Vertigo
How to know symptoms and Vertigo Remedy?
Listen to this article

Vertigo: குனிஞ்சு டக்குன்னு நிமிர்ந்தா, மயக்கம் வர்ற மாதிரி ஒரு சுழட்டு சுழட்டும். ஒரு பக்கம் பார்த்துட்டே இருந்துட்டு, சடார்னு இன்னொரு பக்கம் திரும்பி பார்க்கிறப்போ மயக்கம் வர்ற மாதிரி இருக்கும். படுக்கையில இருந்து எழுந்திருக்கிறப்போ, உலகமே சுற்றி வர்ற மாதிரி இருக்கும். இந்தப் பிரச்னையோட பேரு வெர்டிகோ. இது எதனால வருது, வராம தடுக்க முடியுமா, வந்தா எப்படி சரி செய்யலாம் என, இயற்கை மருத்துவர் அவர்களிடம் கேட்டோம்.

”வெர்டிகோவுல பெரிபெரல், சென்ட்ரல்னு 2 வகைகள் இருக்கு. முதல் வகை காதுகள்ல இருக்கிற பிரச்னைகளால வரக்கூடியது. அதாவது, காதுல ஏதாவது தொற்று இருந்தாலோ, அதிகமா அழுக்கு சேர்ந்திருந்தாலோ காதுக்குள் அழுத்தம் மாறுபடும். இதனால வர்றது பெரிபெரல் வெர்டிகோ.

தலையில அடிபட்டிருந்தாலோ, தலையில் இருக்கிற ரத்தக்குழாய்கள்ல அடைப்பு ஏற்பட்டிருந்தாலோ, மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலி இருந்தாலோ, கழுத்து எலும்பில் தேய்மானம் ஏற்பட்டு அது அங்கிருக்கும் நரம்புகளை அழுத்தினாலோ வரக்கூடியது சென்ட்ரல் வெர்டிகோ.

இந்தப் பிரச்னை இருந்தா நடக்குறப்போ, ரோடை கிராஸ் பண்றப்போ, வண்டி ஓட்டுறப்போ ரொம்ப கஷ்டப்படுவாங்க; பயப்படவும் செய்வாங்க. இந்தப் பிரச்னை இருக்கிறவங்க உடனடியா மருத்துவரைப் பார்த்து ‘எதனால அவங்களுக்கு வெர்டிகோ வந்திருக்கு’ன்னு தெரிஞ்சுக்கிட்டு சிகிச்சை எடுக்க ஆரம்பிக்கலாம்.”

சரி, இந்த வெர்டிகோ வராம தடுக்கிறதுக்கு இயற்கை மருத்துவத்துல வழிகள் இருக்கான்னு கேட்டா, இருக்குன்னு சொல்றார் டாக்டர் .

Vertigo

”உட்காரும்போது உங்களுடைய முதுகுத்தண்டு நேராக இருக்கணும். சேர்ல உட்கார்ந்திருந்தீங்கன்னா, உங்க கால்கள் தரையில படணும். உங்க போஸ்ச்சர் (posture) சரியா இருந்தாலே வெர்டிகோ வராம தடுக்கலாம்.

படுக்கையில இருந்து எழுந்திருக்கும்போது, வேகமா எழுந்து நிக்கக்கூடாது. முதல்ல ஒருக்களிச்சு திரும்பணும். அப்புறம் தலையை நிமிர்த்தணும். பிறகு எழுந்து அப்படியே சில நொடிகள் உட்காரந்து இருக்கணும். அதுக்குப்பிறகுதான் எழுந்து நிக்கணும்.

குனிஞ்சிட்டிருந்தீங்கன்னா, வேகமா நிமிரக்கூடாது. அந்த நேரம் யாராவது கூப்பிட்டா, வேகமா திரும்பிப்பார்க்கவும் கூடாது.

காதுகள்ல தொற்று ஏற்படாத அளவுக்கு முறையா பராமரிக்கணும்.

ஒருவேளை வெர்டிகோ வந்துட்டாலும் சரி செய்ய முடியும்.

காதுல பிரச்னை இருக்கிறதால வெர்ட்டிகோ வந்திருந்தா, தொற்றையும் அழுக்கையும் முதல்ல சரி செஞ்சுட்டு, பிறகு பிராமரி பிராணாயாமம் பண்ண ஆரம்பிங்க. இதனால, காதுக்குள்ள அழுத்தம் சமநிலைக்கு வரும். கூடவே, ஒற்றைத்தலைவலியையும் கன்ட்ரோலுக்குள்ள கொண்டு வந்திடலாம்.

பெப்பர்மின்ட் ஆயில், லேவண்டர் ஆயில், லெமன் கிராஸ் ஆயில் மூன்றையும் கலந்து, அதில் இரண்டு துளிகளை கர்சீஃபில் தெளித்து நுகர்ந்து வந்தால், அடிக்கடி வருகிற வெர்ட்டிகோ படிப்படியா எப்போதாவது என மாறும். இதே அரோமோ ஆயில்களால் தலையில் மசாஜ் செய்து வந்தாலும் வெர்ட்டிகோ அடிக்கடி வருவது கன்ட்ரோலுக்குள் வரும். 2015-ல் நடந்த ஆய்வு ஒன்று இதை நிரூபணமும் செஞ்சிருக்கு.

கழுத்து எலும்பில் தேய்மானம் ஏற்பட்டு அது அங்கிருக்கும் நரம்புகளை அழுத்துறதால வர்ற வெர்ட்டிகோவுக்கு, இயற்கை மருத்துவத்துல இருக்கிற ‘கைரோ பிராக்டீஸ் (Kairo Practice) சிகிச்சை கொடுத்து, படிப்படியா சரி செஞ்சிடலாம். மொத்தத்துல வெர்ட்டிகோ வந்தா பயந்துடாதீங்க” என்கிறார் டாக்டர் .

How to know symptoms Tobacco habit Cancer?

How to know symptoms of Vaginal Cancer?

How to know symptoms of Testicular Cancer

Vertigo: When sitting upright, a dizzying spin occurs. If you keep looking at one side and look back at Saturn on the other side, you will feel dizzy. When you get out of bed, the world seems to revolve around you. This problem is called vertigo. Why does it occur, can it be prevented, and how can it be corrected, the naturopathic doctor said.

There are 2 types of vertigo, peripheral and central. The first type can be caused by problems in the ears. That is, if there is an infection in the ear or if there is a lot of dirt, the pressure inside the ear will vary. This causes peripheral vertigo.

Central vertigo can occur if there is a blow to the head, if there is a blockage in the blood vessels in the head, if there is a migraine headache, or if there is wear and tear in the neck bone and it presses on the nerves there.

If you have this problem, you will find it very difficult to walk, cross the road, or drive a car; Don’t be afraid. People who have this problem can immediately see a doctor to find out why they have vertigo and start treatment.

Well, if you ask if there are ways in natural medicine to prevent this vertigo, the doctor will say that there is.

“Your spine should be straight while sitting. If you are sitting on a chair, your feet should be on the floor. You can prevent vertigo if your posture is correct.

When getting out of bed, do not get up too quickly. First, let’s go back a bit. Then raise your head. Then get up and sit for a few seconds. Only then should you get up.

If you are bent over, don’t stand up quickly. If someone calls at that time, don’t look back quickly.

Proper care should be taken to prevent ear infections.

Maybe vertigo can be fixed.

If there is a problem in the ear or vertigo, first remove the infection and dirt and then start doing Bramary Pranayama. This will balance the pressure in the ear. Also, migraines can be brought under control.

If peppermint oil, lavender oil and lemongrass oil are mixed together and two drops are sprinkled on the kerchief and consumed, frequent vertigo will gradually become occasional. Frequent head vertigo comes under control even after head massage with these same aroma oils. A 2015 study proved this.

Vertigo caused by wear and tear on the neck bone and compression of the nerves there can be gradually corrected with the treatment of ‘Kairo Practice’ in naturopathic medicine. “Do not be afraid if you get vertigo,” says Dr.