What is kidney cancer? சிறுநீரக புற்றுநோய் என்றால் என்ன?
Kidney cancer can occur in many forms. Almost 90-95% of kidney cancers are cancers of the kidney cells. It mostly affects the elderly; However, genetic factors can also affect young people. Kidney cancer is very rare in children. It is very difficult to diagnose and treat this disease as it does not show any specific symptoms or effects in the early stages.
What are the main effects and symptoms of the disease?
Kidney cancer does not manifest itself until it reaches advanced stages. Most patients do not have any symptoms. The following three symptoms are warning signs:
Blood in the urine.
Pain on one or both sides of the back or in the lower abdomen (read more: Causes of Back Pain)
A palpable lump in the abdomen.
Other symptoms include sudden and unexpected weight loss, loss of appetite, fatigue, fever etc. Often, it shows no symptoms. The disease is diagnosed through routine screening tests done for some other purpose.
What are the main causes of infection?
Kidney cancer cannot be said to be caused by just one cause. Many factors contribute to the development of kidney cancer. They are as follows:
Smoking doubles the risk of developing cancer.
Obesity with a body mass index (BMI) over 30.
High blood pressure.
Exposure to aromatic chemicals such as benzene.
Prolonged emulsification or separation of urine.
Receive a kidney transplant.
How is it diagnosed and treated?
Kidney cancer has few symptoms, but kidney cancer is known to be associated with several neoplastic syndromes, including high calcium levels and high red blood cell counts. Often, tests begin with clinical background and tests.
If other kidney diseases are suspected, a series of blood tests and urine tests are performed. If cancer is suspected or a tumor is found in the abdomen, physical imaging tests such as CT scan, magnetic resonance imaging (MRI) are required. Ultrasound, positron emission tomography, and chest X-rays (X-rays) may be performed to understand the extent of disease displacement.
Treatment varies based on the stage of kidney cancer. Treatment often involves surgical removal of part or the entire kidney, depending on the size of the tumor. This may be combined with chemotherapy.
How to know symptoms of Vaginal Cancer?
How to know symptoms of Testicular Cancer
How to know symptoms of Oral Cancer?
சிறுநீரக புற்றுநோய் என்றால் என்ன?
சிறுநீரக புற்றுநோயானது பல வகைகளில் ஏற்படக்கூடும். சிறுநீரக புற்றுநோய்களில் கிட்டத்தட்ட 90-95% சிறுநீரக உயிரணுக்களில் ஏற்படும் புற்றுநோயாகும். இது பெரும்பாலும் முதியவர்களை பாதிக்கிறது; இருப்பினும், பரம்பரை காரணிகளால் இளைஞர்களும் பாதிக்கப்படக்கூடும்.
குழந்தைகளில் சிறுநீரக புற்றுநோய் மிக அரிதாகவே ஏற்படக்கூடும். ஆரம்ப கட்டத்தில் குறிப்பிட்ட அறிகுறிகளையோ தாக்கங்களையோ வெளிக்காட்டாததால், இந்த நோயை கண்டறிந்து சிகிச்சையளிப்பது மிகவும் கடினம் ஆகும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
சிறுநீரக புற்றுநோயானது முற்றிய கால கட்டத்தை எட்டும் வரை தௌிவாக வெளிப்படுவதில்லை. பெரும்பாலான நோயாளிகளுக்கு எந்த ஒரு அறிகுறியும் இருப்பது இல்லை. பின்வரும் மூன்று அறிகுறிகள் இதற்கான எச்சரிக்கையாக இருக்கிறது:
சிறுநீரில் இரத்தம் சேர்ந்து வெளியேறுதல்.
முதுகின் ஒரு அல்லது இரு புறங்களிலும் அல்லது அடிவயிற்றுப் பகுதியில் வலி (மேலும் வாசிக்க: முதுகுவலி ஏற்படுவதற்கான காரணங்கள்).
அடிவயிற்றில் தொட்டுணரக்கூடிய கட்டி இருத்தல்.
திடீர் மற்றும் திட்டமிடப்படாத எடை இழப்பு, பசியின்மை, சோர்வு, காய்ச்சல் முதிலியன பிற அறிகுறிகளாகும். பெரும்பாலும், இது எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை. வேறு சில நோக்கத்திற்காக செய்யப்படும் இயல்நிலை வரைவு சோதனைகள் மூலம் இந்த நோய் கண்டறியப்படுகிறது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
சிறுநீரக புற்றுநோய் ஒரு காரணத்தால் தான் ஏற்படுகிறது என்று சொல்லிவிட முடியாது. சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவதற்கு பல காரணிகள் பங்களிக்கின்றன. அவை பின்வருமாறு:
புகைப்பிடித்தல், புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தை இரட்டிப்பாக்குகிறது.
30 க்கு மேல் உள்ளஉடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) உடன் கூடிய உடல் பருமன்.
உயர் இரத்த அழுத்தம்.
பென்சீன் போன்ற நறுமண இரசாயனங்களின் வெளிப்பாடு.
நீண்ட கால கூழ்மப்பிரிப்பு அல்லது சிறுநீர் பிரித்தல்.
மாற்று சிறுநீரகத்தை பெற்றிருத்தல்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
சிறுநீரக புற்றுநோயானது சில அறிகுறிகளை மட்டுமே கொண்டிருக்கிறது, ஆனால் சிறுநீரக உரியணுக்கள் புற்றுநோயானது, அதிகப்படியான கால்சியம் அளவுகள் மற்றும் அதிக இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை போன்றவற்றை உட்பட பல புதுப்பெருக்கப்பக்கவிணை நோய்க்குறிகளுடன் தொடர்புடையதாக அறியப்படுகிறது.
பெரும்பாலும், சோதனைகள் மருத்துவ பின்புலம் மற்றும் பரிசோதனைகளோடு தொடங்குகின்றன. வேறு சிறுநீரக நோய்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், தொடர்ச்சியான பல இரத்த பரிசோதனைகள் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. புற்று நோய் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால் அல்லது அடிவயிற்றில் கட்டி இருப்பதை கண்டறிந்தால், சிடி ஸ்கேன், காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) போன்ற இயல்நிலை வரைவு சோதனைகள் தேவைப்படுகின்றன.
நோய் இடம் மாறலின் அளவைப் புரிந்து கொள்ள, மீயொலி, பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராபி, மார்பு எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் – ரே) சோதனை செய்யப்படலாம்.
சிறுநீரக புற்றுநோய் எந்தக் கட்டத்தில் உள்ளது என்பதின் அடிப்படையில் சிகிச்சை மாறுபடுகிறது. சிகிச்சை பெரும்பாலும் கட்டியின் அளவைப் பொறுத்து பகுதி அல்லது முழு சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படுவதை உள்ளடக்குகிறது. இதனோடு கீமோதெரபி (வேதி சிகிச்சை) இணைக்கப்படலாம்.