Hair Care: முடி வறட்சி முதல் முடி உதிர்வு வரை… வராமல் தடுக்கலாம்; வழி என்னென்ன?
அழகான கூந்தல் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம். அதில் வரக்கூடிய சில அடிப்படை பிரச்னைகளுக்காக தீர்வுகளைச் சொல்கிறார் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா.
பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட..?
பொடுகு, ஒரு வகையான பூஞ்சையால் ஏற்படுகிறது. சிலருக்கு அது வேகமாகவும், சிலருக்கு மெதுவாகவும் பரவும். சிலருக்கு என்ன செய்தாலும் நீங்காது. காரணம், அவர்கள் ஸ்கால்ப்பின் தன்மை. மரபுக்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். பொடுகை எதிர்க்க ஆன்டி ஃபங்கல் ஷாம்பூ (anti-fungal shampoo) சிறந்தது. அவற்றில் உள்ள ஸிங்க் (zinc) அல்லது சல்பர் (sulphur) பொடுகை நீக்கவல்லவை.

இயற்கை முறையைப் பின்பற்ற நினைப்பவர்கள், முதல் நாள் இரவு ஊறவைத்த வெந்தயத்தை அடுத்த நாள் அரைத்து, தயிர் சேர்த்து, தலைக்குத் தேய்த்துக் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும். வெந்தயம், கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய்க் கலவையையும் பயன்படுத்தலாம்.
‘பொடுகுத் தொல்லை இருக்கும்போது எண்ணெய் பயன்படுத்தலாமா?’ என்று கேட்கலாம். சிலருக்கு ஸ்கால்ப் வறண்டு போயிருப்பதால்கூட பொடுகு ஏற்படலாம் என்பதால், அவர்கள் எண்ணெய் வைப்பது அவசியம். ஏற்கெனவே தலை எண்ணெய்ப்பசையாக இருப்பவர்கள் ஆன்டி டாண்ட்ரஃப் ஷாம்பூ (anti-dandruff shampoo) பயன்படுத்துவது சிறந்தது.
முடி உதிர்வதை எவ்வாறு தடுப்பது?
சராசரியாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள்வரை உதிர்வது இயல்புதான். புதிய முடிகள் முளைக்கும். முடி வளர்ச்சி சுழற்சியை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.
சிலருக்கு, முடி முளைக்கும் முதல் நிலையிலிருந்து, முடி வளரும் இரண்டாவது நிலை விரைவாகக் கடக்கப்பட்டு, முடி உதிரும் இறுதி நிலைக்கு விரைவாகத் தள்ளப்படுவதால், முடி சீக்கிரமாக உதிரலாம். உடல்நிலைக் காரணம், ஊட்டச்சத்துக் குறைபாடு, மனஅழுத்தம் போன்றவை அதற்குக் காரணங்களாக இருக்கலாம்.
உங்களுக்கான காரணத்தைக் கண்டறிந்து அதைச் சரிசெய்ய வேண்டும். தலைக்கு எண்ணெய் வைத்து ரத்த ஓட்டத்தைத் தூண்டும் வகையில் மசாஜ் செய்வது, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரை வகைகள், மற்றும் முடியின் ஆரோக்கியத்துக்கு அவசியமான இரும்புச் சத்து, புரதம், கால்சியம் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்வது என முயலலாம்.

இளநரைப் பிரச்னைக்கு..?
இதற்கு உணவில் போதுமான ஊட்டச்சத்து இல்லாததே காரணம். நிறமி உற்பத்திக்கு பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் அவசியம். பி வைட்டமின்கள் குறைவாக உள்ள உணவுமுறையால் மெலனின் உற்பத்தி குறைந்து கேசம் நரைக்கிறது.
ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுதல், கேசத்துக்கு எண்ணெய் மசாஜ் செய்தல், பேக் போடுதல் என முயலலாம். ஹேர் கலரிங் பண்ணும்போது அமோனியா ஃப்ரீ ஹேர் கலரை உபயோகிப்பது நல்லது. ஹெர்பல் ஹேர் கலர் பயன்படுத்துவது சிறப்பு.
வீட்டிலேயே ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்யலாமா?
செய்யக்கூடாது. அதில் பல தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கேசத்தின் வகை, அதற்கேற்ப ஸ்ட்ரெயிட்டனிங் முறை என, இதற்கு புரொஃபஷனல் சர்வீஸ் தேவை. வீட்டில் சுயமாகச் செய்துகொள்வது கேசப் பாதிப்புக்கு வழிவகுக்கும்.
முடி வறட்சி, பிளவை எப்படிக் கையாள வேண்டும்?
முடி வறட்சிக்கு மரபு, சுருட்டை முடி எனப் பல காரணங்கள் இருக்கலாம். ஊட்டச்சத்துக் குறைபாடு காரணத்தால், அந்த வறண்ட கேசத்தில் நுனிப்பிளவு ஏற்படலாம். அந்தப் பிளவுகளை நீக்குவதற்கு எனப் பிரத்யேகக் கருவிகள் உள்ளன. அவற்றின் மூலம் பிளவை மட்டும் எடுக்கலாம். வறட்சி இருப்பவர்கள் கண்டிஷனர் உபயோகித்தால், இந்தப் பிளவு மேலும் வராமல் தடுக்கலாம்.
Hair Care: From dry hair to hair loss… can we prevent it; what are the ways?
Beautiful hair is a sign that we are healthy. Beauty therapist Vasundhara tells us the solutions to some of the basic problems that may arise in it.
Dandruff is caused by a type of fungus. For some, it spreads quickly and for some, slowly. For some, it does not go away no matter what you do. The reason is the nature of their scalp. Even heredity can be the reason for it. Anti-fungal shampoo is best to fight dandruff. The zinc or sulfur in them can remove dandruff.
Those who want to follow the natural method can get good results by soaking fenugreek seeds overnight the first day, grinding them the next day, adding yogurt, and rubbing them on the head and bathing them. You can also use a mixture of fenugreek, curry leaves, and coconut oil. You may ask, ‘Can I use oil when I have dandruff?’ Some people may experience dandruff even if their scalp is dry, so they need to apply oil. Those who already have oily scalps should use anti-dandruff shampoo.
On average, it is normal for a person to lose 50 to 100 hairs per day. New hairs will grow. The hair growth cycle can be divided into three stages. For some, hair may fall out quickly because the first stage of hair growth, the second stage of hair growth, and the final stage of hair loss are quickly passed. Health reasons, nutritional deficiencies, and stress may be the reasons for this. You need to find out the cause and correct it. You can try massaging your head with oil to stimulate blood flow, adding nutritious vegetables, greens, and iron, protein, and calcium that are essential for hair health.

Why is there a problem with premature graying?
The reason for this is insufficient nutrition in the diet. B complex vitamins are essential for pigment production. A diet low in B vitamins reduces melanin production and causes gray hair. You can try eating nutritious foods, massaging your hair with oil, and applying hair packs. It is better to use ammonia-free hair color when coloring your hair. Using herbal hair color is special.
Can you straighten your hair at home?
You should not. Many mistakes can be made in it. Depending on the type of hair and the straightening method, professional services are required for this. Doing it yourself at home can lead to hair damage.
How to treat dry hair and split ends?
There can be many reasons for dry hair, including heredity and curly hair. Due to nutritional deficiency, split ends can occur in that dry hair. There are special tools to remove those split ends. They can only remove the split ends. If those with dryness use conditioner, this split can be prevented from occurring further.
How to know symptoms of Wheezing?
How to know symptoms of Vaginal Cancer?
How to know symptoms of Low Sperm Count?