Madha Gaja Raja
Madha Gaja Raja
Listen to this article

Madha Gaja Raja: “அந்த காட்சி எடுக்கறப்போ நடந்த விபத்து” – விஷால்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி… என பல ஸ்டார் காஸ்ட்டுடன் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2013-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டத் திரைப்படம் `மதகஜராஜா’.

Madha Gaja Raja

ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருந்தது. அந்நிறுவனம் பல்வேறு பிரச்னைகளில் சிக்கியதால், ‘மதகஜராஜாவெளியாகாமல் இருந்தது. தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் பொங்கலுக்கு ஜன 12-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று (ஜன 5) இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.

இதில் இயக்குநர் சுந்தர் சி, “இந்த படத்துக்காக எப்போதோ சந்தித்திருக்க வேண்டியது. கொஞ்ச நாள் முன்னாடி திருப்பூர் சுப்பிரமணியம் எனக்கு கால் பண்ணி ‘மதகஜராஜா’ படம் பார்த்துட்டு நல்லா இருக்குன்னு சொன்னாரு. கலெக்ஷன் பற்றிதான் அவர் அதிகமாக சொல்வார்.

இந்தப் படத்துக்கு விமர்சனமாக சொன்னாரு. அதை நான் சொல்லமாட்டேன். அப்புறம் பின்னாடி நீங்க என்னை நக்கல் பண்ணுவீங்க. இந்தப் படம் எனக்கு ஸ்பெஷல். இந்தப் படத்தின் மூலமாக விஷால் தம்பி கிடைச்சான். இப்போ குடும்பத்துல ஒரு நபராக இருக்கான். 80ஸ் ஜனரஞ்சகமான படம் வரும். அந்த மாதிரி ஒரு படம் பண்ணனும்னு திட்டம் போட்டேன். அதுதான் ‘மதகஜராஜா’.

சில காரணங்களால அந்தப் படம் தமாதமாக்குச்சுசு. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி வந்தப் படம், இந்தப் படத்துக்கு வரவேற்பு இருக்குமான்னு எண்ணம் இருந்தது. அறிவிப்பு வந்ததும் சமூக வலைத்தளப் பக்கங்கள்ல நல்ல வரவேற்பு இருந்துச்சு.

இது நம்பிக்கையைக் கொடுக்கிற மாதிரி இருந்துச்சு. இன்னொரு விஷயம் சொல்றேன்… இது ஒரு நல்ல என்டர்டெய்னர். ‘லேட்டா வந்தாலும்… லேட்டஸ்ட்னு போட்டாங்க, அப்படி இருக்கும். என்னுடைய குரு மணிவண்ணன் சார் நடிச்சிருக்காரு. அவருடைய ஆசீர்வாதம் இந்தப் படத்துக்கு இருக்கும்.

மனோபாலா சார் இந்தப் படம் வந்தால் என் ரேஞ்சே வேறன்னு சொல்லிட்டே இருப்பாரு. ஆனால் இப்போது நம்மக்கூட அவர் இல்ல.

Madha Gaja Raja

Madha Gaja Raja

முதல் முறையாக விஜய் ஆன்டணிகூட இந்தப் படத்துல இணைஞ்சேன். விஜய் ஆன்டணி மாதிரி கமர்சியல் மியூசிக் பண்றதுக்கு சிலர்தான் இருக்காங்க. அவர் சீரியசான படங்கள்ல நடிக்கிறதுனால அந்தப் படங்கள்ல அதுக்கு வாய்ப்பு கிடைக்கல. நடிகராக இப்போ கலக்கிட்டு இருக்காரு.

 மறுபடியும் அவர் இப்படியான படங்களுக்கு இசையமைத்து கம்பேக் கொடுக்கணும். விஷால் இந்த படத்துக்காக 8 பேக் வைக்கணும். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த காட்சியோட ஷூட்டிங் தள்ளிப் போயிடுச்சு. அத்தனை நாட்கள் அந்த உடம்பை மெயின்டெயின் பண்றதுக்காக கஷ்டப்பட்டாரு.

இந்த படம் வெளில வர்றனும்னு நான் நினைக்கிறதுக்கு காரணம் விஷாலோட உழைப்பு வெளில தெரியணும்னுதான். இந்தப் படத்துல எந்த விஷயத்தையும் புதுசாக சொல்லப் போறது இல்ல. ஆனால், சந்தோஷப்பட்டு என்ஜாய் பண்ணி பார்க்கிறதுக்கு சில விஷயங்கள் படத்துல இருக்கும். ரசிப்பீங்கன்னு நம்புறேன்.” என்று பேசியிருக்கிறார்.

Madha Gaja Raja

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஷால், “எனக்கு ஆக்டர் விருதைத் தாண்டி பெஸ்ட் சிங்கர் அவார்ட் இந்தப் படத்துக்கு கிடைக்கணும். `மை டியர் லவ்வர்’ பாட்டை பாடுற சிங்கர் இதுக்குமேல பாடவேகூடாதுனு சுந்தர் சியும், விஜய் ஆண்டனியும் பேசுனாங்க. எனக்கு விஜய் ஆண்டணியை ராஜாவாகதான் தெரியும். எங்க வீட்லேயே, `பாட்டு பாடி எதுக்கு விஷப்பரிட்ச்சை எடுக்கிறாங்கன்னு’ கேட்டாங்க.

ஊட்டில 12 வருஷத்துக்கு ஒரு முறை எப்படி குறிஞ்சிப் பூ பூக்குமோ, அதே மாதிரிதான் `மதகஜராஜா’ திரைப்படமும். இந்த படத்துல ஒரு சம்பவம் நடந்தது. அதோட என்னுடைய கரியர் முடிஞ்சதுன்னு நினச்சேன்.

ஒரு காட்சியில சம்மர்சால்ட் அடிக்கணும். அப்போ எனக்கு அடிபட்டுடிச்சு. உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போனாங்க. நான் உடற்பயிற்சி பண்ணி சரியாக இருந்ததுனால ஒன்னும் ஆகலைன்னு மருத்துவர் சொன்னாரு.” என்றார்.

How to know symptoms of Breast Cancer

How to know symptoms of Lung Cancer?

How to know symptoms of Low Sperm Count?