், நாம் அதிகம் பயன்படுத்துவது வெள்ளை, சிவப்பு முள்ளங்கி. சிறுநீரகக் கல்லைப் போக்குவதில் முள்ளங்கிக்கு பெரும் பங்கு உண்டு.

தாகத்தைத் தணிக்கும். பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னையைத் தீர்க்கவல்லது. முள்ளங்கியை சமைக்கும்போது, நாம் பெரும்பாலும் அதனுடைய கீரையைப் பயன்படுத்துவது இல்லை. முள்ளங்கி வாங்கும்போதே அதன் கீரையோடு வாங்குவது நல்லது. மதிய உணவில், முள்ளங்கிக் கீரையில் பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டுவந்தால், மூட்டுவலி, தசைவலி நீர்க் கடுப்பு, எரிச்சலைக் கட்டுப்படும்.

அதேபோல், மார்பக நோய்களைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இந்தக் கீரைக்கு உண்டு. சிலர், முள்ளங்கியை பச்சையாகச் சாப்பிடுவார்கள். இதனால், தொண்டையில் எரிச்சல், கரகரப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. வேகவைத்துச் சாப்பிடுவது இந்தப் பிரச்னை வராமல் தடுக்கலாம்.

ஆண்களுக்கு:

நீர்த்தடத்தில் ஏற்படக்கூடிய நீர் எரிச்சல், நீர் குத்தல், சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுதல், உயிரணுக்கள் வெளியேறுவது போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு முள்ளங்கிதான் மருந்து. ஆண்களின் தவறான பழக்கத்தினால் ஏற்படும் நோய்கள், அடிக்கடி சிறுநீர் கழித்தல், தகாத உறவினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மீட்டெடுக்க, முள்ளங்கியைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பெண்களுக்கு:

பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை வாய்ப்புண், மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய அதிக உதிரப்போக்கு ஆகியவற்றைக் கட்டுபடுத்தக்கூடிய தன்மையும் முள்ளங்கிக்கு உண்டு. தவிர, வயிற்று எரிச்சல், சிறுநீரகக்கல், இருமல், பல்வலி போன்றவற்றுக்கும், முள்ளங்கி சிறந்த ஒரு உணவு.

தூக்கமின்மையாலும் உடல் மெலிந்து இருப்பவர்கள் தினமும் முள்ளங்கியை உண்டுவர, உடல் வலிமை பெறும். உடலில் உள்ள சத்துக்கள் வெளியேறுவதைத் தடுக்கவும், சிறுநீரை சீராக்கும் தன்மையும் இந்த முள்ளங்கிக்கு உண்டு.

குழந்தைகளுக்கு கமுள்ளங்கி அல்வா

முள்ளங்கியை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அல்வா செய்து கொடுக்கலாம். முள்ளங்கியை நன்றாகத் துருவி குக்கரில் வேகவைக்கவும். இதனுடன் சமஅளவு நாட்டு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து உரலில் இடிக்கவும். நல்ல மிருதுவாகும். முந்திரிப்பருப்பு, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கும்போது, சிறிது ஏலக்காய், நெய் சேர்க்கவும். முள்ளங்கி அல்வா ரெடி.

vaginal discharge

From kidney stones to vaginal discharge… Radish helps!

Radish is the first among the vegetables that provide nutrients at a low price. This vegetable is a must-have in everyday meals. Knowing the greatness of radish, people also use grated radish in foreign dishes like pizza, burgers, and sandwiches. We asked Karaikudi Siddha doctor C. Sokkalingam Pillai about the medicinal benefits of radish.

‘There are four types of radishes: red radish, white radish, yellow radish, and wall radish. Of these, we use white and red radishes the most. Radish plays a major role in removing kidney stones. It quenches thirst. It can solve menstrual problems in women.

When cooking radish, we often do not use its greens. It is better to buy radishes with their greens while buying them. If you cook radish greens with lentils for lunch, it will control joint pain, muscle pain, water retention, and irritation. Similarly, this green is also known to control breast diseases. Some people eat radishes raw. Due to this, there is a possibility of irritation in the throat and hoarseness. Eating them boiled can prevent this problem from occurring.

vaginal discharge

For men:

Radish is the medicine for those who have problems such as water irritation in the urinary tract, water retention, blood leakage during urination, and cell leakage. Regular consumption of radishes can be beneficial in recovering from diseases caused by bad habits in men, frequent urination, and the effects of inappropriate sex. For women:

Radish also has the ability to control vaginal discharge, cervical cancer, and excessive bleeding during menstruation. Apart from that, radish is an excellent food for stomach irritation, kidney stones, cough, toothache, etc. People who are thin due to lack of sleep should eat radish every day, and their body will gain strength. This radish also has the property of preventing the loss of nutrients in the body and regulating urine.

Radish Halwa for Children

Children who refuse to eat radish can be given Halwa. Grate the radish well and boil it in a cooker. Add equal amount of jaggery or sugar to it and grind it into a paste. It will be very smooth. Add cashew nuts and raisins and stir it until it is smooth, add a little cardamom and ghee. Radish Halwa is ready.

Weight loss-What is the way to control cravings?

What fruits should and should not be eaten by people with diabetes?

is soaked in fenugreek good for the body?