weight gain
weight gain
Listen to this article

மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிக்குமா?

தைராய்டு மற்றும் டிப்ரெஷனுக்காக  கடந்த சில மாதங்களாக மாத்திரைகள் எடுத்து வருகிறேன். அதன் பிறகு என் உடல் எடை அதிகரித்துவிட்டது. உடல் எடை அதிகரிப்புக்கு மாத்திரைகள் காரணமாக இருக்குமா… இதற்கு முன் பல வருடங்களாக நான் ஒரே எடையில்தான் இருந்திருக்கிறேன். அதனால்தான் இப்படியொரு சந்தேகம் வருகிறது. என் சந்தேகம் சரியானதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்    

டாக்டர் ஸ்பூர்த்தி அருண்    

நீங்கள் சந்தேகப்பட்டது உண்மைதான். சிலவகை மாத்திரைகள், மருந்துகள் உடல் எடையை  அதிகரிக்கும் தன்மை கொண்டவைதான். 10 முதல் 15 சதவிகித எடை அதிகரிப்புக்கு ஒருவர் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் காரணமாவதாக ஆய்வுகள் சொல்கின்றன. 

உடல் எடையை அதிகரிக்கச் செய்கிற மருந்துகளில் முதலிடம் ஸ்டீராய்டு மருந்துகளுக்குத்தான். இன்சுலின் உள்பட, நீரிழிவுக்காக எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளும் உடல் எடையை அதிகரிக்கலாம். மனநலனுக்காக எடுத்துக்கொள்கிற ஆன்டி டிப்ரெசன்ட், ஆன்டி ஆங்ஸைட்டிக்கான மருந்துகளும் உடல் எடையை அதிகரிக்கலாம். இந்த வகை மருந்துகள் பசியை அதிகரிக்கச் செய்யும். அதனால் வழக்கத்தைவிட அதிகம் சாப்பிடுவார்கள். அதனால் உடல் எடை அதிகரிக்கும். இன்னும் சில மருந்துகள், உணவுகளின் மீதான கிரேவிங்ஸை அதிகரிக்கக்கூடியவையாக இருக்கலாம். அதாவது இனிப்பு அல்லது உப்புத்தன்மையுள்ள உணவுகளைத் தேடித்தேடிச் சாப்பிடும் உணர்வை ஏற்படுத்தலாம்.

pills cause weight gain

இன்னும் சில மருந்துகள், நாம் உடலியக்கத்தின் மூலம் எரிக்கும் கலோரிகளின் அளவைக் குறைத்துவிடும் தன்மை கொண்டவையாக இருக்கலாம். இன்னும் சில மருந்துகள் உடலில் நீர்கோக்கச் செய்யும் தன்மை கொண்டிருக்கும். அதனால் உடல் எடை அதிகரித்துக் காணப்படும். தைராய்டு மருந்துகள் இதற்கான உதாரணம்.

இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும் எல்லோருக்கும் இப்படி உடல் எடை அதிகரிக்கும் என்று அர்த்தமில்லை. சிலருக்கு எடையில் மாற்றமில்லாமலும் இருக்கலாம். எனவே, இது போன்ற மருந்துகளை எடுக்கும்போது உடல் எடை அதிகரிப்பதாக உணர்ந்தால், உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

எப்போதும் சாப்பிடுவதைப் போலச் சாப்பிடாமல் கலோரிகளைக் குறைத்து எடுத்துக்கொள்ளலாம். உடல் ரீதியான இயக்கத்தை அதிகரிக்கலாம். அதையும் மீறி, மருந்துகள் எடுப்பதால் உடல் எடை அதிகரிப்பதாக உணர்ந்தால் மருத்துவரிடம் அது குறித்து ஆலோசித்து வேறு மருந்துகளைப் பரிந்துரைக்கச் சொல்லிக் கேட்கலாம்.

Will taking pills cause weight gain?

I have been taking pills for thyroid and depression for the past few months. Since then, my weight has increased. Could the pills be the reason for my weight gain… I have been at the same weight for many years before this. That is why I am having such a doubt. Is my doubt correct?

Answered by Dr. Spurthy Arun, an internal medicine expert from Chennai

What you suspected is true. Some types of pills and medicines have the ability to increase body weight. Studies say that the medicines a person takes are responsible for 10 to 15 percent weight gain.

Steroids are the number one among the medicines that cause weight gain. Some medicines taken for diabetes, including insulin, can also increase body weight. Anti-depressants and anti-anxiety medicines taken for mental health can also increase body weight.

These types of medicines increase appetite. So they eat more than usual. So they increase body weight. Some other medications may increase food cravings. This means that you may crave sweet or salty foods.

Some other medications may reduce the amount of calories you burn through physical activity. Some other medications may cause your body to retain water, which can lead to weight gain. Thyroid medications are an example of this.

Not everyone who takes these medications will gain weight. Some may not even gain weight. Therefore, if you feel that you are gaining weight while taking these medications, you should pay attention to your diet.

You can reduce your calorie intake by not eating as much as you usually do. You can increase your physical activity. In addition, if you feel that you are gaining weight due to taking medications, you should consult your doctor and ask him to prescribe other medications.

How many kilos can you lose in a month?

Tears; never suppress them, says the medical world

Can headaches be a symptom of brain swelling?