urine
urine
Listen to this article

strange odor in the urine- சிறுநீரில் வித்தியாசமான வாடை… சர்க்கரைநோயின் அறிகுறியாக இருக்குமா?

என் வயது 40. சிறுநீர் கழிக்கும்போது சில சமயங்களில் ஒருவித மருந்து வாடை வருகிறது.  சில சமயங்களில் வேறு வேறு வாடை வருகிறது. இது சுகர் இருப்பதற்கான அறிகுறியா? சிறுநீர் வாடைக்கு என்ன காரணம்…. எந்த வாடை ஏன் ஏற்படுகிறது என்று ஒருவரால் கண்டுபிடிக்க முடியுமா?  இதற்கு சிகிச்சை அவசியமா?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த பெண்களுக்கான சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் நிவேதிதா

சிறுநீரில் வேறு வேறு வாடை அடிப்பதாகச் சொல்கிறீர்கள். மருந்து வாடை அடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.  வேறு ஏதேனும் உடல்நல பிரச்னைகளுக்காக மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா?, அப்படி சில மருந்துகள் சிறுநீரில் வாடையை ஏற்படுத்தலாம். வாடையோடு சேர்த்து வேறு ஏதேனும் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்று பாருங்கள்.

அதாவது, வாடை தவிர, சிறுநீரில் எரிச்சலோ, சிறுநீர் கழிக்கும்போது வலியோ, அடிவயிற்றில் வலியோ, சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறுவதோ, கலங்கலாக  வெளியூறுவதோ இருக்கிறதா என்று பாருங்கள். இப்படி எல்லாம் இருந்தால், உங்களுக்கு யூரினரி இன்ஃபெக்‌ஷன் இருக்கலாம் என சந்தேகப் படலாம். நாம் உண்ணும் உணவுகளும் சிறுநீரின் நிறம் மற்றும் மாற்றக்கூடும். உதாரணத்துக்கு, பீட்ரூட் சாப்பிட்டால் சிலருக்கு சிறுநீரின் நிறம் மாறும்.

urine

குறிப்பிட்ட உணவு அல்லது பானம் எடுத்துக்கொள்ளும் போதெல்லாம் சிறுநீரில் வாடையை உணர்கிறீர்களா என்று கவனியுங்கள். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறுநீர் கழிக்காதது இரண்டும் சிறுநீரின் நிறம் மற்றும் வாடையை மாற்றலாம்.

யூரின் ரொட்டீன் என்ற டெஸ்ட் எல்லா லேப்களிலும் செய்யப்படும். அதைச் செய்து பார்ப்பதன் மூலம், எப்படிப்பட்ட அணுக்கள் வெளியேறுகின்றன என்று தெரிந்து கொள்ளலாம். ரிசல்ட்டை பொறுத்து, தேவைப்பட்டால் அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட வேறு சோதனைகளைச் செய்து கொள்ளலாம்.

இன்ஃபெக்ஷன் இருப்பது உறுதியானால், மருத்துவரின் ஆலோசனையோடு அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

Urine has a strange smell… Can it be a sign of diabetes?

I am 40 years old. Sometimes when I urinate, I get a kind of medicinal smell. Sometimes I get a different smell. Is this a sign of diabetes? What is the cause of urine odor… Can someone find out which odor is causing it? Is it necessary to treat it?

Answered by Dr. Nivedita, a female urologist from Chennai

You say that urine has a different smell. You mentioned that it smells like medicine. Are you taking any other medicines for any health problems? Some of these medicines can cause urine odor. See if there are any other symptoms along with the odor.

That is, apart from the odor, see if there is any irritation in the urine, pain while urinating, pain in the lower abdomen, blood mixed with urine, or a foul smell. If all these are present, you may suspect that you may have a urinary infection. The foods we eat can also change the color of our urine. For example, eating beetroot can change the color of our urine for some people.

Pay attention to whether you notice a foul odor in your urine whenever you consume certain foods or drinks. Not drinking enough water and not urinating at regular intervals can both change the color and odor of your urine. A urine routine test is done in all labs. By doing it, you can find out what kind of cells are being excreted. Depending on the results, other tests, including an ultrasound, may be done if necessary. If an infection is confirmed, take the appropriate medications with the advice of a doctor.

Will soap and cream help for Pimples?

Does Constipation cause weight gain?

Hair Care 5 problems and solutions