4 கிலோ எடையில் பிறந்த குழந்தை… பின்னாளில் உடல்பருமன் பிரச்னை வருமா?
எனக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. குழந்தை 4 கிலோ எடையில் பிறந்தது. இது நார்மல் எடைதானா… குழந்தைகள் அதிக எடையில் பிறப்பது ஏன்… இதனால் பிற்காலத்தில் அவர்கள் உடல் பருமன் பிரச்னைக்கு ஆளாவார்களா?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
2.5 கிலோ முதல் 3.5 கிலோ வரை இருந்தால் பிறக்கும் குழந்தை சராசரி எடையில் இருப்பதாக தெரிந்துக் கொள்ளலாம். அந்த எடையானது குழந்தையின் அம்மா- அப்பாவின் உடல் அமைப்புக்கேற்ப மாறுபடலாம். உதாரணத்துக்கு, குழந்தையின் பெற்றோர் இருவருமே உயரமாக இருக்கும்பட்சத்தில், குழந்தையின் நீளமும் சற்று அதிகமிருக்கும்.
அதனால் எடையும் சற்று அதிகமிருக்கும். குழந்தையின் உயரத்தையே நாம் நீளம் என்று குறிப்பிடுகிறோம். சில குழந்தைகளுக்கு நீளமானது சாதாரணமாக இருந்து, எடை மட்டும் அதிகமாக இருக்கலாம். இந்த மாதிரி குழந்தைகளுக்கு பிற்காலத்தில் பிரச்னைகள் வரக்கூடும். வளர்ந்த பிறகு இந்தக் குழந்தைகள் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு.
சாதாரண உயரம் மற்றும் எடையில் உள்ள பெற்றோருக்கு, எடை அதிகமான குழந்தை பிறக்க பல காரணங்கள் இருக்கலாம். கர்ப்பகாலத்தில் தாய்க்கு ஏற்படும் நீரிழிவு அதில் முதன்மையானது. கர்ப்பகால நீரிழிவு ஏற்படவும் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் மிக முக்கியமானது, லைஃப்ஸ்டைல். தாயின் உணவுப்பழக்கம் முறையற்று இருப்பதுதான் காரணம்.
கார்போஹைட்ரேட் அதிகமாகவும் புரதச்சத்து குறைவாகவும் உள்ள உணவுகளைச் சாப்பிடுவது, உடற்பயிற்சிகளே இல்லாதது, கர்ப்பமாவதற்கு முன்பே உடல் பருமன் அதிகமாக இருந்தது, அதைக் குறைக்காமலேயே கர்ப்பம் தரித்தது, கர்ப்பம் தரித்த பிறகும் எடை அதிகரித்துக்கொண்டே போவது… இவையெல்லாம் கர்ப்பகால நீரிழிவுக்கான காரணங்களாக மாறலாம்.
கர்ப்பகாலத்தில் தாய்க்கு நீரிழிவு இருந்தால், குழந்தை அதிக எடையுடன் பிறக்கக்கூடும். அப்படிப் பிறக்கும் குழந்தைக்கு பிற்காலத்தில் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் வரலாம். உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்படலாம்.
ஒருவேளை இப்படி ஏதோ காரணத்தால் குழந்தை சராசரியைவிட அதிக எடையில் பிறந்துவிட்டாலும் கவலைப்பட வேண்டாம். குழந்தைக்கு தாய்ப்பாலை பிரதான உணவாகக் கொடுக்க வேண்டும். மாட்டுப்பால், பவுடர் பால் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். உடற்பயிற்சிகள் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்த வேண்டும். பிஸ்கட், சாக்லேட், கேக், பஃப்ஸ், ரஸ்க் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால் குழந்தை வளர்ந்த பிறகு உடல் பருமனால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியும்.
சில குழந்தைகள் பிறக்கும்போது எடை குறைவாகப் பிறப்பார்கள். இதை ‘ஃபீட்டல் குரோத் ரெஸ்ட்ரிக்ஷன்’ (Fetal growth restriction) என்று சொல்வோம். இப்படிப் பிறக்கும் குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் நீரிழிவு, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதைத்தான் ‘த பார்க்கர் ஹைப்போதெசிஸ்’ (The Barker hypothesis ) என்று சொல்கிறோம். எனவே, அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும், சராசரியைவிட குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடைய பிரச்னைகள் வரலாம்.
அதைத் தவிர்க்க, கர்ப்ப காலத்தில் அம்மாக்கள் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன்பே தன்னுடைய உடல் எடையில் அக்கறை செலுத்த வேண்டும். கர்ப்பம் தரித்த பிறகும் அதைக் கண்காணிக்க வேண்டும். இவற்றை எல்லாம் சரியாகப் பின்பற்றினாலே, குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறப்பார்கள்.
A baby born weighing 4 kg… Will he have obesity problems later?
I recently had a baby. The baby was born weighing 4 kg. Is this a normal weight… Why are babies born overweight… Will they suffer from obesity problems later?
Sridevi, a women’s health and obstetrician from Kinathukadavu, Coimbatore, answers
If the baby weighs between 2.5 kg and 3.5 kg, we can know that the baby is of average weight. That weight may vary according to the body structure of the child’s mother and father. For example, if both the child’s parents are tall, the child’s length will also be a little longer. Therefore, the weight will also be a little longer. We refer to the child’s height as length. Some children may have normal length but only a lot of weight. Such children may have problems later on. These children are likely to suffer from obesity problems when they grow up.
There are many reasons why parents of normal height and weight may give birth to an overweight child. Diabetes in the mother during pregnancy is the primary one. There are many reasons for gestational diabetes. The most important of them is lifestyle. The mother’s diet is irregular.
Eating foods high in carbohydrates and low in protein, lack of exercise, being overweight before pregnancy, getting pregnant without losing it, and gaining weight after pregnancy… All these can become causes of gestational diabetes. If the mother has diabetes during pregnancy, the child may be born overweight. The child born in such a way may have health problems later. It may be affected by obesity.
Even if the child is born overweight for some reason, do not worry. Breast milk should be given to the child as the main food. Cow’s milk, powdered milk, etc. should be avoided. Only breast milk should be given for the first six months.
Children should be taught healthy eating habits from an early age. They should be made aware of the need for exercise. They should avoid giving them processed foods such as biscuits, chocolate, cakes, puffs, and rusks. If you follow all this, you can avoid the child from becoming obese later in life.
Some children are born with low birth weight. We call this ‘Fetal growth restriction’. Children born in this way are also more likely to develop diabetes and heart diseases later in life. This is what we call ‘The Barker hypothesis’. Therefore, children born with high birth weight and children born with a weight lower than average may develop metabolic problems later in life.
To avoid this, mothers should be very careful during pregnancy. In fact, they should take care of their body weight before planning pregnancy. They should also monitor it after pregnancy. If all these are followed correctly, children will be born healthy.