Growing a mustache or beard -மீசை, தாடி வளரவில்லையா..? காரணம் இதுவாகவும் இருக்கலாம்!
மீசை இருந்தால்தான் ஆண் மகன் என இன்னும் சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் ‘மொழுமொழு’ பாலிவுட் ‘கான்’கள் ஸ்டைலுக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், சிலருக்கு மீசை வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும், ஒரு முடிகூட வளராமல் இருக்கும். ஒருவருக்கு மீசை, தாடி வளராததற்கு என்ன காரணம் என திருச்சியைச் சேர்ந்த நாளமில்லாச் சுரப்பியல் நிபுணர் ஸ்ரீராம் மகாதேவனிடம் கேட்டோம்.
”பூப்படைதல் என்பது பெண்களுக்கு மட்டும் இல்லை ஆண்களுக்கும்தான். ஆனால், ஆண்கள் பூப்படைவதை ஆரம்பத்தில் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டோம். பொதுவாக, ஆண்களுக்குக் குரல் மாறுவது, அரும்பு மீசை வளர்வது மட்டுமே பூப்படைந்ததற்கான அறிகுறிகள் கிடையாது. விந்துப்பையின் அளவை வைத்தும் ஒரு ஆண்மகன் பூப்படைந்தாரா, இல்லையா எனக் கண்டுபிடிக்க இயலும்.
ஆர்கிடோமீட்டர் என்னும் இயந்திரத்தின் உதவியுடன்தான் விந்துப்பையின் அளவைக் கண்டுபிடிக்க இயலும். இதில் இருந்து சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன்தான் முடியின் வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன. இந்த ஹார்மோன் நன்றாகச் சுரக்க, கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.
உடலில் உள்ள முடியின் வேர்கள் அனைத்திற்கும் ஒரு பூட்டு இருக்கும். இந்தப் பூட்டைத் திறந்தால்தான், முடி வெளியே வரும். இந்தப் பூட்டைத் திறக்கும் சாவிதான், டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன். இந்த ஹார்மோன் ரத்தத்தில் கலந்து வேரில் இருந்து முடியை வளரச் செய்கிறது.
ஒருவருக்கு மீசை, தாடி வளரவில்லை என்றால் அவருக்கு டெஸ்டோஸ்டீரான் சுரக்கும் அளவு குறைவாக இருக்கும் அல்லது வேரில் உள்ள ஓட்டைத் திறக்கப்படாமல் இருக்கலாம். இதனைக் கண்டுபிடிக்க ரத்தப் பரிசோதனை மூலம் ஹார்மோன் அளவைக் கண்டறிய வேண்டும்.
ஹார்மோன் சரியாக சுரக்கவில்லை என்றால், அந்த நபர் எவ்வளவு வயதானாலும் உடலின் மார்பு, அக்குள், முகம் என எந்த இடத்திலும் முடி வளராது. தவிர, அவருக்கு விதைப்பையின் அளவும் சிறியதாக இருக்கும். இப்படி, ஹார்மோன் பிரச்னை பண்ணுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1. விரையில் அடிபடுதல், அடிபட்டு வீங்கிப்போதல், விரையில் வேறு ஏதேனும் பிரச்னை உண்டாகுதல் போன்றவை. 2. பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் LH, FSH ஹார்மோன் அளவு குறைந்து காணப்படும்.
இந்தப் பிரச்னைகளுக்கு சுலபமாக தீர்வு காண, தேவையான பரிசோதனைகளைச் செய்து கொள்ளவேண்டும். பரிசோதனைகளின் முடிவுகளுக்கு ஏற்ப மருத்துவர்களின் அறிவுரைகளின் பேரில் ஊசி மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த ஹார்மோன் பிரச்னை காரணமாக, ஓர் ஆண் தாம்பத்திய வாழ்க்கைக்கு தகுதி அற்றவனாக இருந்தாலும், அதற்கான ஹார்மோன் ஊசிகளைச் செலுத்தி சுரக்க வைக்கலாம்.
ஆனால் ஓர் ஆணுக்கு தாம்பத்தியம், குழந்தைப்பிறப்பு எல்லா ஆண் தன்மையும் இருந்து முகத்தில் மீசை, தாடி வளரவில்லை என்றால், அந்த இடங்களில் உள்ள முடியின் வேர்களில் உள்ள பூட்டை, டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனால் திறக்க முடியாத அளவுக்கு இருக்கிறது என்று அர்த்தம். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் இதற்கென உள்ள மருத்துவரை நாடுங்கள்” என்கிறார் டாக்டர் ஸ்ரீராம் மகாதேவன்.
A mustache or beard is not growing..? This could be the reason!
Some people still think that a man is a man only if he has a mustache. Some people are changing to the style of the ‘muscular’ Bollywood ‘khans’. But, some people have the desire to grow a mustache, but not a single hair grows. We asked Sriram Mahadevan, an endocrinologist from Trichy, what is the reason for a person not growing a mustache or beard.
”Puffiness is not only for women but also for men. However, no one pays much attention to the fact that men have pubic hair at first. Generally, a change in voice and the growth of a bushy mustache are not the only signs of pubic hair. It is possible to find out whether a man has pubic hair or not by looking at the size of the testicles. The size of the testicles can be found with the help of a machine called an orchidometer. The hormone testosterone secreted from it supports hair growth. Fat is very important for the proper secretion of this hormone.
There is a lock on all the hair roots in the body. Only when this lock is opened, the hair comes out. The key to open this lock is the hormone testosterone. This hormone mixes with the blood and makes the hair grow from the root. If a person does not have a mustache or beard, he may have low testosterone secretion or the hole in the root may not open. To find out this, the hormone level should be determined through a blood test.
If the hormone is not secreted properly, no matter how old the person is, hair will not grow anywhere on the chest, armpits, or face. Apart from that, his scrotum will also be small. Thus, there are two reasons for hormonal problems. 1. Injury to the testicle, swelling due to injury, or any other problem with the testicle. 2. Decreased levels of LH and FSH hormones secreted by the pituitary gland.
To easily solve these problems, necessary tests should be done. According to the results of the tests, injections and medicines can be taken as per the advice of the doctors.
“Even if a man is not fit for sexual life due to this hormonal problem, he can be given hormone injections to stimulate it. But if a man has all the masculine qualities of sexual intercourse, childbirth and does not grow a mustache and beard on his face, it means that the locks at the roots of the hair in those places are too weak to be opened by the testosterone hormone. Those with this problem should consult a doctor who specializes in this,” says Dr. Sriram Mahadevan.