Foot pain… கால் வலி… வெந்நீரில் பாதங்களை வைத்திருப்பது தீர்வு தருமா?
எனக்கு 45 வயதாகிறது. அடிக்கடி கால்களில், குறிப்பாக பாதங்களில் வலி வருகிறது. இதை பற்றி சொல்லும்போது பலரும் ‘வெந்நீரில் கால்களை சிறிது நேரம் வைத்திருந்தால் சரியாகிவிடும்’ என்பதையே தீர்வாகச் சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை…. எல்லோரும் இதைப் பின்பற்றலாமா?
பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்
பாத வலிக்கு கால்களை சிறிது நேரம் வெந்நீரில் வைத்திருக்கும் வழக்கம் பல வருடங்களாக நாம் பின்பற்றும் சிகிச்சை தான். அதில் நிறைய பலன்கள் உண்டு. அதே சமயம் அப்படிச் செய்யும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
நீங்கள் நீரிழிவு பாதிப்பு உள்ளவர் எனில், வெந்நீரில் கால்களை வைப்பதற்கு முன்பு உங்கள் உணர்ச்சி நரம்புகள் சரியாக வேலை செய்கின்றனவா என்று கவனியுங்கள். அடுத்து, கால்களில் ஏதேனும் புண்களோ, தொற்றோ இருந்தாலும் வெந்நீரில் கால்களை வைக்கக்கூடாது.
ஒருவேளை ஏதேனும் தொற்று ஆரம்ப நிலையில் இருந்தால், வெந்நீரில் கால்களை வைக்கும்போது, சருமத்தின் வழியே அது பரவ வாய்ப்பு உண்டு. அடுத்தது, வெந்நீரானது, உங்கள் கை பொறுக்கும் அளவு சூட்டில் இருக்க வேண்டும். அதாவது, 36 முதல் 38 டிகிரி வெப்பம் சரியானது. ஒரு நாளைக்கு 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் வெந்நீரில் கால்களை வைக்கக்கூடாது. அதற்கு மேல் வைத்தால் கால்கள் வீங்கலாம்.
வெந்நீரில் கால்களை வைப்பதால் உண்மையிலேயே பலன் கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்கும். பாதங்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் வலி குறையும். கால்களின் சருமத்தில் உள்ள அழுக்குகளும் கிருமிகளும் நீங்குவதால் தொற்று வருவது தவிர்க்கப்படும்.
வெந்நீரில் கூடுதலாக சில விஷயங்களைச் சேர்க்கும்போது பலன்கள் இன்னும் அதிகரிக்கும். சாதாரணமாக, நாம் உப்பு சேர்த்த வெந்நீரில் கால்களை வைத்திருப்போம். உப்பு, கிருமி நாசினியாகச் செயல்படுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். மருந்துக் கடைகளில் எப்சம் சால்ட் என ஒன்று கிடைக்கும்.
அது தசைகளைத் தளர்த்தி, நல்ல தூக்கத்தையும் வரவழைக்கும். அதே வெந்நீரில் கிருமி நாசினி சேர்த்து, கால்களை ஊற வைத்தால், மழைக்காலத் தொற்றுகளில் இருந்து காக்கும். எனவே, அளவோடு செய்வதன் மூலம் வெந்நீர் சிகிச்சை அற்புதமான பலன்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
இதையெல்லாம் தாண்டி, உங்களுக்கு கால் வலி பல நாள்களாகத் தொடர்கிறது என்றால், வெந்நீர் சிகிச்சையை மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்காமல், மருத்துவரை அணுகி, வலிக்கான காரணம் அறிந்து சரியான சிகிச்சையை மேற்கொள்வதுதான் சரியானது.
Will keeping your feet in hot water help?
I am 45 years old. I often get pain in my feet, especially in my feet. When talking about this, many people say that ‘keeping your feet in hot water for a while will get better’ as the solution. How true is that…. Can everyone follow this?
Answers Nithya Manoj, a rehabilitation and pain management doctor from Salem
The practice of keeping your feet in hot water for a while is a treatment that we have been following for many years. It has many benefits. At the same time, you need to be careful about some things while doing so.
If you are diabetic, check whether your sensory nerves are working properly before putting your feet in hot water. Next, if there is any ulcer or infection on your feet, you should not put your feet in hot water. If there is an initial infection, when you put your feet in hot water, it can spread through the skin. Next, the hot water should be as hot as your hand can handle. That is, 36 to 38 degrees Celsius is ideal. Do not soak your feet in hot water for more than 10 to 15 minutes a day. If you soak your feet for more than that, your feet may swell.
If you really want to get benefits from soaking your feet in hot water, then you definitely will. The pain will be reduced by increasing blood flow to the feet. The dirt and germs on the skin of the feet will be removed, preventing infections.
The benefits will be even greater when you add some additional things to the hot water. Normally, we soak our feet in hot water with salt. Salt acts as an antiseptic, so it gives good results. You can get something called Epsom salt in drugstores.
It relaxes the muscles and also induces good sleep. If you add an antiseptic to the same hot water and soak your feet, it will protect you from monsoon infections. Therefore, there is no doubt that hot water therapy can give wonderful results when done in moderation.
Beyond all this, if your foot pain persists for several days, it is best to consult a doctor to find out the cause of the pain and get the right treatment, rather than just continuing with hot water therapy.