MadhaGajaRaja Film
MadhaGajaRaja Film
Listen to this article

MadhaGajaRaja: 12 வருட காத்திருப்புக்கு… மதகஜராஜாவின் ரிலீஸ் தேதியை அறிவித்த சந்தானம்!

விஷாலின் ‘மதகஜராஜா’ படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் சந்தானம் அறிவித்திருக்கிறார்.

கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர்.சி.யின் இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட் தவிர மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் எடுக்கப்பட்ட படம் ‘மதகஜராஜா’. ஜெமினி ஃபிலிம் சர்கியூட் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

MadhaGajaRaja

நடிகை சதா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தப் படம் 2012-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டது.

மேலும், அந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் எனப் படக்குழுவும் அறிவித்திருந்தது. ஆனால் சில பிரச்னைகளால் கடந்த 12 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமலிருந்தது.

MadhaGajaRaja

இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை நடிகர் சந்தானம் அறிவித்திருக்கிறார். அதன்படி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதைச் சந்தானமும் இதனைத் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

What are causes undeveloped breasts?

How to know symptoms of Premature puberty

How to know of Rheumatic Heart Disease?

How to know Symptoms of Skin Infections?