Wearing tight clothes-எப்போதும் இறுக்கிப் பிடிக்கும் உடை… சரிதானா?
உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை விரும்பி அணியும் காலம் இது. உடலை ஒட்டிப்பிடிக்கும் உடைகள் உகந்தவைதானா? தோல் மருத்துவ நிபுணர் ரவிச்சந்திரனிடம் கேட்டோம்.
‘காலச் சூழலுக்கு ஏற்ற உடைகளை அணிய வேண்டுமே தவிர, சதாசர்வ காலமும் இறுக்கமான உடைகள் அணிவது நல்லது அல்ல. பெண்கள் இறுக்கமான உடைகளை அணியும்போது, வியர்வை வெளியேற முடியாமல், அதாவது வெளியே வர வாய்ப்பு இல்லாமல் கிருமிகளின் வளர்ச்சி பன்மடங்கு உயர்ந்துவிடும். இதனால், வேர்க்குரு, உஷ்ணக் கட்டிகள் மற்றும் கோடைக் கால நோய்கள் சருமத்தைப் பாதிக்கும். மேலும் அணியும் உள்ளாடைகள், சாக்ஸ் உள்பட இறுக்கமாக இருந்தால், உடலில் துர்நாற்றம் வீசுவதோடு, படை, சொறி சிரங்கு, அரிப்பு போன்றவை வரும்.
உடலில் ரத்த ஓட்டம் குறைந்து, சுவாசத் திறன் பாதிக்கும். தோள் பட்டை, முதுகு வலி ஏற்படலாம்.
ஓரளவு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கும் கொளுத்தும் கோடைக்கும் ஏற்றது. காற்று உள்புகவும், அதிகப்படியான வியர்வை வெளியேறவும் வழிவகுக்கும். ஈரத்தை நன்கு உள்வாங்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் தரக்கூடியது.” என்கிறார் விளக்கமாக.
இறுக்கமான ஆடைகளால் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நரம்பியல் மருத்துவர் அருள் செல்வன் பேசுகையில், ‘’இறுக்கமான ஆடை அணிவது என்பது இரு பாலருக்குமே ஏற்றது அல்ல. ஆண்களைப் பொருத்தவரை, அவர்களுடைய பிறப்புறுப்பிற்குக் கொஞ்சம்கூடக் காற்று செல்ல வசதி இல்லாமல் போய்விடுகிறது. இதனால், வியர்வை சுரந்து அதிகப்படியான துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு இயற்கையாகவே விதைகள் (testes) குளிர்ந்த சூழலைப் பெறுமாறு அமைந்துள்ளது. ஆனால், மிக இறுக்கமான உள்ளாடைகள் அணியும்போது, அவர்களுக்குச் சுரக்கக்கூடிய விந்துவின் திடத்தன்மை குறைவதுடன்,அந்த இடத்தில் உருவாகும் அதிகப்படியான வெப்பத்தினால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறையக்கூடிய வாய்ப்புகள் கூடும்.
மேலும், இறுக்கமான ஆடை அணிவதையே வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு ஆண்மைக் குறைவு மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
தொடை, கால் மரத்துப்போய் வலி ஏற்பட்டு, நரம்புகளில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தும்.
சட்டையில் இறுக்கமான காலர் பட்டனைப் போட்டுக்கொள்ளுதல், டை அணிதல் போன்றவற்றால் கண்ணும் மூளையும் பாதிக்கப்படுவதுடன், அடிக்கடி தலைவலியும் மயக்கமும் உண்டாகும். பெல்ட் அணிந்துகொண்டு அளவிற்கு அதிகமான உணவினை எடுத்துக்கொண்டால், வயிற்றுப் பகுதி இறுக்கப்பட்டு, இரைப்பையின் செயல்திறனைப் பாதித்து, நெஞ்சு எரிச்சலையும் அசிடிட்டியையும் உண்டாக்கிச் செரிமானத்தைத் தடை செய்யும்.
அதோடு, இறுக்கமான சாக்ஸ் அணிவதால், நடப்பதற்கே சிரமப்பட வேண்டியிருக்கும். காலில் உள்ள ரத்தக் குழாய்களை அழுத்திக் கால் வீக்கத்தை உண்டுபண்ணும். அதிலும், குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் எப்போதும், தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும்” என்றார் அக்கறையுடன்.
Always wearing tight clothes… right?
This is the time when you want to wear clothes that fit your body. Are clothes that cling to your body suitable? We asked dermatologist Ravichandran.
‘While you should wear clothes that suit the weather, it is not good to wear tight clothes all the time. When women wear tight clothes, the growth of germs increases manifold without the opportunity to sweat, meaning without a chance to come out. This causes ringworm, heat rash and summer diseases to affect the skin. Also, if the underwear and socks you wear are tight, your body will smell bad and you will get rashes, scabies, itching, etc.
Blood circulation in the body will decrease, affecting breathing ability. Shoulder and back pain may occur.
Wearing somewhat loose cotton clothes is the best for your health and the scorching summer. It will allow air to enter and excess sweat to escape. It will absorb moisture well. It can also provide good cooling to the body. ” He explains.
Speaking about the effects of tight clothing on men, neurologist Arul Selvan said, “Wearing tight clothing is not suitable for both sexes. As far as men are concerned, their genitals do not have even the slightest air circulation. This causes sweating and excessive odor.
In particular, men’s testes are naturally designed to have a cool environment. However, when they wear very tight underwear, the solidity of the sperm they can secrete decreases, and the number of sperm cells increases due to the excessive heat generated in that area.
Furthermore, those who habitually wear tight clothing are also likely to suffer from impotence and kidney-related problems.
Thighs and legs can become numb and painful, causing some pressure on the nerves.
Wearing a tight collar button on a shirt or a tie can affect the eyes and brain, causing frequent headaches and dizziness. If you eat too much while wearing a belt, the stomach area will tighten, affecting the functioning of the stomach, causing heartburn and acidity, and hindering digestion.
“Also, wearing tight socks can make it difficult to walk. They can compress the blood vessels in the feet and cause swelling. People, especially those with diabetes, should always wear loose clothing,” he said with concern.