கெண்டை கால் தசைப்பிடிப்பு வலி அடிக்கடி வர காரணம் என்ன… எப்படி சரிசெய்யலாம்?
என் 70 வயது பாட்டிக்கு அடிக்கடி கால் நரம்பு (கெண்டை) பிடித்துக்கொள்வதாகச் சொல்கிறார். அவர் இப்போதும் நன்றாக விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். நன்றாக நடக்கக் கூடியவர். கெண்டை பிடித்துக்கொள்ளும்போது நன்றாக எண்ணெய் தேய்த்து நீவிக் கொண்டே இருந்தால் 20 நிமிடங்களில் சரியாகிறது.
கெண்டை பிடித்தல் என்றால் என்ன… இது எதனால் ஏற்படுகிறது… இதனை எப்படி சரிசெய்யலாம்…வராமல் தவிர்க்க முடியுமா?
பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்
கெண்டை பிடிப்பது என்பதை மருத்துவ மொழியில் ‘மஸுல் கிராம்ப்’ (muscle cramp) என்று சொல்வோம். ஒரு தசையின் இயல்பே விரிந்து, சுருங்குதல்தான். இதில் சுருங்குதல் என்பதுதான் இயக்கங்களைக் கொண்டு வரும் என்றாலும், சுருங்குதலைப் போலவே விரிதலும் மிகவும் முக்கியம்.
சில சமயங்களில் சுருங்கிய தசைகள், மீண்டும் விரிவடைய முடியாமல், ரிலாக்ஸ் ஆக முடியாமல் சுருங்கிய நிலையிலேயே இருக்கும். அதைத்தான் நாம் கெண்டை பிடிப்பது (sustained muscle contraction) என்று சொல்கிறோம். நம் உடலில் ரிலாக்சேஷனுக்கு தேவையான சில தனிமங்களும், சத்துகளும் குறையும்போது இப்படி ஏற்படலாம்.
இவற்றில் பிரதானமானதும் பொதுவானதும் என்றால் நீர்ச்சத்துக் குறைபாடு. குளிர்காலங்களில் கெண்டை பிடிப்பது சற்றே அதிகமாக இருக்கும். வயதானவர்களுக்கு குளிர்காலங்களில் தாக உணர்வு சற்று குறைவாகவே இருக்கும். அடிக்கடி தண்ணீர் குடிக்காததால், அவர்களது உடலில் எளிதாக நீர்வறட்சி ஏற்படும்.
வெயில் காலத்தில் நம்மை அறியாமல் நிறைய தண்ணீர் குடிப்போம். அதனால் கோடையில் இந்தப் பிரச்னையின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். சிறு வயதினருக்கும் கெண்டை பிடித்துக்கொள்ளும் பிரச்னை வருகிறது. காரணம், இன்று பெரும்பாலும் பலரும் ஏசி செய்யப்பட்ட சூழலில் இருக்கிறோம். அதனால் உடலில் நீர் வறட்சி ஏற்படும். குளிர்காலத்தில் போர்த்திக்கொள்ளாமல் தூங்குவதால், இது இன்னும் தீவிரமாகும்.
அடுத்து நம் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் என உப்புச்சத்துக் குறைபாடு ஏற்படுவதும் கெண்டை பிடிப்பதற்கான காரணமாக இருக்கலாம். சுருக்கமாக, எலக்ட்ரோலைட் இம்பேலன்ஸ் என்று இதைப் புரிந்துகொள்ளலாம்.
மூன்றாவது முக்கிய காரணம், கால்சியம் சத்துக் குறைபாடு. அடிக்கடி கெண்டை பிடித்துக்கொள்ளும் பிரச்னை வந்தால், உடலில் கால்சியம், மக்னீசியம் மற்றும் எலக்ரோலைட் அளவுகளை செக் செய்துபார்க்க வேண்டியது அவசியம். அப்படிக் குறைபாடு இருந்தால் அதற்கான காரணம் அறிந்து சரி செய்ய வேண்டும்.
தண்ணீர் குடித்துவிட்டுத் தூங்கச் செல்ல வேண்டும். தசைகளைத் தளர்த்துவதற்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். கெண்டைக்கால் பகுதியில் மட்டுமன்றி, பாதங்கள், பாத விரல்கள், தொடைகள், கைகள் போன்ற பகுதிகளில்கூட தசைப்பிடிப்பு வரலாம். எனவே அந்தப் பகுதிக்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
தசைகளைத் தளர்த்துவதற்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
சத்துக் குறைபாடுகளுக்கான மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள், தினமும் இளநீர் குடிப்பது, மோரில் உப்பு சேர்த்துக் குடிப்பது, பொட்டாசியம் சத்துக்காக வாழைப்பழம் சாப்பிடுவது போன்றவற்றைப் பின்பற்றலாம்.
இவற்றை எல்லாம் பின்பற்றிய பிறகும் பிரச்னை சரியாகவில்லை என்றால், ‘நர்வ் கண்டக்ஷன் ஸ்டடி’ என்ற டெஸ்ட் செய்து பார்த்து, நரம்புகளும் தசைகளும் நன்றாக உள்ளனா என்று பார்க்க வேண்டும். நரம்பியல் கோளாறு ஏதேனும் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
How to know Does aspirin reduce blood sugar levels?
How to know to remove Lips Darkening
How to know some tips to retain youth?
What is the reason for frequent leg cramps… How can I fix it?
My 70-year-old grandmother says that she often gets a pinched nerve in her leg (leg). She is still doing well in agricultural work. She can walk well. If you rub oil well and keep bathing while holding the leg, it will be fixed in 20 minutes.
What is leg cramps… What causes it… How can it be fixed… Can it be prevented?
Answered by Nithya Manoj, a rehabilitation and pain management doctor from Salem
In medical terms, a leg cramp is called a ‘muscle cramp’. The nature of a muscle is to expand and contract. Although contraction is what brings about movement, expansion is as important as contraction.
Sometimes, contracted muscles cannot expand or relax again and remain in a contracted state. That is what we call sustained muscle contraction. This can happen when some of the elements and nutrients needed for relaxation are lacking in our body. The main and most common of these is dehydration. Cramping is slightly more common in winters. Elderly people have a slightly lower sense of thirst in winters. Since they do not drink water frequently, their bodies easily become dehydrated.
We drink a lot of water during the hot season without realizing it. Therefore, the impact of this problem is slightly less in summer. Even young people have the problem of cramping. The reason is that today many people are mostly in an AC environment. Due to this, the body becomes dehydrated. Sleeping without wrapping up in winters makes this even more serious.
Next, a deficiency of salts such as sodium and potassium in our body can also be the cause of cramping. In short, this can be understood as electrolyte imbalance.
The third main reason is calcium deficiency. If you have a problem of frequent cramping, it is necessary to check the levels of calcium, magnesium and electrolytes in the body. If there is such a deficiency, the cause should be identified and corrected.
You should drink water and go to sleep. You should do stretching exercises to relax the muscles. Not only in the calf area, but also in areas like the feet, toes, thighs, and hands. Therefore, you should do exercises for that area.
You should do stretching exercises to relax the muscles.
You should take medications for nutritional deficiencies. Those who do not have diabetes can follow the following: drinking fresh water every day, adding salt to buttermilk, and eating bananas for potassium.
If the problem does not improve even after following all these, a test called ‘nerve conduction study’ should be done to see if the nerves and muscles are fine. It should also be checked for any neurological disorders.