What is leprosy Disease? தொழு நோய் என்றால் என்ன?
Leprosy or Hansen’s disease is an infection of the skin and nerves caused by Mycobacterium ilebrae. This condition affects the skin, mucous membranes, peripheral nerves, eyes and respiratory system.
According to the World Health Organization (WHO), leprosy can be spread through the respiratory tract and by insects. It can also be spread through close contact with an infected person, as is widely believed.
It is classified based on skin coating results as follows:
Leprosy (PP) – negative smears.
Tubercular or tubercular leprosy (MB) – positive smears.
What are the main effects and symptoms of the disease?
It has visible symptoms that make it easy to detect. They are as follows:
Usually flat, discolored (pale) patches appear on the skin.
Insensitive lesions that are lighter than the surrounding area.
Nodules on the skin.
Dry and rough skin.
Large eruption on feet.
Rash on face or ears.
Partial or complete loss of eyelashes and eyebrows.
Other symptoms include:
Excessive sweating and numbness in the affected area.
Paralysis.
Muscle weakness.
Varicose veins, especially in the elbows and knees.
Effects on facial nerves can lead to blindness.
In the advanced stage of the disease it can lead to:
Numbness of legs and arms.
Fingers and toes flexed, lowered, fingers turned and recurved.
Leg ulcers that do not heal.
Nasal deformity.
Skin irritation.
Painful or tender nerves.
What are the main causes of infection?
Leprosy is caused by Mycobacterium ilebrae, a bacterium commonly found in the environment. Genetic mutations and variations increase the chance of developing leprosy. Similarly, inflammation and inflammation in the immune system increases the chances of developing leprosy. The disease is spread through prolonged close contact with an infected person or by breathing contaminated air mixed with nasal droplets containing the bacteria.
How is it diagnosed and treated?
Leprosy is characterized by the appearance of irregular, dark or scaly patches of skin. These patches may also be red. To confirm the test finding, the doctor may perform a skin or nerve tissue test.
This condition is treated with a combination of antibiotics. Multidrug therapy is essential to avoid antibiotic resistance. These include dapsone, clofazimine, and rifampicin. If allergic to these drugs, minocycline, clarithromycin and ofloxacin are useful alternatives.
Special footwear should be selected to help relieve numbness, protect the feet and restore normal gait. Surgery helps to correct visible defects and improve self-confidence.
Overall, this condition is reversible within a year’s time. It is imperative to consult your doctor immediately. Intensive and timely treatment helps to cure the disease completely.
How to know Does aspirin reduce blood sugar levels?
How to know to remove Lips Darkening
How to know some tips to retain youth?
தொழு நோய் என்றால் என்ன?
தொழு நோய் அல்லது ஃகான்சன் நோய் என்பது மைக்கோபாக்டீரியம் இலெப்ரேவால் ஏற்படும் சருமம் மற்றும் நரம்புகளின் நோய்த்தொற்று ஆகும். இந்த நிலை சருமம், சளிச் சவ்வுகள், புற நரம்புகள், கண்கள் மற்றும் சுவாச மண்டலம் ஆகியவற்றை பாதிக்கிறது.
உலக சுகாதார அமைப்பின்படி (டபுள்யூ.ஹெச்.ஓ), தொழு நோய் சுவாச வழிப்பாதை வழியாகவும், பூச்சிகள் மூலமாகவும் பரவக்கூடும். பரவலாக நம்பப்படுவதைப் போல பாதிக்கப்பட்ட நபருடனான நெருக்கமான தொடர்பு மூலமாகவும் இது பரவகக்கூடும்.
இது சரும பூச்சு முடிவுகளின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது:
பலக்கோலுயிரி அல்லது லெப்ரமேட்டசு வகைத் தொழுநோய் (பிபி) – எதிர்மறை பூச்சுகள்.
டியூபர்குலார் அல்லது அருகிகோலுயிரி வகைத் தொழுநோய் (எம்பி) – நேர்மறை பூச்சுகள்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதனை எளிதில் கண்டறியும் வகையில் உள்ள பார்க்கக் கூடிய அறிகுறிகளைக் கொண்டுள்ளது. அவை பின்வருமாறு:
பொதுவாக தட்டையான, நிறமிழந்த (வெளிர்ந்த) திட்டுக்கள் சருமத்தில் காணப்படும்.
சுற்றியுள்ள பகுதிகளை விட இலகுவாக இருக்கும் உணர்வற்ற காயங்கள்.
சருமத்தின் மீதுள்ள முடிச்சுகள்.
வறண்ட மற்றும் விறைப்பான சருமம்.
பாதங்களில் பெரிய வெடிப்பு இருத்தல்.
முகம் அல்லது காதுகளில் தடிப்பு.
பகுதி அல்லது முழு அளவிலான கண் இமைகள் மற்றும் புருவங்களின் இழப்பு.
பிற அறிகுறிகள் பின்வருமாறு:
பாதிக்கப்பட்ட பகுதியில் அதிகமாக வியர்த்தல் மற்றும் உணர்ச்சியின்மை.
பக்கவாதம்.
தசை பலவீனம்.
குறிப்பாக முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் விரிவடைந்த நரம்புகள்.
முக நரம்புகளில் ஏற்படும் விளைவு குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கக்கூடும்.
நோய் முற்றிய கால கட்டத்தில் இது பின்வருவனவற்றிற்கு வழிவகுக்கும்:
கால் மற்றும் கைகளின் முடக்கம்.
கை, கால் விரல்கள் மடங்கியிருத்தல், குறைந்திருத்தல், விரல்கள் திரும்பியிருத்தல் மற்றும் மீளுறிஞ்சல்.
ஆறாத கால் புண்கள்.
மூக்கு விகாரமாகுதல்.
தோலில் எரிச்சல் ஏற்படுதல்.
வலிமிகுந்த அல்லது மென்மையான நரம்புகள்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
சுற்றுச்சூழலில் பொதுவாகக் காணப்படும் மைக்கோபாக்டீரியம் இலெப்ரே என்ற பாக்டீரியாவால் தொழுநோய் ஏற்படுகிறது. மரபணு மாற்றம் மற்றும் வேறுபாடுகள் தொழுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
இதேபோல், நோய் எதிர்ப்பு அமைப்பில் ஏற்படும் மற்றும் வீக்கம் தொழுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. நோய்த்தொற்றுடைய நபருடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பில் இருத்தல் அல்லது பாக்டீரியாவைக் கொண்ட நாசி துளிகள் கலந்த அசுத்தமான காற்றை சுவாசிப்பதன் காரணமாக இந்நோய் பரவுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
எப்பொழுதும் போல் இல்லாமல், சருமம் இருண்ட அல்லது மங்கலான திட்டுக்கள் பட்டை பட்டை பட்டையாகத் தென்படுதல் மூலம் தொழுநோய் அறியப்படுகிறது. இந்த திட்டுக்கள் சிவப்பாகவும் இருக்கக்கூடும். பரிசோதனை கண்டுபிடிப்பை உறுதிப்படுத்த, மருத்துவர் தோல் அல்லது நரம்பு திசு பரிசோதனையை மேற்கொள்ளக்கூடும்.
இந்த நிலைமை நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் கலவை மூலமாக சிகிச்சையளிக்கப்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கான எதிர்ப்புத்தன்மையை தவிர்க்க பன்மருந்து முறையிலான சிகிச்சை அவசியமாகும்.
இது டாப்சோன், க்லோஃபாசிமைன் மற்றும் ரிபாம்பிசின் போன்றவற்றை உள்ளடக்குகிறது. இந்த மருந்துகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால், மினோசயிக்ளின், க்ளாரித்ரோமைசின் மற்றும் ஒப்லோக்ஷாசின் ஆகிய மருந்துகள் பயனுள்ள மாற்றுகளாக விளங்குகிறது.
உணர்ச்சியற்ற தன்மையைப் போக்க, கால்களைப் பாதுகாக்க மற்றும் சாதாரண நடையை மீட்டெடுக்க உதவும் வகையிலான சிறப்பு காலணிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அறுவை சிகிச்சை காணக்கூடிய குறைபாடுகளை சரிசெய்யவும், தன்னம்பிக்கையை மேம்படுத்தவும் உதவுகிறது.
ஒட்டுமொத்தத்தகில், இந்த நிலை ஒரு வருட காலத்திற்குள் சரிசெய்யக் கூடியதாகும். உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுவது அவசியமானதாகும். தீவிரமான மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பதே முழுமையாக நோயை குணப்படுத்த உதவுகிறது.