Mental Health: “கூச்சப்படாதீங்க.. மனம் விட்டு அழுதிடுங்க” – மருத்துவர்கள் சொல்வதென்ன?
உடல் வலி மற்றும் மனவலியை வெளிப்படுத்தும் முக்கியமான வடிகால் கண்ணீர்; அதை ஒருபோதும் அடக்கிவைக்காதீர்கள் என்கிறது மருத்துவ உலகம்.
கண்கள்
Health: இந்தப் பிரச்னைக்கு உங்க ஹேண்ட்பேக்கூட காரணமா இருக்கலாம்!
சரி. கண்ணீர் எப்படி உற்பத்தி ஆகிறது என்று தெரியுமா உங்களுக்கு?
சென்னை கண் மருத்துவர் அருள்மொழிவர்மன் சொல்கிறார். ”கண்களின் மேல் இமைகளுக்கு கீழ் அமைந்திருக்கும் கண்ணீர் சுரப்பிகள்தான் (Tear glands) கண்ணீர் உற்பத்தியாகும் இடம். அங்கிருந்து மிகச் சிறிய ‘கண்ணீர் நாளங்கள்’ (Tear ducts) வழியாக கண்களுக்குச் செல்லும். கண்களுக்குச் செல்லும்
இந்த நீரானது, கரு விழியின் மீது ஒரு மெல்லிய படலமாக பரவி நிற்கும். ஒவ்வொரு தடவை நாம் கண் சிமிட்டும்போதும் அது நம் கண் முழுவதும் ஒரு மெல்லிய படலமாகப் பரவி, கண்ணைக் குளிர்ச்சியாக வைத்து அதேசமயம் தூசிகளில் இருந்தும் மற்ற வெளிப்பாதிப்புகளில் இருந்தும் காக்கும்.
இந்தச் செயல் நீங்கள் விழித்து இருந்தாலோ அல்லது தூங்கினாலோ, மகிழ்ச்சியாக இருந்தாலோ அல்லது சோகமாக இருந்தாலோ எது எப்படி இருந்தாலும் தவறாமல் நடக்கும் ஒரு செயல். ஆனால், கண்ணீர் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் கண்ணீர், கண்களில் எரிச்சல் ஏற்படும்போது மட்டும் வழக்கத்தைவிட சற்றே அதிகமாக சுரக்கும்.

இந்த அதிகப்படியான கண்ணீருக்கு எதிர்வினைக் கண்ணீர் (Reflex tears) என்று பெயர். சற்று அதிக சோகமான மனநிலையில் இருந்தாலோ அல்லது மகிழ்ச்சியாக இருந்தாலோ சுரக்கும் அதிகப்படியான கண்ணீருக்கு ‘உணர்வுசார் கண்ணீர்’ (Emotional tears) என்று பெயர். இதைத்தான் நாம் எல்லோரும் கண்ணீர் என்று சொல்கிறோம்.
கண்ணீரின் கதை!
இப்படிக் கண்ணீர் சுரப்பியில் இருந்து வெளிவரும் அனைத்து வகை கண்ணீரும், இரண்டு நுண்ணிய நாளங்கள் வழியாக மேல் மற்றும் கீழ் இமைகளின் உள்பகுதிக்கு வந்து அங்கிருந்து ‘நேசோலாக்ரிமல்’ (Nasolacrimal) எனும் குழாய்கள் வழியாக மூக்குப்பாலத்திற்குச் செல்லும். அங்கிருந்து அவை, நாசிக் குழிக்குள் திருப்பிவிடப்பட்டு, அங்கிருந்து வாய்வழியாக விழுங்கப்பட்டோ அல்லது மூக்கில் இருந்து ஒழுகும் திரவமாகவோ வெளியேறும்.
இதுதான் கண்களில் வழக்கமாக நடப்பவை. சிலநேரங்களில் கண்ணீர் அதிகமாக உற்பத்தியாகி, பயன்படுத்தப்பட்ட கண்ணீர் ஆனது நாளங்களின் வழியாக சரியாக வெளியேற்றப்படாதபோதே, கண்களில் இருந்து வெளியேறி கன்னங்களில் ஒழுகுகிறது” என்றார் அருள்மொழிவர்மன்.
கண்ணீர்
சரி, கண்ணீரை ஏன் கட்டுப்படுத்தக் கூடாது?
தஞ்சையைச் சேர்ந்த மூத்த மன நல மருத்துவர் கே.தியாகராஜன் சொல்கிறார். ”எப்படி ஒரு பிரஷர் குக்கரில், பிரஷர் அதிகமாகி குக்கர் வெடித்துவிடாமல் இருக்க ஒரு ‘வால்வு’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளதோ அதேபோலதான் மனிதனுக்கு அழுகை. மனிதனின் மனதில் தோன்றும் எண்ணற்ற உணர்ச்சிகளால் மனம் வெடித்துவிடாமல் இருக்க, ஒரு பாதுகாப்பான வடிகாலே அழுகை. அதனால்தான் மனம் விட்டு அழ வேண்டும் என்று சொல்கிறோம்.
இன்றைய காலகட்டத்தில் ஆண்களும் சரி, பெண்களும் சரி, நாகரீகம் கருதி அழ மறுக்கிறார்கள். இதனால் மன அழுத்தம் அதிகமாகி உடலிலும் மனதிலும் ஒரு சேர பாதிப்புகள் ஏற்பட்டு ‘சைக்கோசொமாடிக் டிஸ் ஆர்டர்ஸ்’ வகை நோய்களை ஏற்படுத்தும்.
குடல் இரைப்பைப் புண், சர்க்கரை நோய், ஆஸ்துமா, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு, முதுகுவலி, உயர் ரத்த அழுத்தம்… இப்படி உடல் சார்ந்தும் எவ்வளவோ பிரச்னைகளை உருவாக்கும் மன அழுத்தம். இதற்கு எல்லாம் ஒரே தீர்வு, கூச்சப்படாமல், பந்தா பார்க்காமல் அழுகை வரும்போது அழுதுவிடுவதுதான்” என்றார் தியாகராஜன்.

Mental Health: “Don’t be shy.. cry your heart out” – What do doctors say?
Tears are an important drain that expresses physical pain and emotional pain; never suppress it, says the medical world.
Eyes
Health: Your cellphone could also be the cause of this problem!
Okay. Do you know how tears are produced?
Chennai ophthalmologist Arulmozhivarman says. ”The tear glands located under the upper eyelids of the eyes are the place where tears are produced. From there, they go to the eyes through very small ‘tear ducts’. Going to the eyes
This water spreads like a thin film on the cornea of the eye. Every time we blink, it spreads like a thin film all over our eyes, keeping the eyes cool and at the same time protecting them from dust and other external influences.
This action happens whether you are awake or asleep, happy or sad. It is a process that happens regularly. However, tears secreted from the lacrimal glands are secreted slightly more than usual only when the eyes are irritated.
These excess tears are called reflex tears. The excess tears secreted when you are in a slightly sad or happy mood are called ’emotional tears’. This is what we all call tears.
The story of tears!
All types of tears that come out of the lacrimal glands in this way, come to the inside of the upper and lower eyelids through two tiny vessels and from there go to the bridge of the nose through the ‘nasolacrimal’ ducts. From there, they are diverted into the nasal cavity, from where they are swallowed orally or come out as liquid that flows from the nose.
This is what normally happens in the eyes. Sometimes, tears are produced in excess and when the used tears are not properly drained through the veins, they leak out of the eyes and flow down the cheeks,” said Arulmozhivarman.
Tears
Well, why not control your tears?
K. Thiagarajan, a senior mental health doctor from Thanjavur, says. “Just as a pressure cooker has a ‘valve’ installed to prevent the cooker from exploding due to excessive pressure, so too does crying for humans. Crying is a safe outlet to prevent the mind from exploding due to the countless emotions that arise in the human mind. That is why we say that we should cry from the heart.
In today’s era, both men and women refuse to cry out of politeness. This increases stress and causes a combination of effects on the body and mind, causing diseases such as ‘psychosomatic disorders’.
Intestinal ulcers, diabetes, asthma, heavy bleeding during menstruation in women, back pain, high blood pressure… These can cause many physical problems. “Stress. The only solution to this is to cry when you feel like crying, without being shy or holding back,” said Thiagarajan.
How to know symptoms of Wheezing?
How to know symptoms of Vaginal Cancer?