solution to skin problems
solution to skin problems
Listen to this article

Solution to skin problems : சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு

Potatoes can be used not only for cooking but also for skin care. Let’s see how to solve skin problems with potato juice.

Potato cures skin problems

Potatoes can be used not only for cooking but also for skin care. Vitamin B-6 in it improves skin beauty. It also facilitates the formation of new cells. Let’s see how to solve skin problems with potato juice.

Add two tablespoons of potato juice and two teaspoons each of almond oil and milk and mix well. Apply this mixture on the face and neck area and wash it off with warm water after quarter of an hour. If you do this regularly, your skin will glow.

People suffering from acne and the resulting spots and inflammation can mix a tablespoon of potato juice with a tablespoon of tomato juice and apply it on their face and wash it off with cold water after an hour. If you do this before going to sleep at night or after waking up in the morning, you will get good results soon.

Apply 2 tablespoons of potato juice and half a tablespoon of honey on the face and neck to maintain a smooth, soft skin glow. Wash off with cold water after 10 minutes.

People suffering from dark circles under the eyes can mix 2 tablespoons of potato juice with equal amount of cucumber juice and massage it under the eyes before sleeping. After waking up in the morning wash with cold water and the dark circles will start disappearing.

Potato juice can also be used to control the viscosity of oil on the face. Mix a tablespoon of multani methi with 2 tablespoons of potato juice and apply it on the face. Leave it to dry for half an hour and then wash it off with cold water. you will get good results soon.

solution to skin problems

How to know Does aspirin reduce blood sugar levels?

How to know to remove Lips Darkening

How to know some tips to retain youth?

உருளைக்கிழங்கை சமையலுக்கு மட்டுமின்றி சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கு சாறு மூலம் சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதம் பற்றி பார்ப்போம்.

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை சமையலுக்கு மட்டுமின்றி சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். அதிலிருக்கும் வைட்டமின் பி-6, சரும அழகை மெருகேற்றும். புதிய செல்கள் உருவாகுவதற்கும் வழிவகைசெய்யும். உருளைக்கிழங்கு சாறு மூலம் சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதம் பற்றி பார்ப்போம்.

இரண்டு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் தலா இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய், பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் சருமம் பொலிவு பெறும்.

முகப்பரு மற்றும் அதனால் உண்டாகும் புள்ளிகள், வீக்கம் போன்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் ஒரு டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தக்காளி சாறுவை கலந்து முகத்தில் தடவிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம். இரவில் தூங்க செல்லும் முன்பாகவோ அல்லது காலையில் எழுந்த பின்போ இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

மிருதுவான, மென்மையான சரும பொலிவை தக்கவைத்துக்கொள்வதற்கு 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன், அரை டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து முகம், கழுத்து பகுதியில் பூசி வரலாம். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.

கண்களுக்கு அடியில் கருவளையம் பாதிப்பை எதிர்கொள்பவர்கள் 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுடன் சம அளவு வெள்ளரிக்காய் சாறுவை கலந்து தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு அடியில் தடவி மசாஜ் செய்யலாம். காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர, கருவளையங்கள் மறையத் தொடங்கும்.

முகத்தில் படியும் எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையை கட்டுப்படுத்தவும் உருளைக்கிழங்கு சாறுவை பயன்படுத்தலாம். 2 டேபிள்ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறுவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் முல்தானி மெட்டியை பசை போல் குழப்பி முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் உலர வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.