பெண்கள் தினமும் இரவில் பால் குடிக்கலாமா… அது உடல் எடையை அதிகரிக்குமா?
என் வயது 48. எனக்குப் பல வருடங்களாக இரவில் தினமும் பால் குடிக்கும் வழக்கம் உள்ளது. பெண்கள் தினமும் பால் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஒரு வீடியோவில் பார்த்தேன். இது உண்மையா…? பால் குடித்தால் உடல் எடை அதிகரிக்குமா?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்
பெண்கள் கட்டாயம் தினமும் பால் குடிக்க வேண்டும். பாலில் அபரிமிதமான கால்சியம் சத்து உள்ளது. அது பெண்களின் உடல்நலத்துக்கு, குறிப்பாக அவர்களின் எலும்புகளின் நலத்துக்கு மிக மிக முக்கியம்.
பால் குடிப்பதால் எடை அதிகரிக்கும் என்ற பயத்தில் பல பெண்களும் அதைத் தவிர்ப்பதாகச் சொல்வதைக் கேள்விப்படுகிறோம். பால் குடிப்பதால் உடல் எடை அதிகரித்துவிடாது. ஏனெனில் 100 மில்லி பாலில் வெறும் 85 கலோரிகள் மட்டுமே இருக்கும்.
ஆனால், அதில் 3.2 கிராம் அளவு புரதச்சத்து இருக்கிறது. அதுவும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு அடிப்படையானது. எனவே, பால் குடிக்கப் பிடிக்கும் என்பவர்கள், அதில் இனிப்பு சேர்க்காமல், மஞ்சள் தூளோ அல்லது குங்குமப்பூவோ சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம்.
பால் மற்றும் பால் பொருள்களான தயிர், மோர், பனீர், சீஸ் சைவ உணவுக்காரர்களுக்கு புரதச்சத்து குறைபாடு ஏற்படுமா?
சைவ உணவுக்காரர்களுக்கு புரதச்சத்து மற்றும் கால்சியம் சத்துக்கான தேர்வுகள் குறைவு. அந்தச் சத்துகளை பால் மற்றும் பால் பொருள்களான தயிர், மோர், பனீர், சீஸ் போன்றவற்றில் இருந்து பெற முடியும்.
அசைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களாக இருந்தாலுமே, தினமும் அசைவம் சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அவர்களுமே பால் குடிக்கலாம். சிலருக்கு பால் குடித்தால் ஏற்றுக்கொள்ளாது. லாக்டோஸ் இன்டாலரென்ஸ் (Lactose intolerance) என்ற பிரச்னை இருக்கலாம். பால் குடித்தால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது என்பவர்கள் மட்டும் அதைத் தவிர்த்தால் போதும்.
பெண்களுக்கு எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் மிக முக்கியம். குறிப்பாக, மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு எலும்புகள் வலுவிழக்கும் ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்புக்கான வாய்ப்பு மிக அதிகம். அதைத் தவிர்க்கவும் கால்சியம் சத்து முக்கியம் என்பதால் பால் குடிப்பது அவசியமாகிறது.
Can women drink milk every night… Will it increase body weight?
I am 48 years old. I have been drinking milk every night for many years. I saw a video that women will gain weight if they drink milk every day and should avoid it after a certain age. Is this true…? Will drinking milk increase body weight?
Answered by Smt. Venkatraman, a clinical dietician and wellness nutritionist from Bangalore
Women must drink milk every day. Milk contains an immense amount of calcium. It is very important for women’s health, especially for the health of their bones.
We hear many women say that they avoid drinking milk because they are afraid of gaining weight. Drinking milk does not increase body weight. Because 100 ml of milk contains only 85 calories. However, it contains 3.2 grams of protein. That is also fundamental for women’s health. Therefore, those who like to drink milk can drink it without adding any sweeteners, but can boil it with turmeric powder or saffron.
Do vegetarians suffer from protein deficiency in milk and milk products such as yogurt, buttermilk, paneer, cheese?
Vegetarians have fewer options for protein and calcium. These nutrients can be obtained from milk and milk products such as yogurt, buttermilk, paneer, cheese, etc. Even if they are non-vegetarians, the number of people who eat non-vegetarian food every day is small. They can also drink milk. Some people do not tolerate milk. They may have a problem called lactose intolerance. Only those who experience diarrhea when drinking milk need to avoid it.
Calcium and phosphorus are very important for bone health in women. Especially during menopause, women are more likely to suffer from osteoporosis, which weakens their bones. To avoid this, it is necessary to drink milk because calcium is important.