Shocking video; What does the doctor say? `நடனமாடி கொண்டிருக்கும்போதே பெண் மரணம்!’ – அதிர்ச்சி வீடியோ; மருத்துவர் சொல்வதென்ன?
நடனம் ஆடிக்கொண்டு இருக்கும்போதே, திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து இறந்த பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்தவர் பரிணீதா ஜெயின். இவர் எம்.பி.ஏ பட்டதாரி. இவர் தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொள்ள விதிஷா சென்றுள்ளார். அங்கே திருமண நிகழ்ச்சியில் பரிணீதா நடனம் ஆடிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று மயங்கி மேடையிலேயே சுருண்டு விழுந்திருக்கிறார்.
இவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றப்போது, இவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் இவர் இறந்துள்ளார்.
இவர் நடனமாட ஆட மயங்கி விழும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி, மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக, விளையாடும் போது, நடனமாடும் போது, உடற்பயிற்சி செய்யும்போது…என மயங்கி விழுந்து மரணமடையும் நிகழ்வு அதிகரித்து விட்டன.
‘உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமாவது’ குறித்து, முன்பு, விகடன் இணையதளத்தில் வெளியான கட்டுரை ஒன்றில், இது சம்பந்தமாக இதய மருத்துவர் கூறியிருப்பதாவது, “அவர்களுக்கு அந்த செயல் செய்துக்கொண்டிருக்கும்போதே நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டு இருக்கக்கூடும். ஆனால், அதை உணர்வதற்கு முன்பே மரணம் நிகழ்ந்திருக்கலாம்.
இளம் வயதினருக்கு நடனம், விளையாட்டு, உடற்பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்படுவது என்பது கணிக்க முடியாத ஒன்று. அவர்களின் நெஞ்சுப் பகுதியில் சிறிது வலி ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவமனையை நாடுவதே சிறந்தது.

மாரடைப்பு நிகழ்வதில் மூன்று விதங்கள் உள்ளன. முதலாவது, ரத்தக்குழாயில் திடீரென அடைப்பு ஏற்படுதல். ஏற்கெனவே மிதமான அளவில் சில இடங்களில் அடைப்புகள் இருந்திருக்கலாம். குறிப்பிட்ட அந்த செயல் செய்யும்போது அந்த அடைப்புகளில் அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
உடலில் பொட்டாசியம் குறைபாடு ஏற்படும்போது இதயம் இயங்குவதில் பிரச்னை ஏற்பட்டு மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. மூன்றாவது வகையானது மிகவும் அரிதானது. அதாவது பெருந்தமனியில் ஏற்படும் அழுத்தம் அல்லது முறிவு காரணமாக மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவும் திடீர் மாரடைப்பு ஏற்படலாம்” என்று விளக்கியுள்ளார்.
`Woman dies while dancing!’ – Shocking video; What does the doctor say?
A video of a woman who suddenly fainted and died while dancing is currently going viral on social media.
Parineeta Jain is from Indore, Madhya Pradesh. She is an MBA graduate. She had gone to Vidisha to attend a relative’s wedding. While Parineeta was dancing at the wedding, she suddenly fainted and collapsed on the stage.
When she was rescued and taken to a private hospital, it was revealed that she had suffered a heart attack and fainted. She died shortly after reaching the hospital.
The video of her fainting while dancing has now become a trend on social media and has shocked people.
Recently, there has been an increase in the number of people who faint while playing, dancing, exercising… and dying.
Regarding ‘heart attack and death while exercising’, in an article published on the Vikatan website, a cardiologist said in this regard, “They may have felt pain in the chest while they were doing that activity. But death may have occurred before they realized it.
It is unpredictable for young people to have a heart attack while dancing, playing sports, or exercising. Even if they feel a little pain in their chest, it is best to seek medical attention immediately.
There are three types of heart attacks. The first is a sudden blockage in a blood vessel. There may already be moderate blockages in some places. When doing that particular activity, pressure is placed on those blockages and a heart attack is possible.
When there is a deficiency of potassium in the body, there is a possibility of a heart attack due to problems with the functioning of the heart. The third type is very rare. That is, a heart attack is possible due to pressure or rupture in the aorta. This can also cause sudden heart attacks,” he explained.
How to know symptoms of Wheezing?
How to know symptoms of Vaginal Cancer?
How to know symptoms of Low Sperm Count?