Cancer risk
Cancer risk
Listen to this article

Cancer risk – 9 பேரில் ஒருவருக்கு கேன்சர் ரிஸ்க்… என்னதான் காரணம்?

குழந்தை பேறு தொடர்பான மருத்துவமனைகள், நீரிழிவுக்கான மருத்துவமனைகளையடுத்து சமீப சில வருடங்களாக எங்குப் பார்த்தாலும் கேன்சர் மருத்துவமனைகள் கண்ணில்பட்டு பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் புற்றுநோய் மருந்தியல் துறையின் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் டாக்டர் கண்ணன் பேசுவது, நம் பதற்றத்தை ஆற்றுப்படுத்துவதுபோல இருக்கிறது.

”புகை, புகையிலை, ஆல்கஹால், சுற்றுச்சூழல், கதிர்வீச்சு, மரபணு, வைரஸ் என இதுவரை கேன்சர் வருவதற்கான காரணங்களாகக் கண்டறியப்பட்ட விஷயங்களைத்தாண்டி, இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல காரணங்கள் புற்றுநோயின் பின்னணியில் இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.

20 வயதில் கேன்சர் அட்வான்ஸ் ஸ்டேஜில் வந்து நிற்பவர்களைப் பார்த்தால் மனம் பதறுகிறது. நாம் எந்த இடத்தில் தவறு செய்கிறோம்? சாப்பிடும் உணவா, சூழலா, ரசாயன உரமா, பூச்சிக்கொல்லிகளா… எதைத் தவிர்த்தால் கேன்சர் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியவில்லை. எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத இளம் தலைமுறைக்கு ஏன் இந்த நோய் வருகிறது என்பதைக் கண்டறிந்துவிட்டால், புற்றுநோயையே வராமல் தடுக்க முடியும்.

கேன்சர் வருவதற்காகப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், செல்களில் ஏற்படுகிற மாற்றங்கள்தான் கேன்சருக்கான உடனடி காரணம். செல்களில் ஏற்படுகிற மாற்றங்களைச் சரி செய்துகொள்கிற திறமை நம் உடம்புக்கே உண்டு. செல்கள் பிரியும்போது, சரி செய்துகொள்ள முடியாத அளவுக்கு அதில் பிரச்னை வரும்போதுதான் அவை கேன்சர் செல்லாக வளர ஆரம்பிக்கிறது” என்றவர் தொடர்ந்தார்.

”இந்திய மருத்துவ ஆய்வு இதழில் (Indian Journal of Medical Research) வெளிவந்த தரவுகளின்படி, ஒரு லட்சம் பேரில் 100 நபர்களை வாழ்நாள் முழுக்க அனலைஸ் செய்யும்போது, அதில் 9 பேரில் ஒருவருக்கு, அவருடைய வாழ்நாளில் கேன்சர் வரக்கூடிய ரிஸ்க் இருக்கிறது. அதற்காக, கட்டாயம் வரும் என்று சொல்ல முடியாது. நல்ல உணவு, வாழ்வியல் மாற்றங்களைச் சரிசெய்தால், இந்த ரிஸ்க்கை குறைக்க முடியுமா என்று ஆராய்ந்து வருகிறோம்” என்கிறார் டாக்டர் கண்ணன்.

One in 9 people are at risk of cancer… What is the reason?

After maternity hospitals and diabetes hospitals, cancer hospitals have been popping up everywhere in the last few years, causing anxiety. Dr. Kannan, Professor and Head of the Department of Oncology at Rajiv Gandhi Government Hospital, seems to be calming our anxiety.

”Beyond the factors that have been identified as the causes of cancer so far, such as smoking, tobacco, alcohol, environment, radiation, genes, and viruses, there are many reasons behind cancer that have not yet been discovered. Research to find them is ongoing.

It is heartbreaking to see people who are diagnosed with advanced cancer at the age of 20. Where are we making mistakes? Is it the food we eat, the environment, chemical fertilizers, pesticides… It is not possible to say exactly what can be avoided to reduce the number of cancers. If we find out why this disease is occurring in the young generation who have no bad habits, we can prevent cancer from occurring.

Cancer risk

Although many reasons have been given for the occurrence of cancer, the immediate cause of cancer is the changes that occur in the cells. Our body has the ability to correct the changes that occur in the cells. When cells divide, they start growing into cancer cells only when there is a problem in them that cannot be corrected,” he continued.

“According to data published in the Indian Journal of Medical Research, when 100 people out of a lakh are analyzed throughout their lives, one in 9 of them has a risk of developing cancer in their lifetime. However, it cannot be said that it will definitely occur. We are investigating whether this risk can be reduced by adjusting good diet and lifestyle changes,” says Dr. Kannan.

Which Blood Group is Suitable for Whom?

Hormones are responsible for all the changes in women.

Beauty and health lie hidden in a morning bath