To Read this Post , Use Translator for Your language

How to know symptoms Lymphoma Cancer? - healthtamil.com
Lymphoma Cancer
Lymphoma Cancer
Listen to this article

What is lymphoma Cancer? நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் (லிம்போமா) என்றால் என்ன?

Lymphoma is a type of cancer characterized by the uncontrolled growth of lymphocytes without cell death. lead to

What are the main effects and symptoms of the disease?

The early symptoms of lymphoma are usually treated as normal health problems and ignored. Some of its early symptoms are listed below:

Swollen lymph nodes that appear in areas such as the neck or the junction of the abdomen and thighs or the armpits.

Fatigue.

Transient or intermittent fever.

Night sweats.

Sudden and unexplained weight loss.

Anorexia.

Hair loss.

However, if this disease is left untreated, its symptoms can be very severe and noticeable. Some of the symptoms of the advanced condition include:

bone pain

Difficulty breathing.

Prolonged weakness and fatigue.

As the condition progresses, the above-mentioned symptoms increase to a large extent.

What are the main causes of infection?

When lymphomas occur, lymphocytes, the white blood cells responsible for the immune system against foreign threats, become proliferated for a variety of reasons.

The specific cause of such a sudden burst of lymphocytes is still unknown, and studies are being conducted to diagnose it. Certain factors, such as age and gender, have been predicted to be a risk factor for this cancer. But no one has proven this to be true to date.

Risk factors for lymphoma that are known and should be avoided include obesity, carcinogens, alcoholism, smoking, radiation and tobacco.

How is it diagnosed and treated?

A doctor or hematopathologist will recommend testing for uncontrolled cell types and tissue examination based on symptoms that suggest lymphoma.

After the cause of lymphoma is diagnosed, other tests, such as blood tests with chest X-rays, computed tomography (CT) or magnetic resonance imaging (MRI), are done to find the affected areas in the body and determine the rate of progression of the disease.

Depending on the stage of the cancer, the treatment methods are carried out.

In the early stages of the disease, the usual treatment is medical therapy. However, chemotherapy and radiation therapy have been introduced in recent years. Drugs such as rituximab, which target cancer cells like rituximab, are effective in such cases. Cell transplantation helps to create new and healthy immune cells.

Lymphoma Cancer

How to know Does aspirin reduce blood sugar levels?

How to know to remove Lips Darkening

How to know some tips to retain youth?

நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் (லிம்போமா) என்றால் என்ன?

லிம்போமா என்பது, செல்களின் இறப்பு இல்லாமல், நிணநீர் அணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் வகைப்படுத்தப்படும் ஒரு வகையான புற்று நோய் ஆகும்.இது நிணநீர் அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கும், மற்றும் அவை அனைத்தும் ஒரே இடத்தில குவியும் தன்மைக்கும். வழிவகுக்கும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

லிம்போமாவின் ஆரம்ப அறிகுறிகள்  பொதுவாக, சாதாரண  உடல்நலப் பிரச்சினைகளாக கருதப்பட்டு,  அலட்சியப் படுத்தப்படுகிறது.அதன் ஆரம்ப அறிகுறிகளில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

கழுத்து அல்லது வயிறு மற்றும் தொடை இணையும் இடம் அல்லது அக்குள் போன்ற பகுதிகளில் தோன்றும்  நிணநீர் முனைகளில்  ஏற்படும் வீக்கம் ஆகும்.

சோர்வு.

நிலையற்ற அல்லது இடைவிடாத காய்ச்சல்.

இரவில் ஏற்படும் வியர்வை.

திடீர் மற்றும் விவரிக்கப்படாத எடை இழப்பு.

பசியிழப்பு.

முடி கொட்டுதல்.

எனினும், இந்த நோய் கவனிக்கப்படாவிட்டால்,இதன் அறிகுறிகள் மிகவும் கடுமையானதாகவும், குறிப்பிடத்தக்கதாகவும் இருக்கும்.முற்றிய நிலையின் அறிகுறிகள் சில பின்வருமாறு:

எலும்பு வலி.

சுவாசிப்பதில் சிரமம்.

நீடித்த பலவீனம்  மற்றும் சோர்வு.

இந்த நிலை வளரும் போது பெரிய அளவில் இதன் மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் அதிகரிக்கும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

லிம்போமாக்கள் ஏற்படுகின்ற போது, ​​லிம்போசைட்கள், அதாவது, அந்நிய அச்சுறுத்தலுக்கு எதிரான நோய் எதிர்ப்புக்கு பொறுப்பான வெள்ளை இரத்த அணுக்கள், பல்வேறு காரணங்களால் பெருகி வரும்.

லிம்போசைட்ஸின் அத்தகைய திடீர் வெடிப்பிறகான குறிப்பிட்ட காரணம் இன்னும் அறியப்படவில்லை,மேலும் இதன் நோயறிதலை கண்டறிய ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.சில காரணிகள், அதாவது வயது மற்றும் பாலினம் போன்ற சில காரணிகள் இந்த புற்றுநோயின் அபாயகரமான காரணியாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளன.ஆனால் யாரும் இதை இன்றுவரை உண்மை என நிரூபிக்கவில்லை.

தெரிந்த மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய லிம்போமாவின் ஆபத்து காரணிகளவான, உடல் பருமன், புற்றுநோய்க்காரணிகள், மதுப்பழக்கம், புகைபிடித்தல், கதிர்வீச்சு மற்றும் புகையிலை ஆகியவை ஆகும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

நிணநீர் புற்றுநோயைக் குறிக்கும் அறிகுறிகளின் அடிப்படையில், கட்டுப்பாடற்று வளர்ந்து வரும் செல் வகைகளின் சோதனை  மற்றும்   திசு பரிசோதனை ஆகியவற்றை மருத்துவர் அல்லது ஹெமடோபதோலோஜிஸ்ட் பரிந்துரைப்பார்.

லிம்போமா நோயின் காரணத்தை கண்டறிந்த  பிறகு, மற்ற பரிசோதனைகளான, மார்பக எக்ஸ் ரே, கணிப்பொறி பருவரைவு (சி டி ) அல்லது காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) ஆகியவற்றுடன் இரத்த பரிசோதனை போன்றவை உடலில் பாதிக்கப்பட்ட இடங்களை கண்டறியவும், நோயின் வளர்ச்சி விகிதத்தை அறியவும் செய்யப்படுகிறது.

புற்றுநோய்  நிலையின் அடைப்படையில் அதற்கான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நோய்க்கு ஆரம்ப நிலையில் பொதுவாக அளிக்கப்படும் சிகிச்சை, மருத்துவம் சார் சிகிச்சை மட்டுமே ஆகும்.எனினும், பிற்காலத்தில் ,வேதிமுறை நோய்நீக்கம் மற்றும் கதிவீச்சு சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டன.புற்றுநோய்களான பி-செல்ககளை குறிவைக்கிற ரிட்டுக்ஷிமப் போன்ற மருந்துகள் அத்தகைய நிலைகளில் பயனுள்ளதாக உள்ளன.

அதிக நோயெதிர்ப்பு பற்றாக்குறையுடன் இருக்கும் சிறப்பு நோயாளிகளுக்கு, மருத்துவர்கள்  எலும்பு மஜ்ஜை அல்லது ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதால் அது  புதிய மற்றும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு செல்களை உருவாக்க உதவுகிறது.