சமீபத்தில், என்னுடைய இடது காதுக்குள் பூச்சி பறப்பது போன்ற சத்தம் கேட்டது. ஒரு டாக்டரிடம் சென்றேன். சளி பிடித்தாலும் அப்படியிருக்கும் என்றார். சிலநாள்களாக சத்தம் தொடரவே, காது, மூக்கு, தொண்டை நிபுணரைச் சந்தித்தேன். இரண்டு காதிலும் லைட்டெல்லாம் அடித்துப்பார்த்தவர், ‘அழுக்கு நிறைந்திருக்கிறது.
இந்த மருந்தை தினமும் எட்டு சொட்டு வீதம், ஆறு வேளை, ஆறு நாள்களுக்குப் போடுங்கள். அதன் பிறகு, என்னை வந்து பாருங்கள். காதை சுத்தம் செய்துவிடலாம்’ என்றார். எனக்கு, நம்பிக்கையே வரவில்லை. பொதுவாக காதை சுத்தமெல்லாம் செய்யக்கூடாது என்றே கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால், அந்த மருந்தை போட்டுக் கொள்ளலாமா… வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.

என்ன ஆச்சர்ய்ம் மறுநாளிலிருந்து அந்தப் பிரச்னை இல்லை. இந்த விஷயத்தில் மருத்துவர் சொன்னது சரியா… காது அழுக்குக்கு இவ்வளவு தூரம் மருந்தெல்லாம் போட வேண்டுமா… அதேபோல, நான் செய்தது சரியா…?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா
இ.என்.டி மருத்துவர் உங்கள் காதுகளைப் பரிசோதித்துவிட்டு, அதற்கேற்பதான் காதுகளுக்கான சொட்டு மருந்தைப் பரிந்துரைத்திருப்பார். மருத்துவரே காதுகளைச் சுத்தப்படுத்தும் மருந்தைப் பரிந்துரைத்துவிட்டாரே என நாமாகவே அடுத்தடுத்த முறை அதை வாங்கிப் பயன்படுத்தக்கூடாது.
காதுக்குள் உள்ள அழுக்கை நாம் சுத்தப்படுத்த வேண்டும் என அவசியமில்லை. காதுகள் தம்மைத்தாமே சுத்தப்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்டவை. இத்தகைய சொட்டு மருந்து, காதுகளைச் சுத்தப்படுத்திவிடாது. காதுகளுக்குள் உள்ள அழுக்கை மென்மையாக்கும்.
அதனால் அந்த அழுக்கு சுலபமாக வெளியே வரும். சிலருக்கு இந்த அழுக்கானது தானாக வெளியே வராது. அந்த நிலையில் மருத்துவரை அணுகினால் வாக்ஸ் த்ரோப் எனப்படும் பிரத்யேக கருவியைக் கொண்டோ, சக்ஷன் முறையிலோ அழுக்கை அகற்றிவிடுவார்கள். அரிதாக சில சமயங்களில் சிலருக்கு மயக்க மருந்து கொடுத்துகூட இந்த அழுக்கை அகற்ற வேண்டியிருக்கும்.
காதுகளில் அழுக்கு சேர்ந்து வெளியேற முடியாத நிலையில், அது ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான அறிகுறியை ஏற்படுத்தலாம்.
காதுக்குள் பூச்சி போனால், காது கேட்காமல் போக வாய்ப்பு உண்டா?
எல்லோரும் மருத்துவர்களிடம் சென்று காதுகளைச் சுத்தப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. லட்சத்தில் ஒருவர் என்ற கணக்கில் மட்டுமே இது தேவைப்படும்.
காதுகளில் அழுக்கு சேர்ந்து வெளியேற முடியாத நிலையில், அது ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான அறிகுறியை ஏற்படுத்தலாம். உங்களுக்கு பூச்சி பறப்பது போன்ற உணர்வைத் தந்தது போல, இன்னொருவருக்கு தலைவலியை ஏற்படுத்தலாம், வேறு ஒருவருக்கு வலி, காதுகளை அடைத்துக்கொண்டது போன்ற உணர்வு என இது வேறுபடலாம்.
காதுகளின் அழுக்கு தாமாக வெளியேறுவதில் சிக்கல் உள்ளவர்கள், குறிப்பிட்ட இடைவெளியில் இ.என்.டி மருத்துவரை அணுகி சுத்தப்படுத்திக் கொள்ளலாம். சிலருக்கு ஒருசில நாள்களில் தானாகவே சரியாகிவிடும் என்பதால் நீங்கள் செய்ததும் சரிதான்.

Recently, I heard a sound like an insect flying in my left ear. I went to a doctor. He said it could be a cold. When the sound continued for a few days, I visited an ear, nose and throat specialist. He looked at both ears with a light and said, “It’s full of dirt.”
Put eight drops of this medicine every day, six times a day, for six days. After that, come and see me. I can clean your ear.” I was not convinced. I had heard that you should not clean your ear at all. So, I kept thinking whether I should put that medicine in… or not.
Surprisingly, the problem was gone from the next day. Was the doctor right in this case… Should I put so much medicine in for ear dirt? Similarly, was I right…?
Answers Deepika, an ear, nose and throat specialist from Chennai
The ENT doctor would have examined your ears and prescribed ear drops accordingly. Just because a doctor has prescribed ear cleaners, we should not buy them and use them again and again.
It is not necessary for us to clean the dirt inside the ears. The ears have the ability to clean themselves. Such drops will not clean the ears. They will soften the dirt inside the ears.
So the dirt comes out easily. For some people, this dirt does not come out on its own. If you consult a doctor in that case, they will remove the dirt with a special tool called a wax throbe or by suction. Rarely, some people may even have to be given anesthesia to remove this dirt.
When dirt accumulates in the ears and cannot be removed, it can cause different symptoms for each person.
Is there a chance that if an insect gets into the ear, you will lose your hearing?
Not everyone needs to go to the doctor to clean their ears. Only one in a million will need this.
When dirt accumulates in the ears and cannot be removed, it can cause different symptoms for each person. What may give you a feeling of flying insects may cause a headache for someone else, while for someone else it may be a pain or a feeling of blocked ears.
People who have trouble clearing their ears can visit an ENT doctor at regular intervals to have their ears cleaned. For some, it will clear up on its own in a few days, so you are right.