Roasted Garlic Food-ரோஸ்டட் கார்லிக்
தேவையானவை:
பூண்டு – 4, நெய் – 1 டீஸ்பூன்
செய்முறை 1:
பூண்டை உரித்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் ஊற்றி, உரித்த பூண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வேகும்வரை வதக்கிப் பரிமாறவும். பூண்டு நன்கு வெந்துவிட்டால் லேசான இனிப்புச் சுவையுடன் இருக்கும்.
செய்முறை 2:
அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றாமல், உரிக்காத பூண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகும் வரை வறுத்து எடுத்து, பின்னர் உரித்துச் சாப்பிடவும். பூண்டின் தோல் அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும்.
குறிப்பு: பூண்டு நன்றாக வெந்திருந்தால் மிருதுவாகவும் சுவையுடனும் இருக்கும். வேகாத பூண்டு காரமாக இருக்கும். வெந்த பூண்டுகளை தினமும் சாப்பிட்டு வர… பால் சுரப்பு நன்றாக இருக்கும்.
பத்தியக் குழம்பு
தேவையானவை:
பூண்டு – 5 பல், புளி – ஒரு நெல்லிக்காய் அளவு, வெந்தயம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், வெல்லம் – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு
மசாலா அரைக்க:
தேங்காய் – 2 சிறிய துண்டுகள், பூண்டு – 5 பல், வெந்தயம் – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், மிளகு – 2 டீஸ்பூன்
செய்முறை:
புளியைக் கால் கப் தண்ணீரில் ஊறவைக்கவும். தேங்காயைச் சிறு துண்டுகளாக வெட்டி, அதனுடன் மசாலா அரைக்கக் கொடுத்துள்ள பிற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் வெந்தயம் தாளித்து, உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் விழுதைச் சேர்த்து சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் புளிக் கரைசலைச் சேர்த்து பச்சை வாடை நீங்கும்வரை அடுப்பில் வைத்து, இடித்த வெல்லம் சேர்த்து சில நொடிகள் வைத்து பின்னர் இறக்கவும். விரும்பினால், கறிவேப்பிலையை சிறிது எண்ணெயில் தாளித்து இப்போது குழம்பில் சேர்த்துக்கொள்ளலாம்.
குறிப்பு: தேங்காய்க்கு பதிலாக ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பை சேர்த்தும் பத்தியக் குழம்பு செய்யலாம். இதில், பூண்டுடன் சுண்டைக்காய் வற்றலையும் சேர்த்து வதக்கியும் செய்யலாம்.
Ingredients:
Garlic – 4, Ghee – 1 teaspoon
Recipe 1:
Peel the garlic. Put a pan on the stove and pour a little ghee, add the peeled garlic and fry on medium heat until it is well cooked and serve. If the garlic is well cooked, it will have a mild sweet taste.
Recipe 2:
Put a pan on the stove and without pouring ghee, add the unpeeled garlic and fry on medium heat until it is well cooked and then peel it and eat. The skin of the garlic will be dark brown in color.
Note: If the garlic is well cooked, it will be crispy and tasty. Uncooked garlic will be spicy. Eating roasted garlic daily… will improve milk secretion.
Ingredients:
Garlic – 5 cloves, Tamarind – the size of a gooseberry, Fenugreek – one teaspoon, Turmeric powder – 1/4 teaspoon, Jaggery – half teaspoon, Sesame oil – one tablespoon, Salt – as required
Coconut – 2 small pieces, Garlic – 5 cloves, Fenugreek – 1/4 teaspoon, Cumin – half teaspoon, Pepper – 2 teaspoons
Recipe:
Soak the tamarind in 1/4 cup water. Cut the coconut into small pieces, add all the other ingredients given for grinding the masala, add a little water and grind it to a paste.
Heat oil in a pan on the stove, add fenugreek and fry it. Once it is cooked, add the ground paste and boil it with a little water, salt and turmeric powder. Once it boils well, add tamarind paste and keep it on the stove until the raw smell goes away, add crushed jaggery and keep it for a few seconds and then remove it. If you want, you can fry curry leaves in a little oil and add it to the gravy now.
Note: Instead of coconut, you can also make a paste by adding a teaspoon of urad dal. In this, you can add dried gourd along with garlic and fry it.