Joint Pain
Joint Pain
Listen to this article

What is joint pain? மூட்டு வலி என்றால் என்ன?

Pain in the joints is called arthralgia or joint pain. It is caused by many factors, but the most common cause is injury or arthritis, which can lead to disability if neglected or untreated.

What are the main effects and symptoms of the disease?

Symptoms of joint pain include:

Redness or warmth in the painful area.

Swelling in the joints.

Soft joints.

Difficulty in performing normal activities like walking, writing due to pain in joints in different parts of the body.

Increased incidence of recurrent pain.

The affected area is stiff and emaciated.

Bleeding in joint spaces.

What are the main causes of infection?

Joint pain can be caused by many reasons:

Common causes of joint pain include:

Damage to the cartilage at the back of the kneecap.

Joint inflammation or bleeding into joint spaces.

Gout or pseudogout due to increased uric acid levels in the body.

Viral infections.

Connective tissue disorders, including scleroderma (scleroderma) or cutaneous nodules (lupus).

Common factors that are less common include:

Fracture – A broken arm or wrist, a broken leg, a broken ankle, or a hip fracture.

Arthritis – This includes rheumatoid arthritis (immune arthritis), rheumatoid arthritis, or rheumatoid arthritis.

Osgood-Schlatter disease.

The rarest of all:

A tropical infection.

Conditions like cancer, blood clotting (hemophilia), putrefactive arthritis.

Bone collapse due to lack of blood flow.

Recurrent joint dislocation.

How is it diagnosed and treated?

To diagnose joint pain, the doctor will thoroughly understand the background of the symptoms and perform a physical examination to determine the cause of the disease. Some of the following tests may also be recommended:

Complete blood cell count test, anti-nuclear antibody, rheumatoid factor, anti-SS-A (anti-RO) and anti-SS-B (anti-LA) antibodies, anticardiolipin antibodies, VTR Blood tests including L test, cytoplasmic antineutrophil cytoplasmic auto-antibody (c-ANCA), creatinine and creatine kinase (CPK), calcium.

Urinalysis to determine uric acid levels.

Joint absorption and synovial fluid analysis.

X-rays of the affected area, magnetic resonance images (MRI) etc.

Electrocardiogram.

Double-stranded DNA testing.

Human Leukocyte Antibody – B27 (HLA-B27).

After identifying the cause of joint pain, it is treated using the following procedures:

For mild pain, medications such as ibuprofen or acetaminophen, or pain-relieving creams containing capsaicin applied topically to the affected area, are advised.

Treating the symptom that caused the arthritis with an appropriate medication.

If an infection is the cause, treat it to relieve pain.

Some of the home care methods are:

Applying heat to reduce stiffness in muscles and joints, applying cold to reduce inflammation and doing some gentle exercise regularly can reduce pain.

Some conditions require complete rest of the joints.

Avoid smoking.

Joint Pain

What are causes undeveloped breasts?

How to know symptoms of Premature puberty

How to know of Rheumatic Heart Disease?

மூட்டு வலி என்றால் என்ன?

மூட்டுகளில் ஏற்படும் வலியே அர்த்ரால்ஜியா அல்லது மூட்டு வலி என்றழைக்கப்படுகிறது. இது பல காரணிகளால் ஏற்படுகிறது, ஆனால் மிகவும் பொதுவான காரணம் காயம் அல்லது கீல்வாதம் ஆகும், இது புறக்கணிக்கப்பட்டாலோ அல்லது சிகிசிச்சை அளிக்காவிட்டாலோ ஊனம் ஏற்படலாம்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

மூட்டு வலியின் அறிகுறிகள் பின்வருமாறு:

வலி இருக்கும் பகுதி சிவந்திருத்தல் அல்லது சூடாக இருத்தல்.

மூட்டுகளில் வீக்கம்.

மென்மையான மூட்டுகள்.

உடலின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மூட்டுகளில் ஏற்படும் வலியினால் நடைபயிற்சி, எழுதுதல் போன்ற வழக்கமான செயல்களைச் செய்வதில் சிரமம்.

திரும்பத் திரும்ப வலியின் தாக்கம் அதிகமாக இருப்பது.

பாதிக்கப்பட்ட பகுதி விறைத்து இருப்பது மற்றும் கன்றிப்போய் இருப்பது.

மூட்டு இடைவெளிகளில் இரத்தப்போக்கு.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

மூட்டு வலி பல காரணங்களால் ஏற்படுகிறது:

மூட்டு வலியின் பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

முழங்கால் சில்லின் பின்புறத்தில் உள்ள குருத்தெலும்பு சேதமடைதல்.

மூட்டு உட்பூச்சுஅழற்சி அல்லது மூட்டு இடைவெளிகளில் இரத்தப்போக்கு.

உடலில் அதிகரித்த யூரிக் அமில அளவுகளால் கீல்வாதம் அல்லது போலி கீல்வாதம் ஏற்படுதல்.

வைரல் நோய்த்தொற்றுகள்.

மேற்தோல் செதிலாக்கம் (ஸ்கிலிரோடெர்மா) அல்லது தோல் முடிச்சு நோய் (லூபஸ்) உள்ளிட்ட இணைப்பு திசு கோளாறுகள்.

குறைவாகக் காணப்படும் பொதுவான காரணிகள் பின்வருமாறு:

முறிவு – முறிவடைந்த கை அல்லது மணிக்கட்டு, முறிவடைந்த கால், முறிவடைந்த கணுக்கால் அல்லது  இடுப்பு எலும்பு முறிவு.

மூட்டழற்சி – இதில் வினைவாதம் (நோயெதிர்ப்பிய முடக்கு வாதம்), சிரங்குவாதம் அல்லது முடக்கு வாதம் ஆகியவை அடங்கும்.

ஒஸ்குட்- ஸ்க்லட்டர் நோய்.

அனைத்திலும் அரிதானவைகள்:

வெப்பமண்டலம் சார்ந்த நோய்த்தொற்று.

புற்றுநோய், இரத்தம் உறையாக்கேடு (ஈமோஃபீலியா), அழுகலுற்ற மூட்டழற்சி போன்ற நிலைகள்.

எலும்பு இரத்த ஓட்டமின்மையால் நொறுங்குதல்.

திரும்ப திரும்ப மூட்டு விலகுதல்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

மூட்டு வலியைக் கண்டறிய மருத்துவர் அறிகுறிகளின் பின்புலத்தை முழுமையாக அறிந்து, நோயின் காரணத்தை அறிய உடல் பரிசோதனைகளை மேற்கொள்ளவர். பின்வரும் சில பரிசோதனைகளும் பரிந்துரைக்கப்படலாம்:

முழு இரத்த அணுக்கள் எண்ணிக்கை பரிசோதனை, செல் உட்கரு எதிர்ப்பு ஆன்டிபாடி, முடக்குவாதக்காரணி, எதிர்ப்பு-எஸ்.எஸ்.-ஏ (எதிர்ப்பு ஆர்.ஓ) மற்றும் எதிர்ப்பு-எஸ்எஸ்-பி (ஆன்டி-எல்.ஏ) பிறபொருளெதிரிகள், ஆன்டிகார்டியோலிப்பின் பிறபொருளெதிரிகள், வி.டி.ஆர்.எல் பரிசோதனை, சைட்டோபிளாஸ்மிக் ஆன்டிநியூட்ரோஃபில் சைட்டோபிளாஸ்மிக் ஆட்டோ ஆன்டிபாடி (சி-ஏ.என்.சி.ஏ), கிரியேடினைன் மற்றும் கிரியேட்டின் கினேஸ் (சி.பி. கே), சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) போன்றவற்றை உள்ளடக்கிய இரத்த பரிசோதனைகள்.

யூரிக் அமில அளவுகளை கண்டறிய சிறுநீர் பகுப்பாய்வு.

மூட்டு உறிஞ்சுதல் மற்றும் மூட்டுறை திரவ பகுப்பாய்வு.

பாதிப்புக்கு உட்பட்ட பகுதியின் எக்ஸ்-ரே, காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) போன்றவைகள்.

எலக்ட்ரோகார்டியோகிராம்.

இரட்டை இழை டிஎன்ஏ சோதனை.

மனித வெள்ளையணு எதிர்ப்பி – பி 27(ஹெச்.எல்.ஏ-பி 27).

மூட்டு வலியின் காரணத்தை கண்டறிந்த பிறகு, பின்வரும் நடைமுறைகளைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்கப்படும்:

லேசான வலியின் போது, இப்யூபுரூஃபன் அல்லது அசெட்டமினோஃபென், அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் மேற்பூச்சாகத் தடவப்படும் காப்சைசின் கொண்ட வலி நிவாரணி கிரீம்கள் போன்ற மருந்துகள் அறிவுறுத்தப்படுகின்றன.

மூட்டழற்சி ஏற்பட காரணமாக இருந்த அறிகுறிக்கு உகந்த மருந்தைக் கொண்டு சிகிச்சை அளித்தல்.

ஒரு தொற்று நோய் தான் காரணம் என்றால், அதற்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் வலி குறைத்தல்.

வீட்டு பராமரிப்பு முறைகளில் சில:

தசைகள் மற்றும் மூட்டுகளின் விறைப்பினை குறைக்க வெப்ப பயன்பாடு, வீக்கத்தை குறைக்க குளிர்ச்சி பயன்பாடு  மற்றும்  வலியை  குறைக்கக்கூடிய சில  மென்மையான உடற்பயிற்சிகள் தொடர்ந்து செய்தல்.

சில வரையறைகளில் மூட்டுகளுக்கு  முழுமையான ஓய்வு தேவைப்படும்.

புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.