`வயது முதிர்வைத் தடுக்க’ மகனின் ரத்தமா… கிளம்பிய விவாதமும் பின்னணியும்!
தனக்கு தானே “ஹியூமன் பார்பி” என்று பட்டம் சூட்டிக்கொண்டவர்தான் அழகின் மேல் அதிக கவனம் கொண்ட Marcela Iglesias வயது 47. இவர் காஸ்மெட்டிக்ஸ் சார்ந்த செயல்முறைக்காக மட்டுமே ஒரு லட்சம் டாலர் $1,00,000 செலவு செய்துள்ளார். USA வின் los Angeles ஐ சேர்ந்த Iglesias, தனக்கு வயதாகி முதிர்ச்சியான தோற்றம் வராமல் இருக்க, தனது மகனின் ரத்தத்தை, ரத்தமாற்றம் (blood transfusion) மூலமாகத் தனது உடலில் செலுத்தத் தீர்மானித்துள்ளார்.
இதற்கு அவரின் 23 வயதான மகன் Rodrigo வும் ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக iglesias தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ரத்தமாற்றம் என்றால் உடலில் இளம் செல்களை பராமரிக்கும் மற்றும் புதுப்பிக்கும் ஒரு புதிய செயல்முறை ஆகும். இந்த ரத்தமே மகன் அல்லது மகளிடமிருந்து கிடைத்தால், கூடுதல் சிறப்பாக இருக்கும். எனது மகன் ரத்தமாற்றம் செயல்முறையைப் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் நன்கு அறிந்திருக்கிறார்.
அவர் தனது பாட்டிக்கும் இவ்வாறே உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் உற்சாகமாக உள்ளார். நான் stem cell போன்ற சிகிச்சையை முயன்ற பிறகுதான் ரத்தமாற்ற முறையைப் பற்றி அறிந்தேன். இதற்காக எனக்கு ஒரு இளம் நன்கொடையாளரின் ரத்த அணுக்கள் தேவைப்பட்டது.
அதிலும் கொடையாளர் மகன் அல்லது மகளாக இருந்தால் கூடுதல் நன்மையாக இருக்கும். இந்த ரத்தமாற்றம் மூலமாக உங்கள் உடலில் ஆக்ஸிஜன் கொண்டு செல்ல புதிய சிவப்பணுக்கள் செலுத்தப்படும், அத்துடன் பிளாஸ்மா கேரியர் புரோட்டின் (plasma carrier protein), கிளாடிங் ஃபேக்டர் clotting factor போன்றவை செலுத்தப்படுவதால், இவை ரத்தப்போக்கு மற்றும் உடலில் காயங்கள் விரைவாகச் சரி செய்ய உதவுகிறது.
அத்துடன் உங்களது உடலில் இந்த செயல்முறையைப் பயன்படுத்துவது நீண்ட பயணத்திற்குப் பிறகு கிடைத்த ஒரு துளி தண்ணீர் போல இருக்கும். இவை உங்கள் உடலில் மிகுந்த அற்புதங்களை நிகழ்த்தும். அத்துடன் அந்த செயல்முறை முடிவில் உங்கள் உடல் மிகவும் வலுவாகவும், நிலையானதாகவும் உணர்வீர்கள்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இதனை செய்யத் திட்டமிட்டுள்ள Iglesias, இதனைப் பாதுகாப்பாகச் செய்யக்கூடிய ஒரு சிறந்த மருத்துவர் தேடுவதாகக் கூறியுள்ளார். தனது வழக்கத்திற்கு மாறான தோற்றத்தின் மூலமாக சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி, இன்ஸ்டாகிராமில் 1.2 மில்லியன் ஃபாலோவர்களை கொண்டுள்ளார்.
இத்துடன் இவர் ரெட் கார்பெட் red carpet மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார்.
Iglesias-ன் இந்த ரத்தமாற்ற அறிவிப்பு, பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியிருக்கும் இந்த விவகாரம் குறித்து, இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் Iglesias-ன் செயலை வரவேற்றிருக்கும் நிலையில், பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இளம் நன்கொடையாளரிடமிருந்து பிளாஸ்மாவைப் பயன்படுத்துவது போன்ற சிகிச்சைகள், அதன் பாதுகாப்பு மற்றும் சிகிச்சை நன்மைகளை உறுதிப்படுத்த கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்று எச்சரித்துள்ளது.
அதாவது இந்த முறை, பலன் தரும் என்ற அறிவியல் ஆதாரமும் இல்லை, அல்லது அதற்கான சோதனைகள் இன்னும் முடிவடையவில்லை என்கிறது. அப்படி ஆதாரமற்ற முறையை இவர் செய்யப்பவதாக சொல்வது தவறாக முன்னுதாரணம் ஆகிவிடும் என்கிறார்கள் பலர்.
Son’s blood to ‘prevent aging’… The debate and background that has arisen!
Marcela Iglesias, 47, who has dubbed herself the “Human Barbie”, is very concerned about beauty. She has spent $100,000 on cosmetic procedures alone. Iglesias, a native of Los Angeles, USA, has decided to inject her son’s blood into her body through a blood transfusion to prevent herself from looking old and mature.
Her 23-year-old son Rodrigo also agreed with this. In this regard, Iglesias wrote on his social media page, “Blood transfusion is a new process that maintains and renews young cells in the body. If this blood is from a son or daughter, it will be even better. My son is very familiar with the blood transfusion process and its benefits.
He is very excited about the idea of helping his grandmother in this way. I only learned about the blood transfusion method after trying a treatment like stem cell. For this, I needed blood cells from a young donor.

It would be an added advantage if the donor was a son or daughter. Through this blood transfusion, new red blood cells will be injected into your body to carry oxygen, as well as plasma carrier protein, clotting factor, etc., which help in bleeding and quick healing of wounds in the body.
Also, applying this process to your body will be like a drop of water after a long journey. These will do wonders for your body. “And at the end of the process, your body will feel much stronger and more stable.”
Iglesias, who plans to have it done in early 2025, said he is looking for a good doctor who can do it safely. He has become very popular on social media with his unconventional appearance and has 1.2 million followers on Instagram.
He is also invited as a special guest on red carpets and television shows.
Iglesias’s blood transfusion announcement has sparked great debate. Many netizens are expressing their opinions on this issue, which has become a topic of discussion on social media. While some have welcomed Iglesias’ action, many are opposing it.
The US Food and Drug Administration (FDA) has warned that treatments such as using plasma from young donors have not undergone rigorous testing to ensure their safety and therapeutic benefits.
This means that there is no scientific evidence that this method is effective, or that trials for it have not yet been completed. Many say that it would set a wrong precedent to accuse him of using such an unfounded method.