Actress Shruti Haasan
Actress Shruti Haasan
Listen to this article

கடவுள் நம்பிக்கைதான் என் பலம்… அதை நானே கண்டடைந்தேன்” – நடிகை ஸ்ருதிஹாசன் பேட்டி

பாடகர், இசையமைப்பாளர், நடிகை, மாடல் எனப் பலத் துறைகளில் பிஸியாக இருக்கிறார் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்பதத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டியளித்திருக்கிறார்.

உங்கள் வாழ்க்கையில் உங்களை வலிமையாக்கியது எது? எனக் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த நடிகை ஸ்ருதிஹாசன் “என்னுடைய மிகப் பெரிய வலிமை கடவுள் நம்பிக்கைதான். என் பக்தி என்னுடைய பெற்றோரிடமிருந்து கிடைத்ததல்ல.

Actress Shruti Haasan

அது என்னுள் தானாக நானே கண்டடைந்தது. என் வீடு ஒரு நாத்திக இல்லம். என் அம்மா ஆன்மீகவாதி ஆனால் என் அப்பா… சொல்லவே தேவையில்லை. எனவே வளரும்போது கடவுள் என்ற கருத்து எங்களுக்கு இருந்ததில்லை. ஆனால், அந்த சிந்தனையை எனக்குள் நானே கண்டுபிடித்தேன்.

Actress Shruti Haasan

கடவுளின் சக்தியை நான் மிகவும் நம்புகிறேன். அந்த சக்தி என்னை என் வாழ்க்கையில் பல விஷயங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது. நான் சிறுவயதில் வசித்த எங்கள் காலனியில், நான் சைக்கிள் ஓட்டுவதற்கு ஒரு பாதை இருந்தது. சில காரணங்களால் பிரதான வாசல் பகுதியில் சைக்கிள் ஓட்டக்கூடாது எனத் தடுத்திருந்தார்கள்.

Actress Shruti Haasan

ஆனால், ஒரே நேரத்தில் தினமும் சர்ச் – கோவில்களில் மணிச்சத்தம் கேட்கும். அப்போது அங்கு என்ன இருக்கிறது எனப் பார்க்க விரும்பினேன். என் வீட்டிலிருந்து கோயில் வெகு தொலைவு என்பதால், சர்ச்சுக்கு அடிக்கடி சென்று வருவேன். 5- 6 மாதங்களாக இது தொடர்ந்தது. ஆனால் என் வீட்டில் யாருக்கும் அது தெரியாது. பொதுவாக குழந்தைகளிடம் இதை செய்யாதே என்றால்தான் செய்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் விஷயத்தில் அப்படி நான் செய்தது மதம்…

நான் முதன்முதலில் கோயிலுக்கு சென்றது கூட நினைவிருக்கிறது. நான் சிறுமியாக இருந்தபோது, சென்னையில் என் தாத்தா என்னை ஒரு கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அதை அப்பாவிடம் சொல்லக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். அந்த சம்பவத்துக்குப் பிறகு கொஞ்சநாளில் அவர் இறந்துவிட்டார். ஆனால், ஆன்மீக ரீதியில் என் தாத்தாவுடன் நான் தொடர்புவைத்திருந்தேன்” என்றார்.

“Faith in God is my strength… I found it myself” – Actress Shruti Haasan Interview

Kamal Haasan’s daughter Shruti Haasan is busy in many fields including singer, music composer, actress, and model. She is playing a lead role in director Lokesh Kanagaraj’s Kooli. In this context, she has given an interview to a private news agency.

What made you strong in your life? The question was asked. Actress Shruti Haasan replied, “My greatest strength is faith in God. My devotion did not come from my parents.

I found it within myself. My home is an atheist home. My mother is a spiritualist but my father… needless to say. So growing up, we never had the concept of God. But, I found that thought within myself.

Actress Shruti Haasan

I believe in the power of God a lot. That power has taken me to many things in my life. In our colony where I lived as a child, there was a path where I could cycle. For some reason, they had banned cycling in the main entrance area.

But, at the same time, I would hear the bells ringing in churches and temples every day. I wanted to see what was going on there. Since the temple was far from my house, I would visit the church frequently. This continued for 5-6 months. But no one in my house knew about it. I have heard that children are usually told not to do this. In my case, what I did was religious…

Actress Shruti Haasan

I even remember the first time I went to a temple. When I was a little girl, my grandfather took me to a temple in Chennai. He also asked me not to tell my father about it. He died shortly after that incident. But I was connected to my grandfather spiritually,” he said.