itching of the anus
itching of the anus
Listen to this article

Excessive itching of the anus: என் வயது 43. சமீப காலமாக எனக்கு ஆசனவாய் பகுதியில் அரிப்பு அதிகமிருக்கிறது.  அதுவும் குறிப்பாக, இரவில் இந்த அரிப்பு மிகவும் அதிகமாவதை உணர்கிறேன்.  அசௌகர்யத்தையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தும் இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்… இதிலிருந்து முழுமையாக விடுபட என்ன தான் வழி?

பதில் சொல்கிறார், சருமநல மருத்துவர் .

இந்தியாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 5 சதவிகித மக்களுக்கு ஆசனவாய் அரிப்பு பிரச்னை இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இதுதான் காரணம் என ஒன்றை மட்டும் இதில் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

ஆசனவாய் அரிப்புக்கான காரணங்கள் வயதுக்கேற்ப, நபருக்கேற்ப வேறுபடலாம். இந்தப் பிரச்னைக்கான அடிப்படை காரணம், இன்ஃபெக்ஷன் எனப்படும் தொற்று பாதிப்பு. அது ஸ்கேபிஸ் தொற்றாகவோ, ஃபங்கஸ் எனப்படும் பூஞ்சைத் தொற்றாகவோ, வைரஸ் தொற்றாகவோ…. எதுவாகவும் இருக்கலாம். கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை சற்றே தீவிரமாக இருக்கலாம். சிலர் வேறு சில பாதிப்புகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள், அவற்றின் பக்க விளைவுகள் காரணமாகவும் ஆசனவாய் அரிப்பு ஏற்படலாம்.

சிலருக்கு சருமம் அளவுக்கதிக வறட்சியாக இருக்கும். அதுவும் அரிப்புக்கு காரணமாகலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் ஆசனவாய் அரிப்புக்கு ‘ஏடோபிக் டெர்மடைட்டிஸ்’ (Atopic dermatitis) எனப்படும் சரும பிரச்னை காரணமாக இருக்கலாம்.

itching of the anus

இரவில் மட்டும் ஆசனவாயில் அரிப்பு அதிகமாகிறது என்றாலோ, கை, கால்களின் விரல் இடுக்குகளில் எல்லாம் அரிக்கிறது என்றாலோ, தாமதிக்காமல் சரும மருத்துவரை அணுகுங்கள். அவர் உங்கள் அறிகுறி, அரிப்பின் தீவிரம், அது நீடிக்கும் நேரம் போன்றவற்றையும் உங்கள் உணவுப்பழக்கம், அந்தரங்க சுகாதாரம், நோய் பின்னணி, அவற்றுக்கு எடுக்கும் சிகிச்சைகள் என எல்லாவற்றையும் கேட்டறிந்து, அதற்கான காரணத்துக்கேற்ப சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.

காரணத்துக்கேற்ற சிகிச்சைதான் இந்தப் பிரச்னையிலிருந்து உங்களுக்கு நிரந்தர நிவாரணம் தருமே தவிர, நீங்களாக மருந்துக் கடைகளில் வெளிப்பூச்சுக்கு பவுடர், க்ரீம் வாங்கிப் பயன்படுத்துவதோ, மாத்திரைகள் எடுத்துக்கொள்வதோ சரியானதல்ல.

How to know Does aspirin reduce blood sugar levels?

How to know to remove Lips Darkening

How to know some tips to retain youth?

Excessive itching of the anus: I am 43 years old. And especially at night I feel this itching gets worse. What causes this problem that causes discomfort and embarrassment… and what is the way to get rid of it completely?

The answer is, Dermatologist.

A statistic says that nearly 5 percent of India’s population suffers from anal itching. It cannot be said that only one reason is this.

Causes of anal itching can vary by age and person. The main cause of this problem is infection. It could be a scabies infection, a fungal infection, a viral infection… anything. The problem can also be more serious in people with uncontrolled diabetes. Medications that some people take for other conditions can also cause anal itching due to their side effects.

Some people have excessively dry skin. It can also cause itching. Anus itching in children can be caused by a skin problem called ‘Atopic dermatitis’.

itching of the anus

If the anus is itching only at night, or the fingers and toes are itchy all over, consult a dermatologist without delay. He will take into account your symptoms, severity of itching, how long it lasts, your diet, personal hygiene, medical history and treatments and prescribe treatment based on the cause.

Treatment according to the cause will give you permanent relief from this problem, but it is not right to buy powder, cream or take pills for external coating from drugstores.