What is an inflammatory disease? அழற்சி நோய் என்றால் என்ன?
Inflammation is a natural response that our body exhibits to a major shock or injury. It marks the beginning of the healing process. However, if the inflammatory response is out of whack, the normal protective response can become harmful, causing disease.
Such a disease is referred to as an inflammatory disease. Inflammatory diseases include a number of diseases such as autoimmune diseases, allergies, asthma, hepatitis, inflammatory bowel disease (IBD), and nodular goiter.
What are the main effects and symptoms of the disease?
Inflammation is the body’s immune response. It can be acute or chronic. The following symptoms are observed:
Pain.
Redness.
Swelling.
Joint stiffness.
Muscle pain and muscle spasms.
Fever.
Fatigue.
Cold sores.
What are the main causes of the disease?
Although inflammatory diseases are caused by abnormal inflammatory reactions, the factors that trigger these abnormal inflammatory reactions are the main causes of inflammatory diseases. Some of the factors are given below:
Injury.
Infection.
Genetic factors.
Stress.
Smoking, alcohol consumption, or misuse of other drugs.
Exposure to silica and other allergens.
How is it diagnosed and treated?
The first step in a proper diagnosis is to obtain a complete medical history and conduct a complete physical examination to examine the symptoms. Diagnosis includes the following tests:
Blood tests.
Muscle tissue tests.
Myochemical examination of skin tissues.
X-rays, ultrasound, CT, and MRI studies.
In the presence of autoimmune disorders, their symptoms often overlap, so they require a differential diagnosis. Therefore, an antibody test is performed to test for the presence of specific antibodies that are expressed in a particular autoimmune disease.
Treatment of inflammatory diseases is mainly focused on the mechanism of inflammation or the immune response to various stimuli. The following treatments may be given:
Medications.
Nonsteroidal anti-inflammatory drugs (NSAIDs).
Steroids.
Immune suppressants.
Muscle relaxants.
Biological agents.
Surgery to replace joints.
The effects and symptoms of inflammation should not be ignored. Because chronic diseases require long-term treatment. Yoga and meditation help relieve stress. It is important to maintain a healthy lifestyle, eat nutritious foods, and avoid stress.
How to know symptoms of Liver Failure?
How to know symptoms Tobacco habit Cancer?
How to know symptoms of Vaginal Cancer?
அழற்சி நோய் என்றால் என்ன?
அழற்சி என்பது பெரும் அதிர்ச்சி அல்லது காயத்திற்கு நமது உடல் இயற்கையாக வெளிப்படுத்தும் ஒரு எதிர்செயலே ஆகும்.இது குணமடையும் செயல்முறையின் தொடக்கத்தையே குறிக்கிறது.எனினும், அழற்சியின் எதிர்விளைவு ஒழுங்கற்றதாக இருந்தால், வழக்கமான பாதுகாப்பு எதிர்விளைவு தீங்கு விளைவிக்கக் கூடியதாக மாறி, நோயை ஏற்படுத்துகிறது.
இத்தகைய நோயே, அழற்சி நோய் என்று குறிப்பிடப்படுகிறது.தன்னுடல் தாக்கு நோய், ஒவ்வாமைகள், ஆஸ்துமா, கல்லீரல் அழற்சி, குடல் அழற்சி நோய் (ஐ.பி.டி) மற்றும் முடிச்சச்சிறுநீரகவழற்சி போன்ற எண்ணற்ற நோய்களை அழற்சி நோய்கள் உள்ளடக்குகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
அழற்சி என்பது உடலின் நோயெதிர்ப்பு எதிர்விளைவு ஆகும்.இது கடுமையான அல்லது நாள்பட்டதாக இருக்கலாம்.இதனால் பின்வரும் அறிகுறிகள் காணப்படுகின்றன:
வலி.
சிவத்தல்.
வீக்கம்.
மூட்டுகளின் அசைவின்மை.
தசை வலி மற்றும் தசைச் சுருக்கு.
காய்ச்சல்.
சோர்வு.
வாய்ப் புண்கள்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
அழற்சி நோய்கள் ஒழுங்கற்ற அழற்சி எதிர்விளைவுகளால் ஏற்பட்டாலும், இந்த சீரற்ற அழற்சி எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் காரணிகளே அழற்சி நோய்கள் ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்களாகும்.சில காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
காயம்.
நோய்த் தொற்று.
மரபணு காரணிகள்.
மன அழுத்தம்.
புகை பிடித்தல், மது அருந்துதல் அல்லது பிற மருந்துகளின் தவறான பயன்பாடு.
சிலிக்கா மற்றும் பிற ஒவ்வாபொருள்களின் வெளிப்பாடு.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
முறையான நோய் கண்டறிதளுக்கான முதல் படிநிலை, முழுமையான மருத்துவ பின்புலத்தைப் பெறுவது மற்றும் தென்படும் அறிகுறிகளை ஆய்வு செய்ய முழுமையான உடல் பரிசோதனைகளை மேற்கொள்ளுதலே ஆகும்.நோய் கண்டறிதல் பின்வரும் சோதனைகளை உள்ளடக்குகிறது:
இரத்தப் பரிசோதனை.
தசை திசுப் பரிசோதனை.
தோல் திசுக்களின் தசைமவியல் சார்பரிசோதனை.
எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் (மீயொலி), சிடி மற்றும் எம்ஆர்ஐ ஆய்வுகள்.
தன்னுடல் தாக்கு கோளாறுகள் இருக்கும் பட்சத்தில், அவற்றின் அறிகுறிகள் உடன்நிகழ்வதால், அவற்றிற்கு வேறுபட்ட நோய் கண்டறிதல் தேவைப்படுகிறது.எனவே, குறிப்பிட்ட தன்னுடல் தாக்கு நோயில்வெளிப்படும் குறிப்பிட்ட பிறபொருளெதிரிகளின் இருப்பை சோதிக்க எதிர்ப்பியக்கவர்பொருள் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அழற்சி நோய்களுக்கான சிகிச்சை முக்கியமாக அழற்சி ஏற்படுவதற்கான வழி அல்லது பல்வேறு தூண்டுதல்களுக்கான நோய்த்தடுப்பு எதிர் விளைவுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது.பின்வரும் சிகிச்சை அளிக்கப்படலாம்:
மருந்துகள்.
ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (என்.எஸ்.ஏ.ஐ.டி).
ஸ்டீராய்டுகள்.
நோய்த்தடுப்பாற்றல் ஒடுக்கிகள்.
தசை தளர்த்திகள்.
உயிரியல் முகவர்கள்.
அறுவை சிகிச்சை மூலம் மூட்டுகளை மாற்றுதல்.
அழற்சியின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளை கவனிக்காமல் விட்டு விடக்கூடாது.ஏனெனில், நாள்பட்ட நோய்களுக்கு நீண்ட கால சிகிச்சையளிக்க வேண்டும்.மன அழுத்தத்தைப் போக்க யோகா மற்றும் தியானம் உதவுகிறது ஆரோக்கியமாக இருத்தல், சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உண்ணுதல் மற்றும் மன அழுத்தத்தை தவிர்த்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.