`பசங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை’ – skin care என்பது பெண்களுக்கு மட்டும்தானா?
எனக்கு டீன் ஏஜில் மகனும் மகளும் இருக்கிறார்கள். மகள், அநியாயத்துக்கு அழகு விஷயத்தில் அக்கறை செலுத்துகிறாள். அவளுக்கு நேரெதிராக மகன், அதைக் கண்டுகொள்வதே இல்லை. முகம் கழுவக்கூட சோம்பேறித்தனமாக இருக்கிறான்.
அடிப்படை சருமப் பராமரிப்பு விஷயங்களையாவது பின்பற்றச் சொன்னால், ‘பசங்களுக்கு அதெல்லாம் அவசியமே இல்லை… பொண்ணுங்களுக்குத்தான் தேவை…’ என்கிறான். பெரும்பாலான ஆண் பிள்ளைகளுக்கு இத்தகைய மனநிலை இருப்பதைப் பார்க்கிறோம்.
உண்மையிலேயே சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு என்பது பெண்களுக்கு மட்டும்தான் அவசியமா… ஆண்களுக்குத் தேவையில்லையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா
அப்படியெல்லாம் இல்லை. சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு என்பது பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என எல்லோருக்குமே அவசியம்தான். பெண்கள் அளவுக்கு ஆண்களுக்கு அதிகபட்ச கவனம் தேவையில்லை. அடிப்படை விஷயங்களைப் பின்பற்றினாலே போதுமானதாக இருக்கும். அதாவது, ஆண்களுக்கான சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு (skin care and hair care) என்பது ரொம்பவே எளிமையானது.
அடிப்படையாக மூன்று விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்தினாலே போதுமானது. அந்த வகையில், முதலில் கிளென்சர் பயன்படுத்த வேண்டும். எண்ணெய்ப் பசையான சருமம் உள்ளவர்கள் என்றால் சாலிசிலிக் அமிலமோ (Salicylic acid), லாக்டிக் அமிலமோ (Lactic acid), மாண்டெலிக் அமிலமோ (Mandelic acid) உள்ள கிளென்சராக தேர்வு செய்யலாம்.

அடுத்து சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும். இதைத் தேர்வுசெய்யும்போது மாய்ஸ்ச்சரைசர் உள்ளதாகப் பார்த்து வாங்க வேண்டும். நிறைய பேர் மாய்ஸ்ச்சரைசில் சன் ஸ்கிரீன் உள்ளதைத் தேர்வு செய்வார்கள். அது தவறு. எஸ்பிஎஃப் (SPF) 30 முதல் 50 அளவுள்ள மாய்ஸ்ச்சரைசர் சிறந்தது. அதே போல ‘நான் காமிடோஜெனிக்’ (Non-comedogenic ) என குறிப்பிடப்பட்டுள்ளதைத் தேர்வு செய்ய வேண்டும். அது சரும துவாரங்களை அடைக்காமலும், பருக்களை ஏற்படுத்தாமலும் இருக்கும். பகல் பொழுதுக்கு இந்த இரண்டும் போதும்.
ஷேவிங்கை பொறுத்தவரை ரிவர்ஸ் ஷேவ் செய்யாமல், ட்ரிம் செய்வது சிறந்தது.
இரவு, மீண்டும் முகத்தை கிளென்ஸ் செய்ய வேண்டும். 30 வயதுக்கு மேலான ஆண்கள், ஆன்டி ஏஜிங் எஃபெக்ட் வேண்டுமென்றால் ரெட்டினால் கலந்த க்ரீம் பயன்படுத்தலாம். பருக்கள், பிக்மென்ட்டேஷன் எனப்படும் மங்கு பிரச்னை இருந்தால் சரும மருத்துவரை அணுகி, அதற்கேற்ற தயாரிப்புகளை உபயோகிக்கலாம்.
ஷேவிங்கை பொறுத்தவரை ரிவர்ஸ் ஷேவ் செய்யாமல், ட்ரிம் செய்வது சிறந்தது. வாரத்தில் 3 முதல் 4 நாள்கள் தலைக்குக் குளிக்க வேண்டும். இரண்டு நாள்களாவது பொடுகு நீக்கும் ஆன்டி டாண்டிராஃப் (Anti-dandruff) ஷாம்பூ உபயோகிக்க வேண்டியதும் அவசியம். ஆண்களைப் பொறுத்தவரை இந்த விஷயங்களை ரெகுலராக செய்து வந்தாலே போதும்.

“Boys don’t need all that” – Is skin care only for women?
I have a teenage son and daughter. My daughter is obsessed with beauty. My son, on the other hand, doesn’t notice it at all. He is lazy even to wash his face.
When I ask him to follow even the basic skin care routine, he says, ‘Girls don’t need all that… girls need it…’ We see that most boys have this mentality.
Is skin and hair care really only for women… not for men?
Answers Purnima, a dermatologist from Chennai
Not at all. Skin and hair care is essential for everyone, women, men and children. Men do not need as much attention as women. Just following the basics will be enough. That is, skin care and hair care for men is very simple.
Basically, it is enough if they focus on three things. In that case, you should use a cleanser first. If you have oily skin, you can choose a cleanser that contains salicylic acid, lactic acid, or mandelic acid.
Next, you should use sunscreen. When choosing this, you should look for a moisturizer that contains sunscreen. Many people choose a moisturizer that contains sunscreen. That is wrong. A moisturizer with an SPF of 30 to 50 is best. Similarly, you should choose one that is mentioned as ‘Non-comedogenic’. It will not clog the skin pores or cause pimples. Both of these are enough for the day.
Regarding shaving, it is better to trim rather than reverse shaving.
At night, you should cleanse your face again. Men over 30 years of age can use a cream mixed with retinol if they want an anti-aging effect. If you have problems such as pimples and pigmentation, you can consult a dermatologist and use appropriate products.
Regarding shaving, it is better to trim rather than reverse shave. You should bathe your head 3 to 4 days a week. It is also necessary to use an anti-dandruff shampoo for at least two days. For men, doing these things regularly is enough.