Mental health issues and Instagram IDs-மனநலப் பிரச்னைகளும் இன்ஸ்டாகிராம் ஐடிகளும்… என்ன நடந்துகொண்டிருக்கிறது சமூக வலைத்தளங்களில்..?
”மனநலம் குறித்த விழிப்புணர்வு ஒருபக்கம் பாசிட்டிவாக வளர்ந்துகொண்டிருக்க, மறுபக்கம் இல்லாத பிரச்னைகளை இருப்பதாகச் சொல்வது… சிறிய பிரச்னைகளைப் பெரிய மனநல பிரச்னையாக நினைத்துக்கொள்வது என இந்த இளம் தலைமுறையினரிடம் மனநல பிரச்னைகளை ஹேண்டில் செய்வதில் சிக்கல் இருக்கிறது” என்கிற உளவியலாளர் சுஜித் ஜீவி, இதுதொடர்பாகப் பேசினார்.

”ஜெராக்ஸ் எடுக்க செல்கிறேன், ஸ்கூட்டி ஓட்ட பழகுகிறேன், ஜீபே அனுப்புகிறேன் என்று சில பிராண்ட்களின் பெயரை அந்த செயல்பாட்டிற்கான பெயராய் பேச்சு வழக்கில் மக்கள் நாம் உபயோகப்படுத்தி வருகிறோம். அதுபோலவே மனநலம் சம்மந்தப்பட்ட பிரச்னைகளையும் பொத்தாம்பொதுவாக, இவருக்கு Depression, இவருக்கு ஓசிடி (OCD), இவர் அடிக்ட் (addict) என்றெல்லாம் பேசுவது இப்போதைய சமூக வலைத்தள உலகில் சாதாரணமாக மாறி வருகிறது.
சில பிரபலங்களும் நேர்காணல்களில் நான் மிகவும் சுத்தம் பார்க்கக்கூடிய நபர் என்பதைச் சொல்வதற்குப் பதில் எனக்கு OCD என்று சொல்கிறார்கள். OCD என்பது அதீத சுத்தம் பார்ப்பது கிடையாது. அது ஒரு மனநல பிரச்னையின் வெளிப்பாடு. ஒருவருக்கு மனநல பிரச்னை உள்ளதா என்பதை மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களால்தான் கணிக்க இயலும். இது ஆபத்தான ட்ரெண்ட்!
இளைஞர்களும் அவர்களுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் அவர்களுடைய பெயர்களுக்கு முன்னால் உளவியல் பிரச்னைகளை பெருமையாக வைத்துக்கொள்ளும் ஆபத்தான ட்ரெண்டும் சகஜமாகி வருகிறது. உதாரணத்துக்கு, சைக்கோ கில்லர், சாடிஸ்ட், இன்ட்ரோவர்ட், ஆங்க் ஷியஸ் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிறார்கள். தாம் யாரென்பதை முழுமையாகத் தாமே உணர்வதற்கு முன்பே சமூக அழுத்தம் காரணமாகத் தன்னை விவரித்துக்கொள்ள இதுபோன்ற ஏதோ பெயர்களுக்குள்ளும், குழுக்களுக்குள்ளும் தம்மைப் பொருத்திக் கொள்கிறார்கள்.
சண்டைக்காட்சி பார்த்துச் சிரிப்பவர்கள் சாடிஸ்ட் என்றும், சிறிய அளவு மறதி வந்தாலும் அவர்களுக்கு அம்னீஷியா என்றும், ஒரு முறை மேடையில் பயந்தவர்களைப் பார்த்து இவனுக்கு பானிக் அட்டாக் என்றும் முத்திரை குத்துகிறார்கள். இதுவும் ஒரு ஆபத்தான போக்கே. தன்னுடைய மனநலப் பிரச்னைகள் பற்றி நண்பர்கள் கூறும் விஷயங்களைக் கேட்டுப் பயந்து கூகுளில் தேடிப் பார்த்து தனக்குப் பெரிய பிரச்னை இருப்பதாகத் தாமாகவே நினைத்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

ட்ரீட்மென்ட் கேப் (Treatment Gap)
தேசிய மனநல ஆரோக்கியக் கணக்கெடுப்பில் (NMHS) வெளிவந்த உண்மை என்னவென்றால், மனநலப் பிரச்னைகளான மனச்சோர்வு, பைபோலார் கோளாறு, மனப் பதற்றம், போதைப்பொருள் பயன்பாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 70-ல் இருந்து 92 சதவிகிதம் வரை அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வதே இல்லை என்பதுதான். இதை ஆங்கிலத்தில் ‘Treatment Gap’ என்று சொல்வார்கள். இதற்கு மனநலப் பிரச்னைகள் பற்றி மக்களிடம் இருக்கும் தவறான புரிதலும், மனத்தடையும் மற்றும் சமூகத்தில் மனநலப் பிரச்னை உள்ளவர்களை எவ்வாறு நடத்துவார்கள் என்கிற பயமும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
உடல்நலப் பிரச்னை வந்தால் அதில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவதை இப்போது சரியாகச் செய்து வரும் சமூகம், மனநலப் பிரச்னைகள் வந்தாலும் அதற்கான தேர்ச்சி பெற்ற மனநல மருத்துவர்கள், உளவியலாளர்களை அணுகி உரியச் சிகிச்சை பெற வேண்டியது அவசியம். சாமியார்களிடம் செல்வது, ஜோதிடர்களின் பேச்சைக் கேட்டுப் பரிகாரம் செய்வது என மனநலப் பிரச்னைகளைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது ஆரோக்கியத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அரசும் உதவுகிறது!
உடல்நலம், மனநலம், சமூக நலம் ஆகிய மூன்றையும் சரிவரப் பேணி காப்பதுதான் ஆரோக்கியம் என்று சொல்கிறது உலக சுகாதார அமைப்பு. ஆரோக்கியம் என்பது வெறும் நோய்கள் வராமல் இருப்பது மட்டும் கிடையாது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. இதற்காக ‘அரசின் இலவச தொலைப்பேசி எண் 14416 – நட்புடன் உங்களோடு மனநலச் சேவை’ போன்ற திட்டங்களும் உள்ளன. இதற்கு அழைப்பு விடுத்து மனநலப் பிரச்னைகள் இருக்கும் யார் வேண்டுமானாலும் இலவசமாக அதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். நல்ல உடல் மற்றும் மன நலமும் நமக்கு இருந்தால் நீண்ட ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இனிமேலாவது மனநலப் பிரச்னைகளைச் சரியாகக் கையாள்வோம் மக்களுக்கு மனநலம் பற்றிய மனத்தடைகள் நீங்க விழிப்புணர்வைப் பரப்புவோம்” என்றார்.
அரசின் இலவச தொலைப்பேசி எண் 14416-ஐ தொடர்பு கொண்டு, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தினோம். சைக்காலஜிஸ்ட் கெளதம் என்பவர் நம்முடன் பேசினார்.
”இந்த ஒன்றிய அரசின் சர்வீஸ் பெயர், டெலி மனாஸ் (Tele Manas – Tele Mental Health Assistance and Networking Across States). இது 24 மணி நேரம் செயல்படும். டோல் ஃப்ரீ நம்பர். இங்கே இருப்பவர்கள் அனைவருமே உளவியல் படித்த நிபுணர்கள்தாம். தொலைப்பேசி வழியாகவே உங்களுடைய மனநலம் தொடர்பான பிரச்னைகளுக்கு எங்களிடம் கவுன்சலிங் பெற்றுக்கொள்ளலாம். தற்கொலை எண்ணம் வருபவர்களுக்கும் கவுன்சலிங் வழங்குகிறோம்” என்றார்.
Mental health issues and Instagram IDs… What’s going on on social media?
“While awareness about mental health is growing positively on one hand, there is a problem in handling mental health issues among this young generation, such as saying that there are problems that do not exist on the other hand… thinking of small problems as big mental health issues,” said psychologist Sujith Jeevi, speaking in this regard.
“People have been using the names of some brands as the names of those activities, such as going to get a Xerox, practicing riding a scooty, sending a jeepney. Similarly, talking about mental health issues in general, such as this person has depression, this person has OCD, this person is an addict, etc., is becoming normal in the current social media world.
Some celebrities also say in interviews that they are a very clean person, instead of saying that they have OCD. OCD is not excessive cleanliness. It is a manifestation of a mental health problem. Only psychiatrists and psychologists can diagnose whether someone has a mental health problem. This is a dangerous trend!
The dangerous trend of young people proudly displaying their mental health problems in front of their names on their Instagram IDs is also becoming common. For example, they have names like Psycho Killer, Sadist, Introvert, Anxious, etc. Before they fully realize who they are, they fit themselves into such names and groups to describe themselves due to social pressure.
People who laugh at action scenes are called sadists, even if they get a small amount of forgetfulness, they are called amnesiacs, and people who have stage fright once are labeled as having a panic attack. This is also a dangerous trend. The number of people who are scared by what their friends say about their mental health problems and search Google and automatically think that they have a big problem.
Treatment Gap
The National Mental Health Survey (NMHS) revealed that 70 to 92 percent of people suffering from mental health problems such as depression, bipolar disorder, anxiety, and substance abuse do not seek treatment. This is called the ‘Treatment Gap’. The main reasons for this are the misunderstanding of mental health problems, mental barriers, and the fear of how people with mental health problems will be treated in society.
A society that is currently doing the right thing by consulting qualified doctors when it comes to health problems, it is necessary to consult qualified psychiatrists and psychologists when it comes to mental health problems. Not understanding mental health problems properly, such as going to preachers and listening to astrologers, and not taking treatment for them can have a huge impact on health.
The government is also helping!
The World Health Organization says that health is the proper maintenance of all three aspects of health, mental health, and social well-being. We all have a responsibility to realize that health is not just the absence of diseases. For this, there are programs like the ‘Government’s toll-free phone number 14416 – Friendly mental health service with you’. Anyone with mental health problems can call this and get free advice. There is no doubt that if we have good physical and mental health, we will have long health and happiness. At least from now on, let’s deal with mental health problems properly and spread awareness among the people to remove mental barriers about mental health,” he said.
We contacted the government’s toll-free phone number 14416 and pressed a number in Tamil. Psychologist Gautham spoke to us.
“The name of this Union government service is Tele Manas (Tele Mental Health Assistance and Networking Across States). It operates 24 hours a day. It is a toll-free number. All the people here are trained psychologists. You can get counseling from us for your mental health problems over the phone. We also provide counseling to those who are thinking of suicide,” he said.