Do you have stress
Do you have stress
Listen to this article

Do you have stress? Take a test to find out!- உங்களுக்கு மன அழுத்தம் இருக்கா; இல்லையா..? கண்டுபிடிக்க ஒரு டெஸ்ட்!

‘டென்ஷன்’ – இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை. அந்த அளவுக்கு வீட்டிலும், வெளியிலும், எங்கேயும், எப்போதும் டென்ஷனும் நம்முடனே பயணிக்கிறது. டென்ஷனாக இருக்கும்போது, வேலையில் ஈடுபாடின்மை, நம்பிக்கையின்மை, தன்னம்பிக்கைக் குறைதல், தூக்கப்பிரச்னை என மன அழுத்தத்துக்கான அறிகுறிகளும் ஆரம்பமாகிவிடுகின்றன.

கடந்த இரண்டு வாரங்களில் உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு, கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதிலை மனதுக்குள் ‘டிக்’ செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா; இல்லையா என்பதை உங்கள் பதில்களே சொல்லி விடும்.

Do you have stress? Take a test to find out!

1. எந்த ஒரு காரியத்தையும் விருப்பமின்றி செய்தீர்களா?

அ. இல்லை, முழு ஈடுபாட்டுடன் செய்தேன்

ஆ. ஒரு சில நாள்கள் மட்டும் (1 முதல் 3 நாட்கள்)

இ. கிட்டத்தட்ட பாதிநாட்கள் (4 முதல் 7 நாட்கள்)

ஈ. பெரும்பான்மையான நாட்கள் விருப்பமின்றிச் செய்தேன் (8 முதல் 14 நாட்கள்)

2. மனம் தளர்ந்து, சோர்வாக இருப்பதாக உணர்ந்தீர்களா?

அ. இல்லை.

ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது.

இ. பாதி நாட்கள் அப்படித்தான்.

ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்.

Do you have stress? Take a test to find out!

3. தூங்குவதில் சிரமம் அல்லது போதுமான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டீர்களா?

அ. இல்லை

ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது

இ. பாதி நாட்கள் அப்படித்தான்

ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

4. சோர்வாகவோ அல்லது குறைந்த ஆற்றலுடன் இருப்பதுபோலவோ உணர்ந்தீர்களா?

அ. இல்லை

ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது

இ. பாதி நாள்கள் அப்படித்தான்

ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

Do you have stress? Take a test to find out!

5. பசியின்மை அல்லது அதிகமாகச் சாப்பிடுதல் பிரச்னை இருந்ததா?

அ. இல்லை

ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது

இ. பாதி நாட்கள் அப்படித்தான்

ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

6. தோல்வியுற்ற, தன்னைத்தானே வெறுக்கின்ற உணர்வு ஏற்பட்டதா?

அ. இல்லை

ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது

இ. பாதி நாள்கள் அப்படி ஏற்பட்டது

ஈ. கிட்டத்தட்ட எல்லா நாள்களும்

Do you have stress? Take a test to find out!

7. செய்தித்தாள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற சின்னஞ்சிறு விஷயங்களில்கூட சரியாக கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதா?

அ. இல்லை

ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது

இ. பாதி நாள்கள் அப்படி இருந்தது

ஈ. கிட்டத்தட்ட எல்லா நாள்களும்

8. மற்றவர்கள் கவனிக்கும் அளவுக்கு மிக மெதுவாகப் பேசுகிறீர்களா? வேலை செய்கிறீர்களா? அல்லது அளவுக்கு அதிகமாகப் பரபரப்புடன் இருக்கிறீர்களா?

அ. இல்லை

ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது

இ. பாதி நாள்கள் அப்படித்தான் நடந்துகொண்டேன்

ஈ. கிட்டத்தட்ட எல்லா நாள்களும்

Do you have stress? Take a test to find out!

9. வாழ்க்கையை வெறுத்து தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் மனநிலை ஏற்பட்டதா?

அ. இல்லை

ஆ. சில தினங்கள் அப்படித் தோன்றியது

இ. பாதி நாள்கள் அப்படி இருந்தது

ஈ. கிட்டத்தட்ட எல்லா நாள்களும்

(அ- 0, ஆ-1, இ-2, ஈ-3 மதிப்பெண்கள்)

மதிப்பெண் 0 – மனஅழுத்தம் இல்லாதவர் நீங்கள். இந்த நிலையைத் தக்கவைத்துக்கொண்டால், நீங்கள்தான் மகிழ்ச்சியான நபர்.

1 முதல் 4 வரை – மிகக் குறைந்த மனச்சோர்வு. மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய பயிற்சிகள் செய்யுங்கள். யோகா, தியானம், உடற்பயிற்சிகள் உங்கள் மனச்சோர்வை நீக்கப் பயன்படும்.

5 முதல் 14 வரை – மனச்சோர்வு. மன அழுத்தம் என்பது எல்லோருக்கும் தோன்றுவதுதான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். எனவே, மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

Do you have stress? Take a test to find out!

15 முதல் 19 வரை – சற்றே அதிகமான மனச்சோர்வு.

20 முதல் 27 வரை – அதிகமான மனச்சோர்வு- நீங்கள் உங்களையே காயப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு மனநிலை கொண்டவராக இருப்பதால் மனநல மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம்.

Are you stressed; or not..? A test to find out!

‘Tension’ – a word we use a lot today. So much so that tension travels with us at home, outside, everywhere, always. When we are stressed, symptoms of stress such as lack of commitment at work, lack of hope, loss of self-confidence, and sleep problems also begin. Based on your experience in the last two weeks, ‘tick’ the answer to the following questions in your mind. Your answers will tell you whether you are stressed; or not.

  1. Did you do any thing unwillingly?

A. No, I did it with full commitment

B. Only a few days (1 to 3 days)

C. Almost half the days (4 to 7 days)

D. I did it unwillingly most of the days (8 to 14 days)

  1. Did you feel discouraged and tired?

A. No.

B. It was like that for a few days.

E. Half the days.

E. Almost all the days.

  1. Have you had trouble sleeping or not getting enough sleep?

A. No

B. Some days

E. Half the days

E. Almost all the days

  1. Have you felt tired or have low energy?

A. No

B. Some days

E. Half the days

E. Almost all the days

  1. Have you had a problem with loss of appetite or overeating?

A. No

B. Some days

E. Half the days

E. Almost all the days

  1. Have you felt like a failure or self-loathing?

A. No

B. Some days

E. Half the days

E. Almost all the days

  1. Have you had trouble concentrating properly on even the smallest things, such as reading the newspaper or watching television?

A. No

B. Some days it was like that

E. Half the days it was like that

E. Almost all the days

  1. Do you speak too slowly for others to notice? Do you work? Or are you too excited?

A. No

B. Some days it was like that

E. Half the days I behaved like that

E. Almost all the days

  1. Have you ever felt like you hated life and wanted to hurt yourself?

A. No

B. Some days it seemed like that

E. Half the days it was like that

E. Almost all the days

(A- 0, B-1, E-2, E-3 scores)

Score 0 – You are not depressed. If you maintain this state, you are the happiest person.

1 to 4 – Very low depression. Do simple exercises that reduce stress. Yoga, meditation, exercise can be used to relieve your depression.

5 to 14 – Depression. Don’t be indifferent to the fact that stress happens to everyone. Therefore, it is better to consult a psychiatrist.

  • From 15 to 19 – Slightly more depressed.

20 to 27 – Severe depression – You are in a state of depression that makes it very important to see a psychiatrist and seek treatment.

Hair Care-Prevents hair loss from dryness

How to know Tips for the solution to skin problems

Can you drink ABC juice every day?