To Read this Post , Use Translator for Your language

How to know maintain health post delivery - healthtamil.com
health post delivery
health post delivery
Listen to this article

Maintain health post delivery : தாயின் உடல் நலம் பேண சில பாரம்பரிய சித்த மருந்துகள்

In Tamil Nadu southern districts (India), they used to provide some traditional Siddha medicines to maintain the health of the mother after delivery. Now a days birth happens in modern hospitals and they are reluctant to give medicines. It is incorrect. .

It is everyone’s duty to convey this to our future generations. On the first day after delivery, a small amount of musk should be wrapped in a betel leaf and eaten. It helps to remove the dirt that is obstructed in the uterus and relieves body laxity.

Then, when 2 fingers of turmeric are ground and given as a paste, the ulcers of the uterus will heal quickly. On the 2nd day take 50 grams each of Turmeric, Pepper, Narakumoolam, Suku, Akkakararam and Omam and fry them until they are very hot and eat it after making a birth surana.

On the 3rd day, grind 2 fingers of turmeric and give it as a paste. On the 5th day, take a small piece of papaya and grind it well and wrap it in palm oil.

This medicine removes flatulence. On the 9th day, 5 grams of mustard should be roasted and powdered and wrapped in palm oil. On the 11th day, 25 grams of suku and a small piece of sharana root should be thoroughly soaked and 50 grams of palm jaggery should be sieved.

On the 13th day, 50 grams of peeled garlic should be boiled well in milk and mashed. Then strain 100 grams of palm jaggery and add ground garlic paste, pour in ghee and give it to the pot. This medicine increases breast milk production.

On the 15th day, dry 50 grams of omam well, remove the outer skin and make a skin.

health post delivery

தென்மாவட்டங்களில் மகப்பேறுக்கு பின்பு தாயின் உடல்நலம் பேண சில பாரம்பரிய சித்த மருந்துகளை வழங்கி வந்தனர். இப்போது பிரசவம் நவீன மருத்துவமனைகளில் நிகழ்வதால் மருந்துகளைக் கொடுப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். அது தவறானதாகும். .

இதை நமது வருங்காலச் சந்ததிக்கு எடுத்துரைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். மகப்பேறுக்கு பின்பு முதல்நாளில் சிறிதளவு கஸ்தூரியை வெற்றிலையில் வைத்து மடக்கி சாப்பிட வேண்டும். இது கருப்பையில் தடைபட்ட அழுக்கை நீக்கவும், உடல் தளர்ச்சியைப் போக்கவும் உதவும்.

பின்பு 2 விரலி மஞ்சளை அரைத்து கற்கமாக்கி கொடுக்கும்போது கருப்பையின் புண்கள் விரைவாக ஆறிவிடும். 2ஆம் நாளில் மஞ்சள், மிளகு, நறுக்குமூலம், சுக்கு, அக்கரகாரம், ஓமம் ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து இள வறுப்பாக வறுத்து பிரசவ சூரணம் செய்து சாப்பிட வேண்டும்.

3ஆம் நாளில் 2 விரலி மஞ்சளை அரைத்து கற்கமாக்கி கொடுக்க வேண்டும். 5ஆம் நாளில் சிறிய துண்டுப் பெருங்காயத்தை எடுத்து நன்றாகப் பொரித்து பொடி செய்து பனைவெல்லத்தில் பொதிந்து கொடுக்க வேண்டும்.

இம் மருந்து சூதக வாயுவை நீக்கும். 9ஆம் நாளில் 5 கிராம் கடுகை நன்கு பொரித்து பொடி செய்து பனைவெல்லத்தில் பொதிந்து சாப்பிட வேண்டும்.

11ஆம் நாளில் 25 கிராம் சுக்கு, சிறிய துண்டு சாரணைவேர் ஆகியவற்றை நன்கு சூரணம் செய்து 50 கிராம் பனைவெல்லத்தை பாகாக்கி அதில் சூரணத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி நன்கு களி பதம் வரும் வரை கிண்டிக் கொடுக்க வேண்டும்.

13- நாளில் 50 கிராம் உரித்த வெள்ளைப்பூண்டை பாலில் நன்கு வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு 100 கிராம் பனை வெல்லத்தைப் பாகாக்கி அரைத்த பூண்டு விழுதை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி களி பதத்தில் கிண்டி கொடுக்கவேண்டும். இந்த மருந்து தாய்ப்பாலை அதிகரிக்கும்.

15- நாளில் 50 கிராம் ஓமத்தை நன்கு காயவைத்து மேல்தோல் நீக்கி சூரணம் செய்து 100 கிராம் பனைவெல்லத்தை பாகாக்கி, அதில் ஓமத்தைக் கலந்து நல்லெண்ணெய் ஊற்றி களி பதத்தில் கிண்டிக் கொடுக்க வேண்டும்.

What are benefits in breast milk?

How to know Common Breastfeeding Problems

what Attention of breastfeeding mothers!