Breast milk lump–தாய்ப்பால் கட்டினால், அதைக் குழந்தைக்குக் கொடுக்கலாமா?
என் வயது 28. குழந்தை பிறந்து 2 மாதங்கள் ஆகின்றன. எனக்கு அடிக்கடி மார்பகங்களில் பால் கட்டிக் கொள்கிறது. பால் கட்டிக் கொண்டால் அதைக் கொடுக்கக்கூடாது என்று சிலர் சொல்வது உண்மையா…?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
பால் கட்டிக்கொண்டாலும் குழந்தைக்கு அதைக் கொடுப்பதில் தவறில்லை. ஆனால், சில பெண்களுக்கு பால் கட்டுவதோடு, மார்பகங்களில் இன்ஃபெக்ஷனும் ஏற்பட்டிருக்கும். அவர்கள் மட்டும் தாய்ப்பால் கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
பால் கட்டோடு சேர்த்து மார்பகங்களில் இன்ஃபெக்ஷன் ஏற்படும் நிலையில் அது அளவுக்கதிகமான வலியைத் தரும். பால் சுரப்பிகளில் தொற்று பாதிக்கும் பிரச்னையை ‘மாஸ்டைட்டிஸ்’ (Mastitis) என்று சொல்கிறோம். அந்தத் தொற்று ஏற்பட்டிருந்தால் வலியோடு குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாது என்பதால் அதைத் தவிர்க்கலாம்.
மற்றபடி, நீண்ட நேரம் குழந்தைக்குப் பால் கொடுக்காததால் உங்களுக்கு மார்பகங்களில் பால் கட்டுகிறது என்ற நிலையில், அதை வெளியே எடுத்து பத்திரப்படுத்தி வைத்து, குழந்தைக்குக் கொடுக்கலாம்.
மார்பகங்களில் இருந்து தாய்ப்பாலை எக்ஸ்பிரஸ் செய்து எடுத்து சேகரிக்க, எலக்ட்ரானிக் பம்ப் உபயோகிப்பதே சிறந்தது. மேனுவல் பம்ப் உபயோகிக்க வேண்டாம். மேனுவல் பம்ப் உபயோகிப்பதால் அதை உபயோகிக்கும் அம்மாக்கள்தான் களைத்துப் போவார்கள்.
ஏற்கெனவே தாய்ப்பால் கொடுப்பதில் சோர்ந்து, ஆற்றலின்றி உணரும் அம்மாக்களுக்கு மேனுவல் பம்ப் உபயோகித்து தாய்ப்பாலை எடுக்கும் வேலை இன்னும் சோர்வைக் கொடுக்கும் என்பதால் எலக்ட்ரானிக் பம்ப்தான் சிறந்தது. இப்படி தாய்ப்பாலை எக்ஸ்பிரஸ் செய்யும்போது இரண்டு மார்பகங்களில் இருந்தும் பாலை எடுக்கலாம்.
If you are breastfeeding, can you give it to your baby?
I am 28 years old. It has been 2 months since my baby was born. I often get milk in my breasts. Is it true that some people say that you should not give it to your baby if you have milk in your breasts…?
Answers, Chennai-based gynecologist and obstetrician Nithya Ramachandran.
Even if you are breastfeeding, there is nothing wrong with giving it to your baby. However, some women may have milk in their breasts along with milk engorgement. They should be careful while breastfeeding.
When there is an infection in the breasts along with milk engorgement, it can cause extreme pain. We call the problem of infection in the mammary glands ‘mastitis’. If that infection has occurred, it is painful and you cannot breastfeed your baby, so you can avoid it.
Otherwise, if you have milk in your breasts because you have not breastfed your baby for a long time, you can take it out, store it and give it to your baby.
It is best to use an electronic pump to express and collect breast milk from the breasts. Do not use a manual pump. Manual pumps are more tiring for mothers who use them.
For mothers who are already tired and feel unmotivated from breastfeeding, using a manual pump to express breast milk can be even more tiring, so an electronic pump is best. When expressing breast milk in this way, you can collect milk from both breasts.