பலரையும் பாதிக்கும் Brain Aneurysm… மூளை வீக்கத்தின் அறிகுறியாக மாறுமா தலைவலி?
சமீப காலமாக Brain Aneurysm குறித்த செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். இதனால் பாதிக்கப்படுபவர்கள் தலைவலி, காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேருவதாகவும், மருத்துவப் பரிசோதனையில் மூளையில் ரத்தக்குழாயில் வீக்கம் ஏற்பட்டிருப்பதாகவும், அறுவை சிகிச்சையில் அது சரிசெய்யப்பட்டதாகவும் செய்திகளில் கேள்விப்பட்டோம்.
இந்தப் பிரச்னையை எப்படிப் புரிந்துகொள்வது… தலைவலியும் காய்ச்சலும் மூளை பாதிப்பின் அறிகுறிகளாக இருக்குமா? சமீபகாலமாக பல பிரபலங்களும் இதுபோன்ற பிரச்னையால் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இந்தப் பிரச்னை எல்லோருக்கும் வரக்கூடியதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா சாரி
நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா | சென்னை
நீங்கள் கேள்விப்படுகிற அத்தனை சம்பவங்களையும் ஒன்றுபோல நினைத்துப் பார்க்க வேண்டியதில்லை. ஒவ்வொருவரின் பிரச்னையும் வெவ்வேறானது.
பிரெயின் அன்யூரிசம் (Brain aneurysm) எனப்படுவது, மூளையின் ரத்தக்குழாயில் ஏற்படுகிற வீக்கத்தைக் குறிப்பது. இந்தப் பிரச்னைக்கான காரணம் பிறவியிலேயே இருக்கக்கூடும். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகுதான் அதன் அறிகுறிகள் வெளிப்படும்.
மூளையின் ரத்தக்குழாயின் சுவர்கள், சாதாரண ரத்தக்குழாய் போல அல்லாமல், பலவீனமாக இருப்பதுதான் இதற்கான முக்கிய காரணம். இதன் வெளிப்பாடாக, ரத்தக்குழாயின் சுவரில் வீக்கம் ஏற்பட்டு, ரத்தக்குழாய் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடும்.
அடிக்கடி தலைவலி வருதா?
பாம்பே ஜெயஸ்ரீக்கு ஏற்பட்ட மூளை ரத்தக்கசிவு, இதுதான் காரணம்…. மருத்துவ விளக்கம்!
ரத்தக்குழாய் வெடித்தால், மூளையில் ரத்தக்கசிவு ஏற்படும். ரத்தக்கசிவு ஏற்படுவது என்பது ஆபத்தான ஓர் அறிகுறி. இந்தப் பிரச்னையின் முக்கிய அறிகுறியாக திடீரென்றும் மிகத்தீவிரமாகவும் தலைவலி ஏற்படும்.
அதை ‘தண்டர்கிளாப் ஹெட்டேக்’ (Thunderclap Headache ) என்று சொல்வார்கள். அதையடுத்து திடீரென சுயநினைவை இழப்பார்கள். பக்கவாதம் வரலாம். சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்காவிட்டால், உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு மிகவும் ஆபத்தான பிரச்னை இது.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம். அது அளவைத் தாண்டும்போது, மூளையின் ரத்தக்குழாய் வெடிப்பதற்கான ரிஸ்க்கை அதிகரிக்கும். இந்தப் பிரச்னை வராமல் தவிர்ப்பதெல்லாம் சாத்தியமில்லை. யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இது பாதிக்கலாம் என்பதுதான் சோகமான உண்மை. ரத்த அழுத்தம் அதிகரிக்காமலும் ஸ்ட்ரெஸ் இல்லாமலும் பார்த்துக்கொள்வதும் எல்லோருக்கும் அவசியம்.
Brain Aneurysm that affects many people… Can headaches be a symptom of brain swelling?
Recently, we have been hearing news about Brain Aneurysm frequently. People affected by this are admitted to the hospital with headache and fever, and we have heard in the news that a medical examination revealed swelling in the blood vessels in the brain, which was repaired in surgery.
How to understand this problem… Can headaches and fever be symptoms of brain damage? Recently, there have been reports that many celebrities are suffering from such a problem. Can this problem happen to everyone?
Answers by Chennai-based neurosurgeon Prithika Sari
Neurosurgeon Prithika | Chennai
You don’t have to think of all the incidents you hear as the same. Everyone’s problem is different.
Brain aneurysm refers to swelling in the blood vessels of the brain. The cause of this problem may be congenital. Its symptoms only appear after a certain age.
The main reason for this is that the walls of the blood vessels in the brain are weaker than normal blood vessels. As a result, the blood vessel wall swells and the blood vessel can burst at any time.
Do you get headaches often?
This is the reason for the brain hemorrhage suffered by Bombay Jayashree…. Medical explanation!
If a blood vessel bursts, bleeding occurs in the brain. Bleeding is a dangerous symptom. The main symptom of this problem is a sudden and severe headache.
It is called a ‘Thunderclap Headache’. After that, people suddenly lose consciousness. A stroke can occur. If not detected and treated in time, this is a very dangerous problem that can cause death.
It is very important to keep blood pressure under control. When it exceeds the limit, the risk of a blood vessel in the brain bursting increases. It is impossible to avoid this problem. The sad truth is that it can affect anyone, at any time. It is important for everyone to take care of their blood pressure and avoid stress.