laryngitis disease
laryngitis disease
Listen to this article

What is laryngitis disease? குரல்வளை அழற்சி என்றால் என்ன?

Inflammation of the larynx and vocal cords is referred to as laryngitis. Hoarseness occurs due to irregular vibration of the vocal cords. Studies have shown that it is more common among people aged 30-50 years. Chronic laryngitis occurs in 3.5 persons per 1000 population.

What are the main effects and symptoms of the disease?

The main symptoms are:

Voice change or hoarseness.

Sore throat.

fever

headache

Cough.

shortness of breath

Runny nose.

Acid reflux is a common problem in which stomach acid reaches the vocal folds, leading to laryngitis.

What are the main causes of infection?

The main cause of laryngitis is a viral (microorganism) or bacterial infection. However, the incidence of viral (microorganism) laryngitis is high. Atrophy of the vocal cords can exacerbate this condition. When it continues for more than 3 weeks, it is said to be a chronic condition. Other causes of laryngitis include:

Cigarette use.

Alcohol abuse.

Inhaled irritants such as fuel exhausts, certain chemicals and smoke.

Overuse of vocal cords.

How is it diagnosed and treated?

It is usually diagnosed through physical examination and evaluation of symptoms. The background of the disease may reveal the cause of laryngitis. The larynx is usually examined using a laryngoscope.

Usually, this condition will subside and heal on its own. Depending on the cause, treatment is given. A bacterial infection can be treated with antibiotics. If acid reflux is the cause, antacids may provide relief.

Self-care Tips:

Drink more fluids to flush out toxins.

Avoid exposure to smoke.

Gargle with warm salt water.

Rest your voice without talking and avoid talking loudly.

Inhale steam to relieve stuffy nose.

Nasal decongestants should be avoided as they may dry out the throat.

If these medical tips do not provide relief, consult your doctor.

In severe cases, laryngitis can cause difficulty breathing. Intensive treatment is required in these cases.

laryngitis disease

How to know Importance of Breastfeeding?

How to know symptoms of Liver Failure?

How to know symptoms Tobacco habit Cancer?

குரல்வளை அழற்சி என்றால் என்ன?

குரல்வளை மற்றும் குரல் நாண்களின் வீக்கம் குரல்வளை அழற்சி என குறிப்பிடப்படுகிறது. குரல் நாண்களின் ஒழுங்கற்ற அதிர்வு காரணமாக கீச்சுக்குரல் தோன்றுகிறது. 30-50 வயதுடையவர்களிடையே இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. நாட்பட்ட குரல்வளை அழற்சி மக்கள்தொகையில் 1000 பேருக்கு 3.5 நபரிடத்தில் ஏற்படும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:

குரல் மாற்றம் அல்லது கீச்சுக்குரல்.

தொண்டை வலி.

காய்ச்சல்.

தலைவலி.

இருமல்.

மூச்சு இரைப்பு.

மூக்கு ஒழுகுதல்.

அமிலப் பின்னோட்டம் காரணமாக வயிற்றில் உள்ள அமிலம் குரல் வளையை அடையும் பொது, சிக்கல்கள் ஏற்பட்டு, அது குரல்வளை அழற்சிக்கு வழிவகுக்கிறது.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

குரல்வளை அழற்சியின் பிரதான காரணம் வைரஸ் (அதிநுண்ணுயிர்) அல்லது பாக்டீரியா நோய்த்தொற்றே ஆகும். இருப்பினும் வைரல் (அதிநுண்ணுயிர்) குரல்வளை அழற்சி நிகழ்வுகள் அதிகமாக உள்ளது. குரல் நாண்களின் நலிவு இந்த நிலையை மேலும் அதிகப்படுத்தும். இது 3 வாரங்களுக்கும் மேலாக தொடரும் போது, ​​இது நாள்பட்ட நிலையாகக் கூறப்படுகிறது. குரல்வளை அழற்சி ஏற்படுவதற்கான பிற காரணங்கள்:

சிகரெட்டின் பயன்பாடு.

சாராய மிகைநுகர்ச்சி.

எரிபொருள் வெளியேற்றங்கள், சில இரசாயனங்கள் மற்றும் புகை போன்ற சுவாசிக்கப்பட்ட எரிச்சலூட்டிகள்.

குரல் நாண்களை அதிகமாகப் பயன்படுத்துதல்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

உடல் பரிசோதனை மற்றும் அறிகுறிகளின் மதிப்பிடல் ஆகியவற்றின் வாயிலாக இது பொதுவாக கண்டறியப்படுகிறது. நோயின் பின்புலம் குரல்வளை அழற்சியின் காரணத்தை வெளிப்படுத்தலாம். குரல்வளை நோக்கியை பயன்படுத்தி வழக்கமாக குரல்வளை பரிசோதிக்கப்படுகிறது.

பொதுவாக, இந்த நிலை தானாகவே அடங்கி குணமாகிவிடும். நோய்க்காரணியை பொறுத்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிநுண்ணுயிர் தொற்றாக இருந்தால் அதிநுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுடன் சிகிச்சையளிக்கப்படலாம். அமிலப் பின்னோட்டம் காரணமாக இருந்தால், அமில எதிர்ப்பு மருந்துகள் நிவாரணம் அளிக்கலாம்.

சுய பாதுகாப்பு குறிப்புகள்:

நச்சுகளை வெளியேற்றுவதற்கு அதிக திரவங்களை உட்கொள்ளவும்.

புகை வெளிப்பாடு தவிர்க்கவும்.

வெதுவெதுப்பான உப்பு நீர் கொண்டு கொப்புளிக்க வேண்டும்.

பேசாமல் குரலுக்கு ஒய்வு கொடுக்கவும் மற்றும் சத்தமாக பேசுவதை தவிர்க்கவும்.

மூக்கு அடைபட்திருந்தால் அதிலிருந்து நிவாரணம் பெற நீராவி உள்ளிழுத்தல் செய்யவும்.

நாசி சளியிளக்கிகள் தொண்டையை வறண்டு விட செய்யக்கூடும் என்பதால் அதனைப் பயன்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும்.

இந்த மருத்துவக் குறிப்புகள் நிவாரணம் அளிக்காத பட்சத்தில், உங்கள் மருத்துவரை அணுகவும்.

கடுமையான நிகழ்வுகளின் போது குரல்வளை அழற்சி சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். இச்சமயங்களில் தீவிர சிகிச்சை தேவை.