Actress Sakshi Agarwal Wedding
Actress Sakshi Agarwal Wedding
Listen to this article

தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், நாயகியாகவும் இருந்து வருபவர் சாக்‌ஷி அகர்வால். சின்ன திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சாக்‌ஷி தனது பால்யகால நண்பரும் காதலருமான நவ்னீத் மிஸ்ரா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.

ஜனவரி 2-ம் தேதி கோவாவில் ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் இவரது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வில் இரு வீட்டாரும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இன்ஸ்டாகிராம் பதிவில் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சாக்‌ஷி.

Actress Sakshi Agarwal Wedding

“சைல்ட்ஹூட் நண்பர்கள் முதல் சோல்மேட்ஸ் ✨ கோவா வானத்தின் கீழ் காதலுக்கும் கடலலைகளுக்கும் இடையே நானும் நவ்னீத்தும் “என்றென்றைக்கும்” இணைந்திருப்பதாக சத்தியம் செய்துள்ளோம் ❤️  இதோ வாழ்நாள் முழுமைக்குமான காதல், சிரிப்பு மற்றும் முடிவில்லாத நினைவுகள்  ✨ #NakshBegins  #ChildhoodToForever ” என அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Actress Sakshi Agarwal Wedding

தமிழ் மட்டுமின்றி, மலையாளம், கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் சாக்‌ஷி. இவரது திருமண செய்தி ரசிகர்களுக்கு இனிமையானதாக அமைந்துள்ளது.

Actress Sakshi Agarwal Wedding

பிரபலங்களும், ரசிகர்களும் பிக்பாஸ் சீசன் 3-ன் புகழ்பெற்ற பங்கேற்பாளர் சாக்‌ஷிக்கு திருமண வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.