To Read this Post , Use Translator for Your language

How to know symptoms of Liver Failure? - healthtamil.com
Liver Failure
Liver Failure
Listen to this article

What is liver failure? கல்லீரல் செயலிழப்பு என்றால் என்ன?

The liver can perform many functions. It filters the blood, converts food into usable energy and has defensive functions. Inability to perform some or all of these functions is called liver failure.

What are its main signs and symptoms?

Liver failure has two main types: acute liver failure and chronic liver failure.

Acute liver failure can start suddenly and develop over a period of days or weeks. Its symptoms are as follows:

Yellowing of the skin and eyes (jaundice).

Nausea and vomiting.

Fatigue and confusion.

Acute liver failure can cause brain damage known as cerebral encephalopathy and loss of communication skills over time.

Chronic liver failure can take months or even years to show any symptoms. Other symptoms in addition to symptoms of acute liver failure include:

Swelling due to fluid retention in the legs.

Accumulation of fluid in the abdomen (ascites).

Weight loss.

Unexpected bleeding.

A third type of liver failure is known as acute-chronic liver failure, which has recently been discovered and is known as acute-chronic liver failure, which is an exacerbation of liver failure caused by a sudden worsening of liver function.

What are its main causes?

Causes of acute liver failure include:

Side effects from taking certain medications such as antiepileptics.

Viral infections such as hepatitis B or hepatitis C infection.

Consuming poisonous substances.

Sometimes, cancer can also cause liver failure.

While preparing the herbs.

Causes of chronic liver failure include:

Long-term alcoholism.

Liver cirrhosis.

Autoimmune diseases such as autoimmune hepatitis.

Genetic diseases.

Nutritional deficiency.

What is its diagnosis and treatment?

When you approach the doctor with the symptoms mentioned above, he/she will check the medical history taken earlier for alcoholism and genetic diseases.

A biopsy with a simple blood test can help diagnose liver disease.

Abdominal ultrasound, CT scan and MRI Some other tests like this help the doctor to evaluate liver health.

Treatment includes treating the underlying cause and correcting symptoms to stabilize patients.

If liver failure occurs as a result of drug intake, other drugs are substituted to reverse the drug’s effects.

If only one part of the liver is affected, removing only that particular part will allow the liver to function again.

Liver transplantation is the only alternative treatment if liver failure is irreversible.

Dietary and lifestyle changes are also necessary to support the treatment regimen.

Liver Failure

How to know about kidney stone pain?

What are causes undeveloped breasts?

How to know symptoms of Premature puberty

கல்லீரல் செயலிழப்பு என்றால் என்ன?

கல்லீரல் எனும் உறுப்பு பல செயல்பாடுகளை செய்யக்கூடியது. அது இரத்தத்தை ஃபில்டர் செய்தல், உணவுகளை உபயோகப்படும் சக்தியாக மாற்றுதல் மற்றும் தற்காப்பு செயல்பாடுகளை கொண்டிருத்தல் போன்றவை ஆகும். இத்தகைய செயல்பாடுகளில் சிலவற்றையோ அல்லது முழுவதையுமோ செய்ய முடியாமல் போகும் நிலையே கல்லீரல் செயலிழப்பு என அழைக்கப்படுகிறது.

இதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

கல்லீரல் செயலிழப்பு என்பது இரண்டு முக்கிய வகைகளை கொண்டிருக்கிறது: அவை கடுமையான கல்லீரல் செயலிழப்பு மற்றும் நாட்பட்ட கல்லீரல் செயலிழப்பு ஆகும்.

கடுமையான கல்லீரல் செயலிழப்பு என்பது திடீரென ஆரம்பித்து ஒரு சில நாட்கள் அல்லது வாரங்களில் ஏற்படக்கூடியது. இதன் அறிகுறிகள் பின்வருமாறு:

தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிற சாயத்தடத்தை கொண்டிருப்பது (மஞ்சள் காமாலை).

குமட்டல் மற்றும் வாந்தி.

சோர்வு மற்றும் குழப்பம்.

கடுமையான கல்லீரல் செயலிழப்பு என்பது மூளைக்குரிய என்செபலாபதி என அழைக்கப்படும் மூளை சேதத்தை ஏற்படுத்தி காலம் மற்றும் நேரத்திற்கான தொடர்புணர்வினை இழக்க செய்கிறது.

Liver Failure

நாட்பட்ட கல்லீரல் செயலிழப்பு ஏதேனும் அறிகுறிகளை காட்டுவதற்கு மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் கூட ஆகலாம். கடுமையான கல்லீரல் செயலிழப்பு அறிகுறிகளுடன் கூடுதலாக காணப்படும் மற்ற அடையாளங்கள் பின்வருமாறு:

கால்களில் திரவம் தேங்கியிருப்பதால் ஏற்படும் வீக்கம்.

அடிவயிற்றில் திரவம் திரண்டிருத்தல் (நீர்க்கோவை).

எடை இழப்பு.

எதிர்பாராத இரத்தக்கசிவு.

மூன்றாவது வகையான கல்லீரல் செயலிழப்பு கடுமையான-நாட்பட்ட கல்லீரல் செயலிழப்பு என அழைக்கப்படுகிறது, இது சமீபத்தில் கண்டறியப்பட்டது, அதாவது திடீரென மோசமடையும் கல்லீரல் செயல்பாட்டினால் நாட்டப்பட்ட கல்லீரல் செயலிழப்பு மிகைப்படுத்தப்படுவதே கடுமையான-நாட்பட்ட கல்லீரல் செயலிழப்பு என அறியப்படுகிறது.

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

கடுமையான கல்லீரல் செயலிழப்புக்கான காரணங்கள் பின்வருமாறு:

ஆண்டிபிலிப்டிக்ஸ் போன்ற சில மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்.

ஹெப்படைடிஸ் பி அல்லது ஹெப்படைடிஸ் சி தொற்று போன்ற வைரல் தொற்றுகள்.

விஷம் நிறைந்த பொருட்களை உட்கொள்தல்.

சில நேரங்களில், புற்றுநோய் கூட கல்லீரல் செயலிழப்புக்கு காரணமாக இருக்கலாம்.

மூலிகைகளை தயாரிக்கும்போது.

நாள்பட்ட கல்லீரல் செயலிழப்புக்கான காரணங்கள் பின்வருமாறு:

நீண்ட-கால குடிப்பழக்கம்.

கல்லீரல் இழைநார் வளர்ச்சி.

ஆட்டோ இம்யூன் ஹெப்படைடிஸ் போன்ற ஆட்டோ இம்யூன் நோய்கள்.

மரபணு நோய்கள்.

ஊட்டச்சத்துக் குறைபாடு.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளுடன் நீங்கள் மருத்துவரை அணுகும் போது, அவர் / அவள் முன்னர் எடுக்கப்பட்ட மருத்துவ வரலாற்றில் மதுபழக்கம் மற்றும் மரபணு நோய்கள் இருக்கின்றதா என்பதை பார்ப்பார்.

ஒரு எளிய இரத்த பரிசோதனையுடன் கூடிய திசுப்பரிசோதனையானது கல்லீரல் நோயினை கண்டறிய உதவுகிறது.

வயிற்றில் எடுக்கப்படும் அல்ட்ராசவுண்ட், சி.டி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. போன்ற மற்ற சில சோதனைகள் மருத்துவருக்கு கல்லீரல் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்ய உதவுகிறது.

அடிப்படைக் காரணத்திற்கு சிகிச்சையளித்தல் மற்றும் நோயாளிகளை நிலைப்படுத்த அறிகுறிகளை சரிசெய்தல் ஆகியவைகள் சிகிச்சை முறையினுள் அடங்குபவை.

மருந்து உட்கொள்வதன் விளைவால் கல்லீரல்சார் செயலிழப்பு ஏற்பட்டால், அந்த மருந்தின் விளைவுகளை மாற்றுவதற்கு மற்ற மருந்து பொருட்கள் மாற்றீடு செய்யப்படுகிறது.

கல்லீரலின் ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் நீக்கப்படுவதால் கல்லீரல் மீண்டும் செயல்படத்துவங்கும்.

கல்லீரல் செயலிழப்பு குணப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கு கல்லீரல் இடமாற்றம் மட்டுமே மாற்று சிகிச்சையாகும்.

சிகிச்சை முறைக்கு துணைப்புரியக்கூடிய உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களும் அவசியம்.