இந்த வாரம்…..அதாவது பொங்கல் வெளியீடாக தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள படங்கள் மற்றும் சீரிஸ் லிஸ்ட் இதோ!
கேம் சேஞ்சர் ( தெலுங்கு )
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் முழு நீள கமர்ஷியல் ஏரியாவில் இறங்கி நடிகர் ராம்சரணை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் `கேம் சேஞ்சர்’. நேர்மையான தேர்தல் அதிகாரி பணப்பட்டுவாடாவை தடுக்க அதிரடியில் களமிறங்குவதாக கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாகவும், இந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.
மெட்ராஸ்காரன் (தமிழ் )
வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் மலையாள நடிகர் ஷேன் நிகம் நேரடியாக தமிழில் அறிமுகமாகியுள்ள திரைப்படம் தான் மெட்ராஸ்காரன். கலையரசன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் கிராமப் பிண்ணனியிலான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
REKHACHITHRAM (மலையாளம்)
ஜோஃபின் டி சாக்கோ இயக்கத்தில் ஆஸிஃப் அலி , அனஸ்வரா ராஜன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ரேக்க சித்திரம் (REKHACHITHRAM) . சூதாட்ட வழக்கில் சஸ்பென்ட் ஆகி பணிக்குத் திரும்பும் காவல் அதிகாரி இழந்த தனது பெயரை மீட்டெடுக்க விசாரிக்கும் மர்டர் கேஸ் தான் கதை. இந்த திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
வணங்கான் (தமிழ் )
அருண் விஜயின் நடிப்பில் இயக்குநர் பாலா இயக்கியுள்ள திரைப்படம் வணங்கான் . கண் முன் நிகழும் அநியாயத்தை பொறுத்துக் கொள்ள முடியாத சாமானியன், அவனை சுற்றிய நடக்கும் நிகழ்வுகளுமாக விரிகிறது கதை. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
மதகஜராஜா (தமிழ் )
விஷால் நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் உருவாகி 2013-ம் ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு வெளியாக வேண்டிய திரைப்படம். ஆனால் அப்போது வெளியாகாமல் 12 வருட இடைவெளிக்குப் பிறகு இந்தாண்டு பொங்கல் பண்டிக்கை ரிலீஸாக வருகிறது. சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி, மனோபாலா என பெரும் நடிகர் பட்டாளம் கொண்ட இந்த திரைப்படம் சுந்தர் சி- யின் ஃபேளவரில் தயாராகி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை (12/01/2025 ) அன்று திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது .
FATEH (ஹிந்தி)
கடத்தல் , மாஃபியா கும்பலை தேடி பிடித்து அழித்தொழிக்கும் ஆக்ஷன் கதையில் உருவாகியுள்ள ஃபட்டே(FATEH) திரைப்படத்தை நடிகர் சோனு சூட் இயக்கி நடித்துள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் நாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
DEN OF THIEVES 2 – PANTERA (ஆங்கிலம்)
2018- ம் ஆண்டு வெளியாகி நல்ல வசூல் செய்த `டென் ஆஃப் தீவ்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ஆக்ஷன் திரைப்படம் `டென் ஆஃப் தீவ்ஸ்: பன்டேரா (DEN OF THIEVES 2 – PANTERA)’ நேற்றைய தினம் வெளியாகியுள்ளது.
NOSFERATU (ஆங்கிலம்)
பேய் , வேம்பையர், சஸ்பென்ஸ் என ஹாரர் கதையம்சத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் நோஸ்ஃபெரட்டு (NOSFERATU) இன்று (10/01/2025) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தியேட்டர் டு ஒடிடி:
MaXXXine (ஆங்கிலம்) Jio Cinema – Jan 5
Neeli Megha Shyama (தெலுங்கு) Aha – Jan9
மிஸ் யூ Prime – Jan 10
அதோ முகம் Aha – Jan 10
Bachhala Malli (தெலுங்கு) Prime – Jan 10
Hide N Seek (தெலுங்கு) Aha – Jan 10
நேரடி ஒடிடி திரைப்படங்கள் :
Goldfish (இந்தி) Prime – Jan 8
100 Crores (தெலுங்கு) Aha – Jan 11
ஒடிடி தொடர்கள்:
American Primeval (ஆங்கிலம்) Netflix – Jan9
Call (ஆங்கிலம்) Prime – Jan 9
Black Warrent (இந்தி)Netflix – Jan 10
is soaked in fenugreek good for the body?
What causes frequent muscle cramps and pain… How can you fix it?
Can Siddha medicine help reduce high BP?
Game Changer (Telugu)
The film “Game Changer” directed by the great director Shankar has entered the full-length commercial area and directed by actor Ram Charan. The story of this film is about an honest election officer taking action to stop money laundering. S.J. Surya plays the villain and Hindi actress Kiara Advani plays the heroine. Thaman has composed the music for the film. This film was released today.
FATEH (Hindi)
The film Fateh is an action story about kidnapping and the search and destruction of a mafia gang and is directed by actor Sonu Sood. This film, which has Jacqueline Fernandez as the heroine, has been released in theaters today.
DEN OF THIEVES 2 – PANTERA (English)
The action film DEN OF THIEVES 2 - PANTERA'', the second part of the 2018- released and well-received
Den of Thieves” movie, was released yesterday.
NOSFERATU (English)
The Hollywood film Nosferatu, which is made in the horror genre of ghosts, vampires, and suspense, was released in theaters worldwide today (10/01/2025).