Sivakarthikeyan Open Talk
Sivakarthikeyan Open Talk
Listen to this article

விஜய் டிவில ரூ.4500 சம்பளம் வாங்குனப்ப என் மாமனார்…” – சிவகார்த்திகேயன் ஓப்பன் டாக்

நேசிப்பாயா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேசிப்பாயா’. மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோதான் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

Sivakarthikeyan Open Talk

இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 3) சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பங்கேற்றிருந்தார்.

இசைவெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “ஆகாஷ் உங்களுக்கு சினிமாவில சாதிக்கணும்னு நிறைய ஆசை இருக்கு. அதை சப்போர்ட் பண்ண உங்க மாமனார் சேவியர் பிரிட்டோ சார் இருக்காரு. ‘என் மகளும், மருமகனும் சினிமாவில சாதிக்க ஆசைப்படுறாங்க சிவா. நீங்க கண்டிப்பா இந்த நிகழ்ச்சிக்கு வரணும்’னு சொன்னாரு. அதுனாலயே இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். உங்ககிட்ட இருக்க உழைப்பு முழுவதையும் கொடுத்திருங்க. தமிழக மக்கள் உங்களை வரவேற்பாங்க.

உங்க அப்பாவுக்கு (முரளி) கொடுத்த இடத்தை உங்களுக்கும் கொடுப்பாங்க. எனக்கு எங்க மாமனார் ரொம்ப ஸ்பெஷல். எனக்குத் தாய்மாமாவாக இருந்தாலும் பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம். அப்போ எனக்குச் சரியான வேலை எல்லாம் கிடையாது. டெலிவிஷன்ல ஒரு எபிஷோட் பண்ணா 4000 டு 4500 ரூபாய் தருவாங்க. ஆனால் இப்ப எல்லோரும் நிறைய வாங்குறாங்க. ஏன்னா விஜய் டிவி வளர்ந்திருச்சு. நான் 4500 ரூபாய் வாங்கினாலும் பரவாலனு எங்க மாமனார் எனக்கு சப்போர்ட் பண்ணாரு.

அதுனால இந்த மேடையில எங்க மாமனாருக்கு நன்றி சொல்லணும்னு நினைக்கிறேன். 43 வயசுல அவருக்கு அட்டாக் வந்திருச்சு. எங்க அப்பா இறந்த டைம் அது. அவருக்கும் இரண்டு பொண்ணுங்க. எங்க வீட்டில நானும், எங்க அக்காவும் இருந்தோம்.

அதுனால எங்க நாலு பேரையும் பார்க்கணும்னு வேலையை விட்டுடாரு. படிச்சுருக்க தானே நீ வேலைக்கு போய் 1 லட்சம் சம்பாரினு அவரு சொல்லல. உன்னோட கனவை நோக்கி போடான்னு சொன்னாரு. எனக்குக் கிடைச்ச மாதிரியே உங்களுக்கும் மாமனார் கிடைச்சுருக்காரு ஆகாஷ். வாய்பைப் பயன்படுத்தி நிறைய பண்ணுங்க” என்று வாழ்த்தி இருக்கிறார்.

Sivakarthikeyan Open Talk

“My father-in-law, who earns Rs.4500 in Vijay TV…” – Sivakarthikeyan Open Talk
He spoke at the music launch of the film ‘Nesippaya’.

Directed by Vishnuvardhan, the film ‘Nesippaya’ stars Akash Murali, son of actor Murali and younger brother of Atharvaa, and Aditi Shankar. The film is produced by Xavier Britto, producer of the film Master.

The film is releasing on the occasion of Pongal. In this case, the audio launch of the film was held yesterday (January 3) in Chennai. Sivakarthikeyan was present at the event.

Speaking at the music launch, Sivakarthikeyan said, “Aakash, you have a lot of desire to succeed in cinema. Your father-in-law Xavier Britto sir is there to support you. ‘My daughter and son-in-law want to succeed in cinema, Siva. You must definitely come to this event’. That is why I came to this event. Give your all to be with you. The people of Tamil Nadu will welcome you.

They will give you the same place they gave to your father (Murali). My father-in-law is very special to me. Even though he is my maternal uncle, giving me a daughter is a big deal. Back then, I didn’t have any proper jobs. They would give me 4000 to 4500 rupees for an episode on television. But now everyone is charging a lot. Because Vijay TV has grown. My father-in-law supported me even if I charged 4500 rupees, it wouldn’t be a big deal.

That is why I am here on this stage. I want to thank my father-in-law. He had a stroke at the age of 43. That was when my father died. He also had two daughters. My sister and I were at home.
He left his job to look after all four of us. He didn’t tell me to go to work and earn 1 lakh rupees after studying. He said he would help me achieve my dream. Akash, you too have a father-in-law just like I did. Make the most of the opportunity and do a lot,” he congratulated me.

How to know to protect kidney?

How to know most common breast problem

Way and Mode of Breastfeeding