Iron Poisoning
Iron Poisoning
Listen to this article

What is iron Poisoning? இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பு என்றால் என்ன?

If a person consumes too much iron-rich foods, usually within a short period of time, the body accumulates too much iron and causes iron Poisoning. Iron Poisoning is more common in children than in adults.

What are the main effects and symptoms of the disease?

Early symptoms of iron Poisoning are abdominal cramps and gastric discomfort.

A person who consumes too much iron may have black stools or blood in the stool.

Other early symptoms are dehydration and severe vomiting.

If these early symptoms resolve within 24 hours, more serious symptoms may appear. They include: Difficulty breathing, irregular pulse, dizziness, bluish skin, and increased body temperature.

The severity of symptoms depends on the level of iron intake.

What are the main causes of infection?

A common cause of iron Poisoning in children is the consumption of excessive iron supplements. This can happen in children when they are not supervised by adults or when the pills are within easy reach.

Iron supplements are recommended for children and adults for anemia. But taking it without doctor’s advice, or in uncontrolled amounts can lead to iron Poisoning.

Ingestion of more than 20 mg of iron per 1 kg of body weight causes symptoms of Poisoning.

At 60mg/kg, severe complications occur. This requires immediate treatment.

How is it diagnosed and treated?

If a child has symptoms of iron Poisoning, the doctor will know the background of the iron intake.

Blood tests are done to check the level of iron in the blood. These are iron studies.

Iron tablets in the gastrointestinal tract can be tested by standard draft, however, this does not always seem reliable.

The treatment for this is as follows:

If symptoms of iron Poisoning disappear within a few hours, treatment is not needed.

However, persistent symptoms without resolution require treatment.

The immediate treatment for this is gastric lavage using chemical agents.

Another method is to inject a special chemical into the body through a vein. A chemical called deferoxamine binds to iron and helps to flush toxins through the urine. However, this chemical is known to cause respiratory side effects.

Iron Poisoning

How to know symptoms of Breast Cancer

How to know about kidney stone pain?

What are causes undeveloped breasts?

இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பு என்றால் என்ன?

ஒருவர் வழக்கமாக ஒரு குறுகிய நேரத்திற்குள், இரும்புச் சத்து நிறைந்தவற்றை அதிகமாக உட்கொண்டால், உடலில் இரும்புச்சத்து அதிக அளவில் சேர்ந்து இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பு ஏற்படுகிறது. இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பு பெரியவர்களை விட குழந்தைகளிடத்தில் மிகவும் பொதுவாக காணப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பின் ஆரம்ப கால அறிகுறிகள் வயிற்றுப் பிடிப்பு மற்றும் இரைப்பை அசௌகரியம் ஆகும்.

அதிகப்படியான இரும்புச்சத்து நிறைந்தவற்றை உட்கொண்டவருக்கு கறுப்பு நிற மலம் அல்லது மலத்தில் இரத்தம் இருக்கும்.

இதன் பிற ஆரம்ப கால அறிகுறிகள் நீர்ச்சத்துக் குறைவு மற்றும் கடுமையான வாந்தி ஆகும்.

இந்த ஆரம்ப கால அறிகுறிகள் 24 மணி நேரத்திற்குள் சரியாகவிட்டால், தீவிரமான அறிகுறிகள் தோன்றும். அவை பின்வருவனவற்றில் அடங்கும்: சுவாசிப்பத்தில் சிரமம், ஒழுங்கற்ற நாடித் துடிப்பு, தலைச்சுற்றல், தோல் நீல நிறமாக மாறுதல், உடலின் வெப்பநிலை அதிகரித்தல் சிம்மத்தின் தீவிரம்.

அறிகுறிகளின் தீவிரம் இரும்புச்சத்து உட்கொண்டதன் அளவைப் பொறுத்ததே ஆகும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

குழந்தைகளில் இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பு ஏற்படுவதற்கான பொதுவான காரணம் அதிகப்படியான இரும்புச்சத்து பிற்சேர்க்கைகளின் நுகர்வு ஆகும். இது குழந்தைகளிடத்தில் பெரியவர்களால் கண்காணிக்கப்படாத போது அல்லது மாத்திரைகள் எளிதில் எட்டும் வகையில் இருந்தால் ஏற்படும்.

இரத்த சோகைக்கு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இரும்புச் சத்து பிற்சேர்க்கைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் மருத்துவரின் ஆலோசனை இன்றி, அல்லது கட்டுப்பாடற்ற அளவிலான உட்கொள்ளல் இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பிற்கு வழிவகுக்கும்.

1 கிலோ உடல் எடைக்கு 20மிகி-க்கும் அதிகமாக இரும்புச்சத்து உட்கொண்டால், நச்சுத்தன்மையின் அறிகுறிகள் தோன்றுகின்றன.

60மிகி / கிலோவிற்கு, கடுமையான சிக்கல்கள் ஏற்படும். இதற்கு உடனடி சிகிச்சை அவசியமானதாகும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

ஒரு குழந்தைக்கு இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தால், மருத்துவர் உட்கொண்ட இரும்பின் அளைவைப் பற்றிய பின்புலத்தை அறிவார்.

இரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தின் அளவைக் கண்டறிய இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை இரும்புச்சத்து ஆய்வுகள் ஆகும்.

இயல்நிலை வரைவு மூலம் இரைப்பை குடலில் உள்ள இரும்பு மாத்திரைகளை சோதிக்க முடியும், இருப்பினும், இது எப்போதும் நம்பகமானதாக தோன்றுவது இல்லை.

இதற்கான சிகிச்சை முறை பின்வருமாறு:

இரும்புச்சத்து நச்சுப் பாதிப்பின் அறிகுறிகள் ஒரு சில மணி நேரத்திற்குள் மறைந்துவிட்டால், சிகிச்சை தேவைப்படுவது இல்லை.

இருப்பினும், நிவாரணமின்றி காணப்படும் தொடர்ச்சியான அறிகுறிகளுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது.

இரசாயன பொருட்கள் பயன்படுத்தி இரைப்பையை கழுவுவதே இதற்கான உடனடி சிகிச்சை ஆகும்.

மற்றொரு முறை உடலில் ஒரு விசேஷ இரசாயனத்தை நரம்பின் வழியாக செலுத்துவதே ஆகும். டெஃபெராக்ஸ்மைன் என்ற இரசாயனம் இரும்புடன் பிணைந்து, சிறுநீர் வழியாக நச்சை வெளியேற்ற உதவுகிறது. எனினும், இந்த இரசாயனம் சுவாச பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.